மகளை கல்லூரியில் சேர்த்து விட்டு கண்ணீர் விட்டு அழுத தந்தை Twitter
இந்தியா

மகளை கல்லூரியில் சேர்க்கும் போது கதறி அழுத தந்தை - மனதை உருக்கும் வீடியோ!

டெல்லி பல்கலைக்கழகத்தின் மிராண்டா ஹவுஸில் அனுமதி பெற்ற பிரேக்ஷாவை அவரது பெற்றோர் கல்லூரியில் விட செல்கின்றனர்.

Priyadharshini R

பொதுவாக பெண் குழந்தைகள் வீட்டிற்கு செல்ல பிள்ளையாக இருப்பார்கள். கல்வி அல்லது வேலைக்காக வீட்டில் இருந்து வெளியே வரும் பெண் பிள்ளைகளை பிரிந்து பெற்றோர் தவித்து வருவார்கள்.

அப்படி தனது மகளை கல்லூரியில் இறக்கிவிட்டு பிரிய மனமில்லாமல் கண்ணீர் விட்டு அழும் தந்தையின் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தற்போது வைரலான இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பிரேக்ஷா என்ற பயனர் பகிர்ந்துள்ளார்.

டெல்லி பல்கலைக்கழகம்

டெல்லி பல்கலைக்கழகத்தின் மிராண்டா ஹவுஸில் அனுமதி பெற்ற பிரேக்ஷாவை அவரது பெற்றோர் கல்லூரியில் விட செல்கின்றனர்.

அப்போது கல்லூரி வளாகத்தில் சுற்றபார்த்து சென்றுக் கொண்டிருக்கையில் பிரேக்ஷாவின் தந்தை கண்ணீர் விட்டு அழுவதை வீடியோவில் காண முடிகிறது.

இதுகுறித்து அந்த பெண்,

என்னுடைய கனவான மிராண்டா ஹவுஸ் கல்லூரியில் என்னை அவர்கள் இறக்கி விடுகிறார்கள். இது எனது முதல் நாள், எனவே நாங்கள் வளாகத்தை சுற்றி பார்த்துக் கொண்டிருந்தோம், திடீரென்று என் தந்தையின் கண்களில் கண்ணீர் வழிவதை நான் கவனித்தேன்.

அவர் மிகவும் மகிழ்ச்சியில் மூழ்கினார். அதேசமயத்தில் உணர்ச்சிவசப்பட்டவராகவும் காணப்பட்டார்.

இந்த கனவை அடைய நான் செய்ததெல்லாம் இறுதியில் பலனளித்தது. உங்கள் முகத்தில் புன்னகையை பார்க்க நான் எதையும் செய்வேன்! நன்றி அம்மா அப்பா!" என்று பதிவிட்டுள்ளார்.

இணையத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ 7 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் நெகிழ்ந்து அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?