Threads : ட்விட்டர் போலவே புதிய செயலியை தொடங்கிய மெட்டா - வழக்கு தொடர்கிறாரா எலான் மஸ்க்? Twitter
இந்தியா

Threads : ட்விட்டர் போலவே புதிய செயலியை தொடங்கிய மெட்டா - வழக்கு தொடர்கிறாரா எலான் மஸ்க்?

Priyadharshini R

ஒட்டுமொத்த சமூக ஊடகமும் மெட்டாவின் புதிய செயலியான த்ரெட்ஸ் குறித்து பேசி வருகிறது.நேற்று முதல் இந்த த்ரெட்ஸ் செயலி பயன்பாட்டிற்கு வந்தது. ஒரே நாளில் 30 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்கள் இதில் இணைந்துள்ளனர்.

த்ரெட்ஸ் மற்றும் ட்விட்டரை ஒப்பிட்டு வருகின்றனர் இணையவாசிகள். இதற்கு காரணம் ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கிய நாள் முதலே பல மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார்.

புளு டிக்கிற்கான கட்டணம், ஒரு நாளைக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ட்வீட்களை மட்டுமே பார்க்க முடியும் என பல விதிமுறைகளை எலான் மஸ்க் கொண்டு வந்தார். எலான் மஸ்க்கின் இந்த நடவடிக்கையால் ட்விட்டர் பயனர்கள் அதிருப்தி அடைந்தனர்.

இந்த சூழலில் மெட்டா நிறுவனத்தின் சார்பில் த்ரெட்ஸ் என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டது. ட்விட்டர் போன்று இருப்பதால் என்னவோ இணைய உலக சமுதாயமே அதை தங்கள் போன்களில் இன்ஸ்டால் செய்து, இன்ஸ்டா கணக்கின் மூலம் லாக்-இன் செய்தும் விட்டனர்.

இந்த நிலையில் ட்விட்டர் நிறுவனம் சார்பில் குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

”கடந்த சில ஆண்டுகளாகவே மெட்டா நிறுவனம், ட்விட்டரின் முன்னாள் ஊழியர்களை பணியில் சேர்த்து வருகிறது. இந்த ஊழியர்களின் உதவியுடன் ட்விட்டரின் வர்த்தக ரகசியங்கள், மற்ற ரகசிய தகவல்களையும் பயன்படுத்தி வெகு சில நாட்களில் ‘த்ரெட்ஸ்’ உருவாக்கப்பட்டுள்ளது.

அதுவும் ட்விட்டரை போன்றே இருக்கிறது, இதை தெரிந்தே மெட்டா செய்துள்ளது. அதனால் வழக்கு தொடர உள்ளோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை மெட்டா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதற்கிடையில் எலான் மஸ்க்கின் ட்வீட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த ட்வீட்டில் “போட்டி இருப்பது சரி. ஆனால், ஏமாற்றுவது சரியல்ல” என மஸ்க் பதிவிட்டிருக்கிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?