பணம் சேமிக்க முடியவில்லையா? மாதாமாதம் savings செய்ய சூப்பர் டிப்ஸ் canva
இந்தியா

பணம் சேமிக்க முடியவில்லையா? மாதாமாதம் savings செய்ய சூப்பர் டிப்ஸ்

ஃபேன்சியான ரெஸ்டாரண்ட்களுக்கு செல்லவேண்டும், பல ஊர்களுக்கும் நாடுகளுக்கும் டிராவல் செய்யவேண்டும், இதை வாங்க வேண்டும், அதை வாங்கவேண்டும், இதற்கிடையில் வீட்டிற்கும் பணம் அனுப்பவேண்டும் என்ற சிக்கல்களில் உழன்றுக்கொண்டிருக்கிறோம்

Keerthanaa R

சிறு துளியும் பெரு வெள்ளத்தை உருவாக்க உதவும் என்பதை நாம் காலம் காலமாக கேட்டுவருகிறோம்.

நாம் எதையுமே சிறுக சிறுக செய்து வர, பின்னாட்களில் அது நமக்கு பேருதவியாக வந்து நிற்கும் என்பது தான் அதன் பொருள்.

இந்த பழமொழி சிறப்பாக பொருந்துவது பணம் சேமிக்கும் விஷயத்தில் தான். இன்றைய தேதியில் வாங்கும் சம்பளம் அடுத்த மாதம் வரை அதை கட்டிக்காப்பதே பெரும்பாடாக இருக்கிறது.

ஆனால் ஃபேன்சியான ரெஸ்டாரண்ட்களுக்கு செல்லவேண்டும், பல ஊர்களுக்கும் நாடுகளுக்கும் டிராவல் செய்யவேண்டும், இதை வாங்க வேண்டும், அதை வாங்கவேண்டும், இதற்கிடையில் வீட்டிற்கும் பணம் அனுப்பவேண்டும் என்ற சிக்கல்களில் உழன்றுக்கொண்டிருக்கிறோம்.

இதையெல்லாம் சமாளிக்க மாதம் மாதம் சேமிக்க வேண்டும் என்று நினைப்போம். அதற்கான சில டிப்ஸ்

உங்களுக்கான பணம்

தலைப்பை பார்த்து என்னுடைய பணம் எனக்கானது இல்லையா என்ற கேள்வி எழலாம். ஆனால் இதில் நான் சொல்வது அதில்லை.

சம்பளம் கையில் வந்தவுடன், மாதக் கடன்களுக்கு காசை ஒதுக்கும்போது, உங்களுக்கு என்று ஒரு ஷேரை எடுத்துவையுங்கள். அது பெரிய தொகையாக இருக்கவேண்டும் என்று இல்லை.

ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டாயமாக வைக்க, அது பழக்கமாக மாறிவிடும்.

அத பிறகு நமது செலவுகளை கவனிக்கலாம்

லிஸ்ட் போடுங்க

நமது பணத்தை எதற்கு, எவ்வளவு செலவு செய்யவேண்டும் என்ற லிஸ்ட்டை கையில் வைத்திருப்பது நல்லது. இதை மாதாமாதம் செய்யவேண்டும். இது நாம் செய்யும் தேவையற்ற செலவுகளை நமக்கு எடுத்து காட்டுவதோடு, பணம் சேமிக்கவும் உதவும்

கணக்குகளுக்கு பெயர் சூட்டலாம்

அதாவது, நமது சேமிப்பை வைத்திருக்கும் வங்கி கணக்குகளை பெயரிட்டு பிரிக்கலாம். அவசரக் கால சேமிப்பு, டிராவலுக்கான சேமிப்பு என்று பிரித்து வைக்க, அதற்கான பணத்தை மற்றவற்றில் நாம் செலவிடமாட்டோம்.

ரகசிய கணக்கு

உங்கள் பார்ட்னர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் என்று யாரிடமும் சொல்லாமல் ஒரு சேமிப்பு கணக்கை தொடங்குங்கள். அதில் ஒரு தொகையை சேமித்து வையுங்கள். நிரந்தரமாக ஒரே தொகை ஆக அது இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. என்ன அமௌண்ட் கையில் இருக்கிறதோ அதில் ஒரு பங்கை போடலாம்.

இதன் விவரங்களை நீங்கள் நினைவில் வைத்திருந்தாலும், அதில் இருக்கும் பணத்தை பயன்படுத்தவேண்டாம்

தேவைகளை குறைத்து கொள்ளுங்கள்

நாம் ஒரு செலவை செய்யும் போது, இது இப்போது அவசியமா அல்லது ஆசைக்கு வாங்குகிறோமா என்பதை ஆராயுங்கள். அவசியம் இல்லாத செலவாக இருந்தால், அது காத்திருப்பதில் தவறில்லை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?