ரயில் பயணம் பலருக்கு பிடித்தமான போக்குவரத்து. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல ரயில் போக்குவரத்து ஒரு சிறந்த, மிகவும் சிக்கனமான வழிகளில் ஒன்றாகும். இந்திய ரயில்வே பயணிகளுக்கு சிறப்பான வசதிகளை செய்து கொடுக்கிறது.
அது மட்டுமில்லாமல் இந்தியாவில் பல சொகுசு ரயில்களை இந்தியன் ரயில்வே இயக்குகிறது. அதன் மூலம் அதிகமான வருமானத்தை ஈட்டி வருகிறது.
வடக்கு ரயில்வே சமீபத்தில் 2022-23 ஆம் ஆண்டில் அதிக வருவாய் ஈட்டிய 100 ரயில்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் முதல் இடத்தில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் என்ற பெயர் உள்ளது. எவ்வளவு வருமானம் ஈட்டியிருக்கிறது என இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
வடக்கு ரயில்வேயின் அதிக வருவாய் ஈட்டும் ரயில்களின் பட்டியலில் பெங்களூர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் முதல் இடத்தில் உள்ளது.
இந்த ரயில் டெல்லியில் உள்ள ஹஸ்ரத் நிஜாமுதீனில் இருந்து புறப்பட்டு கே.எஸ்.ஆர். பெங்களூரு வரை செல்கிறது. 2022-23 ஆம் ஆண்டில் மட்டும் 5,09,510 பயணிகள் இந்த ரயிலில் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் ரயில்வேக்கு மொத்தம் ரூ.1,76,06,66,339 வருமானம் கிடைத்துள்ளது.
அதிக வருவாய் ஈட்டும் ரயில்களின் பட்டியலில் 12314 சியால்தஹ் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் இரண்டாம் இடத்தில் உள்ளது.
டெல்லி ரயில் நிலையத்திலிருந்து கொல்கத்தாவில் உள்ள சியால்தஹ் ரயில் நிலையம் வரை இயக்கப்படுகிறது.
2022-23 ஆம் ஆண்டில் மொத்தம் 5,09,162 பயணிகள் இதில் பயணம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு இந்த ரயிலில் இருந்து இந்திய ரயில்வே துறைக்கு ரூ.1,28,81,69,274 வருமானம் வந்தது.
அதிக வருவாய் ஈட்டும் ரயில்களின் பட்டியலில் 20504 என்ற எண் கொண்ட திப்ருகார் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் மூன்றாம் இடத்தில் உள்ளது.
டெல்லி - திப்ருகார் இடையே இயக்கப்படும் இந்த ரயில் கடந்த ஆண்டு 4,74,605 பயணிகளை ஏற்றிச் சென்றது. இந்த பயணிகளின் மூலம் ரயில்வேக்கு மொத்தம் ரூ.1,26,29,09,697 வருவாய் கிடைத்துள்ளது.
12952 என்ற எண் கொண்ட மும்பை ராஜ்தானி எக்ஸ்பிரஸ் டெல்லியில் இருந்து மும்பை சென்ட்ரல் வரை இயக்கப்படுகிறது. இது பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது.
2022-23 ஆம் ஆண்டில் மொத்தம் 4,85,794 பயணிகள் இந்த ரயிலில் பயணம் செய்துள்ளனர். இந்த ரயிலின் மூலம் ரயில்வேக்கு ஆண்டு முழுவதும் ரூ.1,22,84,51,554 வருவாய் கிடைத்துள்ளது.
12424 என்ற எண் கொண்ட இந்த ரயில் உத்தர பிரதேசம் மாநிலம் பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் சந்திப்பு, கவுஹாத்தி வழியாக கான்பூருக்குச் செல்கிறது. திப்ருகார் ராஜ்தானி நாட்டில் ஐந்தாவது அதிக வருவாய் ஈட்டும் ரயிலாக உள்ளது.
கடந்த ஆண்டு இந்த ரயிலில் 4,20,215 பயணிகள் தங்கள் பயணத்தை முடித்துள்ளனர். ஒரு வருடத்தில் இந்த ரயிலின் மூலம் ரயில்வேக்கு ரூ.1,16,88,39,769 வருமானம் கிடைத்துள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust