mahua moitra twitter
இந்தியா

விலைவாசி குறித்த விவாதம் : ரூ.1.5 லட்சம் மதிப்பிலான Hand Bag-ஐ மறைத்த எம்.பி |video

Keerthanaa R

விலை வாசி குறித்த விவாதத்தின் போது தனது விலையுயர்ந்த ஹேண்ட் பேகை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா மேஜைக்கு கீழ் மறைக்கும் வீடியோ டிவிட்டரில் வைரலாகி வருகிறது.

ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடந்த மக்களவை கூட்டத்தின் போது திரிணாமுல் காங்கிரஸ் எம் பி மஹுவா மொய்த்ரா தனது லூயி விட்டான் கை பையை எடுத்து மறைத்து வைக்கும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்தியாவில் விலைவாசி அதிகரித்துள்ளது குறித்தும் ஜிஎஸ்டி குறித்தும், மக்களவையில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. நேற்று, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த காகோலி கோஷ் தஸ்திதார் விலையுயர்வைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது எம்.பி மஹுவா மொய்த்ரா தனது ஹேண்ட் பேகை யாரும் கவனிக்காத வண்ணம் மேஜைக்கு கீழே எடுத்து வைத்தார்.

மொய்த்ரா அவ்வளவு நேரம் தன் அருகில் இருந்த பையை ஏன் திடீரென கீழே வைக்கிறார் என்ற கேள்வி இணையவாசிகளிடயே குழப்பத்தை எழுப்ப, உற்று கவனித்தால் தான் புரிகிறது விஷயம்.

மஹுவா மொய்த்ரா வைத்திருந்த ஹேண்ட் பேக் லூயி விட்டான் நிறுவனத்தை சேர்ந்தது. உலகில் மிக விலையுயர்ந்த பிராண்ட்களில் லூயி விட்டானும் ஒன்று. ஐ ஏ என் எஸ் இன் கூற்றுப்படி மொய்த்ரா வைத்திருந்த ஹேண்ட் பேகின் விலை ஒன்றரை லட்சமாம்.

இந்த வீடியோ காட்சி டிவிட்டரில் பரவ, நெட்டிசன்கள் பலரும் மொய்த்ராவின் இந்த நடவடிக்கை குறித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அரசியல் விமர்சகர் அஜித் தத்தா, "விலையுயர்வைக் குறித்த விவாதம் எழ, மொய்த்ராவின் லூயி விட்டான் பேக் மெதுவாக மறைகிறது" என்று பதிவிட்டிருந்தார்.

மேலும் ஒருவர், பணவீக்கத்தைப் பற்றி ஒருவர் அங்கு பேசிக்கொண்டிருக்கும்போது, தனது இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான பையை பயன்படுத்துவது உண்மையில் பாசாங்குத்தனம்" என்று கூறினார்.

இந்த வீடியோ தற்போது டிவிட்டரில் வைரலாகி வருகிறது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?