Uber
Uber Canva
இந்தியா

"அந்த மனசு தான் சார் கடவுள்" - உறக்கமின்றி தவித்த பயணிக்கு உதவிய Uber ஓட்டுநர்

Keerthanaa R

தனது காரில் ஏறிய பயணி, சரியான உறக்கமில்லாமல் இருந்ததை அறிந்துகொண்ட Uber ஓட்டுநர் ஒருவர், பயணி உறங்க வசதிகள் செய்துகொடுத்து, நல்ல உணவகத்தில் அவரை சாப்பிடவும் அழைத்து சென்றுள்ள சம்பவம் பலரது பாராட்டுக்கு பாத்திரமாகி வருகிறது.

கால் டாக்ஸியில் பயணிக்கும்போது ஓட்டுநர்களுடன் நமக்கு ஏற்படும் அனுபவங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. உதாரணமாக,

Rapido ஓட்டும் IMDb 9.2 ரேட்டிங் பெற்ற வெப்சீரிஸ் இயக்குநர் - நெஞ்சை உருக்கும் உண்மை கதை

Rapido: வார இறுதியில் டிரைவராக பணியாற்றும் Software Engineer - என்ன காரணம்?

இங்கும் ஒரு கால் டாக்ஸி டிரைவரின் செயல் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. ஹர்ஷ் ஷர்மா என்ற நபர் டெல்லியில் வாடகை கார் புக் செய்துள்ளார். ஹர்ஷை கூட்டிசெல்ல வந்த ஓட்டுநர் ரவி, ஹர்ஷ் நீண்ட விமான பயணத்தில் சரியாக உறங்கவில்லை என தெரிந்துகொண்டுள்ளார்.

இதனால் தனது காரில், ஹர்ஷ் படுத்து உறங்க வசதிகள் செய்துகொடுத்துள்ளார். மேலும் ஹர்ஷிடம் அவர் "ஏதாவது சாப்பிட்டீர்களா?" என கேட்டபோது ஹர்ஷ் இல்லை எனக் கூறவே, "நீங்கள் உறங்குங்கள் நான் நல்ல உணவகம் வந்ததும் உங்களை எழுப்புகிறேன்" எனக் கூறியுள்ளார்.

ஹர்ஷும் காரில் ஏறியதும் உறங்க, ரவி கூட்டம் அலைமோது ஒரு தென்னிந்திய உணவகத்தில் காரை நிறுத்தியுள்ளார். மேலும் ஹர்ஷை உள்ளே அழைத்துச் என்று உட்காரவைத்து, ஹர்ஷ் சாப்பிடுவதற்கு தென்னிந்திய உணவு வகைகள் சிலவற்றையும் பரிந்துரைத்துள்ளார்.

Taxi

உணவருந்தி முடித்தப்பின், ரவி ஒரு கப் காபி வாங்கிக்கொடுத்து, இது உங்கள் தூக்க கலக்கத்தை சரி செய்ய உதவும் எனவும் கூறியுள்ளார்.

ஹர்ஷ் இந்த இனிமையான அனுபவத்தை தனது LinkedIn பக்கத்தில் பகிர, பலரும் ரவியின் நல்ல மனதை பாராட்டி வருகின்றனர். "ஐம்பது வயது மதிக்கத்தக்க மனிதர் ஒருவர் என் வாழ்வில் நான் மறக்கமுடியாத சுவடு ஒன்றை பதித்துவிட்டு சென்றுள்ளார்" என நெகிழ்ந்திருந்தார் ஹர்ஷ்.

ஒரு பயனர், "நீங்கள் இந்த காலத்தில் இப்படி ஒரு மனிதரை சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சி!... அவருக்கு அவரது நிறுவனம் வேலைக்கான ஊதியத்தை நிச்சயம் கொடுத்துவிடும், உங்களுக்கு உதவிய அவருக்கு திரும்ப நீங்களும் ஏதாவது கைமாறு செய்திருப்பீர்கள் என நம்புகிறேன்" என கமென்ட் செய்திருந்தார்.

அதற்கு ஹர்ஷ், "ஆம்! நாங்கள் சாப்பிட்ட பிறகு அதற்கான பில்லை நான் தான் செலுத்தினேன், 15% டிப்ஸுடன்" என பதிலளித்திருந்தார்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?

Kottukaali: இசை இல்லாத திரைப்படம், புதிய அனுபவத்தைக் கொடுத்ததா? | Social Media Review

Vaazhai : மாரியின் வாழ்க்கைக் கதை, ரசிகர்கள் மனதை நனைத்ததா? | Social Media Review

வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 170 ஆக உயர்வு!

உலகில் அதிகம் தேயிலை உற்பத்தி செய்யும் டாப் 10 நாடுகள் இதுதான் - இந்தியாவின் இடம் என்ன?