குட்டி யானை Pexels
இந்தியா

ஆற்றில் அடித்து செல்லும் குட்டி யானையை காப்பாற்றும் தாய் - இணையத்தை நெகிழ வைத்த வீடியோ

Antony Ajay R

பூச்சி புழுக்களிலிருந்து ஊர்வன, பறப்பன, கடல் உயிரிகள், விலங்குகள், மனிதர்கள் என இயற்கையின் அனைத்து படைப்புகளுக்கும் இருக்கும் ஒற்றுமையான ஒரு குணம் தாயன்பு. ஒரு தாய் தனது குழந்தைக்கு ஆபத்து என்றால் எந்த எல்லைக்கும் செல்வார் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஒரு கோழி கூட தனது குட்டிக்காக பருந்தை விரட்டிருக்கும். மற்றொரு எடுத்துக்காட்டாக இணையத்தில் தற்போது யானையின் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

காட்டில் பிழைத்திருப்பது சாதாரணமான விஷயமல்ல. மான் மட்டுமல்ல சிங்கம் கூட தினசரி பல சவால்களைக் கடந்து தான் உயிர்வாழ்கிறது. அப்படி ஒரு சவாலில் சிக்கிக் கொள்ளும் குட்டி யானையை அதன் தாய் யானை எப்படி காப்பாற்றுகிறது என்பது தான் அந்த வீடியோ.

எப்போதும் யானைகள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு நடந்துகொண்டே இருக்கும். அப்படியான இடப்பெயர்ச்சியின் போது ஒரு யானைக் கூட்டம் ஒரு ஆற்றை கடக்க நேருகிறது.

பெரிய யானைகள் இடுப்பளவு தண்ணீரை எளிதாக கடந்து விட குட்டியானை ஒன்று மாட்டிக்கொள்கிறது. வேகமாக பாயும் ஆற்றில் உறுதியாக நடக்க முடியாத அந்த குட்டி யானை, அதன் தாயிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி தண்ணீரில் செல்கிறது.

கிட்டத்தட்ட குட்டியானை மூழ்கும் சூழலில் குழந்தை ஆபத்தில் இருப்பதை உணர்ந்த தாய் யானை, சட்டென்று அருகில் சென்று தனது குட்டியை தும்பிக்கையால் சுற்றிக் காப்பாத்தியது.

பின்னர் இரண்டும் பாதுகாப்பாக கரையை நோக்கி நடந்தன.

இந்த வீடியோவை பர்வீன் கஸ்வான் என்ற வனத்துறை அதிகாரி தனது ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.

இந்த வீடியோவை கிட்டத்தட்ட 50000 பேர் கண்டுள்ளனர். 2500க்கு மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது.

"தாய் யானை தனது குட்டியைக் காப்பாற்றும் இந்த வீடியோ வடக்கு வங்காளத்தில் உள்ள நக்ரகடா என்னுமிடத்தில் படமாக்கப்பட்டது" என்று பர்வீன் கஸ்வான் தலைபில் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நீலகிரி அருகே ஒரு யானைக்கு z செக்யூரிட்டி கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சுசந்தா நந்தா என்ற வனத்துறை அதிகாரி, ஒரு சாலையில் இரண்டு யானைகள் ஒரு குட்டியானையை தங்கள் கால்களுக்கு நடுவில் நிழலில் வைத்து அழைத்துச் செல்லும் வீடியோவைப் பதிவிட்டு, "என்ன தான் z பாதுகாப்பு இருந்தாலும் தாய் தன் குட்டியை பாதுகாப்பது போல யாராலும் காக்க முடியாது" என பதிவிட்டிருந்தார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?