இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. இப்போதைய இந்திய அணியில் அவர் அதிகபட்ச ரசிகர்களைக் கொண்டுள்ளார்.
ரசிகர்களின் வெளிச்சம் எப்போதுமே கோலி - அனுஷ்கா தம்பதியின் மீது பட்டுக்கொண்டே இருக்கிறது. இது மாதிரியான புகழ்ச்சியை பெரிதும் விரும்பினாலும் பிரபலங்களால் இதனை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ரசிகர்கள் தங்களின் ரசிகத்துவத்தை வெளிப்படுத்த செய்யும் சாகசங்கள் பெரும்பாலும் பிரபலங்களுக்கு மனக்கசப்பையே கொடுக்கின்றன. அப்படி ஒரு சம்பவம் தான் கோலி மற்றும் அனுஷ்கா தம்பதிக்கு நடந்துள்ளது.
கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோவில், ரசிகர் ஒருவர் அவரது அறை முழுவதையும் சுற்றிக்காட்டுகிறார்.
அந்த பதிவில், "ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான வீரரை பார்பதற்கு விரும்புவதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் இந்த வீடியோ என்னை தனியுரிமை குறித்து அச்சுறுத்தியுள்ளது. என்னுடைய சொந்த ஹோட்டல் அறையில் எனக்கு தனியிரிமை இல்லை என்றால் வேறு எங்கு இருக்கும். இந்த மாதிரியான ரசிகத்துவம் என் பிரைவசியை ஆக்கிரமிக்கிறது. தயவு செய்து மக்களின் பிரைவசியை மதியுங்கள். கேளிக்கை பொருளாக பயன்படுத்தாதீர்கள்." என்று கோலி கூறியுள்ளார்.
கோலியைத் தொடர்ந்து அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா அந்த ரசிகருக்கு கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் இதே போல கோலியின் மகள் வாமிகாவின் புகைப்படத்தை ரசிகர்கள் பகிர்ந்த போது தம்பதியினர் சமூக வலைத்தளங்களின் வழியாக ரசிகர்கள் குழந்தையின் புகைப்படத்தை பகிர வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டனர்.
"கொஞ்சம் சுயக்கட்டுப்பாட்டுடன் இருங்கள். இதே போன்று உங்கள் படுக்கை அறையில் நடந்தால் சரியா?" எனக் கேட்டுள்ளார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust