விவேக் அக்னிஹோத்ரி Twitter
இந்தியா

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்பு கேட்ட விவேக் அக்னிஹோத்ரி - கண்டித்த உயர் நீதிமன்றம்

கடந்த 2018ஆம் ஆண்டு, விவேக் அக்னொஹோத்ரி நீதிபதி எஸ் முரளிதர் அவர்கள் பாரபட்சத்தோடு நடந்து கொள்வதாக குற்றம்சாட்டினார்.

NewsSense Editorial Team

“காஷ்மீர் ஃபைல்ஸ்" என்கிற பெயரில் இந்துதுவ கருத்துக்கு ஆதரவான படத்தை வெளியிட்டு ஓரளவுக்கு பொதுவெளியில் தெரிய வந்த விவேக் அக்னிஹோத்ரி என்கிற இந்தி சினிமா இயக்குநர், திங்கட்கிழமை டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

நீதிமன்றத்தை அவமதித்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் விவேக் மன்னிப்பு கோரியது குறிப்பிடத்தகக்கது. விவேக் அக்னிஹோத்ரியின் வழக்கை விசாரித்த நீதிபதி சித்தார்த் மிருதுல் மற்றும் விகாஸ் மஹாஜன் இருவரும் அவருடைய மன்னிப்பை ஏற்றுக் கொண்டனர்.

எதிர்காலத்தில் இது போன்ற விஷயங்களில் எச்சரிக்கையோடு இருக்குமாறு நீதிபதிகள் விவேக் அக்னிஹோத்ரியை எச்சரித்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

காஷ்மீர் ஃபைல்ஸ்: "தவறை நிரூபித்தால் படம் இயக்குவதை விட்டுவிடுகிறேன்" - இயக்குநர் சவால்!

கெளதம் நவ்லாகா

என்ன நடந்தது?

பீமா கோரேகான் வன்முறையில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்த கெளதம் நவ்லாகா என்கிற சமூக செயற்பாட்டாளரை விடுவித்தார் அப்போதைய டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதர்.

அதனைத் தொடர்ந்து, கடந்த 2018ஆம் ஆண்டு, விவேக் அக்னொஹோத்ரி நீதிபதி எஸ் முரளிதர் அவர்கள் பாரபட்சத்தோடு நடந்து கொள்வதாக குற்றம்சாட்டினார்.

தற்போது முரளிதர் அவர்கள் ஒடிஷா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியில் இருக்கிறார்.

விவேக் அக்னொஹோத்ரியின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது.

அந்த வழக்கில் தான் தற்போது விவேக் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு, அதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டு, எச்சரித்து, வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு இருக்கிறார்.

இதே போல, சென்னையைச் சேர்ந்த முன்னணி வலதுசாரி அரசியல் ஆலோசகர், துக்ளக் பத்திரிகை ஆசிரியர், பட்டயக் கணக்காளரான குருமூர்த்தி சுவாமிநாதன் அவர்களும் நீதிபதிக்கு எதிராக ட்விட்டர் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார்.

எனவே, அவர்கள் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால், 2019 அக்டோபர் மாதவாக்கில், குருமூர்த்திக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?