இந்தியாவின் மிக வசீகரமான ரயில் பாதை இது தான் !
இந்தியாவின் மிக வசீகரமான ரயில் பாதை இது தான் ! Twitter
இந்தியா

பெங்களூரு டு உடுப்பி : இந்தியாவின் வசீகரமான ரயில் பாதை இதுதான் - a wow story

Keerthanaa R

பயணங்களை அழகாக்குவதே நம்மை சுற்றியிருக்கும் இயற்கையும் அதன் அளப்பறிய விசித்திரங்களும் தான்.

இதை மனதார கண்டுகளிக்க ரயில் பயணத்தை விட சிறந்த தேர்வு எதுவும் இல்லை என்றே கூறலாம்.

ஜன்னலோர இருக்கையில் தொடங்கி, ரயில் வளைந்து நெளிந்து போகும் நீர்நிலைகள் சூழ்ந்த பாதை, நீண்ட நெடிய பாலங்கள், வெள்ளைப்போர்வை போர்த்திய பனிப்பாறை மலைகள், புதிய மனிதர்களின் அறிமுகம், பத்தடி தூரத்திலிருந்தே நம்மை கட்டியிழுக்கும் உணவின் வாசனை என ரயில் பயணத்தை பற்றி பக்கம் பக்கமாக பேசலாம்.

இந்த அனுபவங்களை பெற நாம் வெளிநாடுகளுக்கு தான் செல்லவேண்டும் என்றில்லை. நம் நாட்டில், நம் ஊர்களிலேயே நாம் பார்த்திராத நிறைய ரயில் பாதைகள் இருக்கின்றன.

அவற்றில், இந்தியாவின் சிறந்த, மிக வசீகரமான ரயில் பாதை இது தான் என்ற பெயரை பெற்றுள்ளது பெங்களூரூ - உடுப்பி ரயில் பாதை.

இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது இந்த இயற்கை எழில் கொஞ்சும் ரயில் பாதை. நார்வேவை சேர்ந்த எரிக் சால்ஹெயிம் என்பவர் இந்த வீடியோவை இரண்டு நாட்களுக்கு முன் பகிர்ந்திருந்தார்.

”இன்க்ரெடிபிள் இந்தியா! இதை விட பசுமையான ரயில் பாதை எங்கேயும் உண்டா? பெங்களூரு - உடுப்பி ரயில் பாதை, சக்லேஷ்பூரில் இருந்து கர்நாடகாவின் குக்கே சுப்ரமணியா வரை.” எனத் தலைப்பிட்டு பகிர்ந்திருந்தார். மேலும் உடுப்பி சென்று வருமாறும் அவர் பரிந்துரைத்திருந்தார்.

இந்த வீடியோ நெட்டிசன்களை கவர்ந்து 80,000 பார்வைகளை பெற்றுள்ளது. தங்களின் பயண அனுபவங்களியும் அவர்கள் கமெண்ட் செக்‌ஷனில் பகிர்ந்து வருகின்றனர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?