Water crisis Pixabay
இந்தியா

ராஜேந்திர சிங், ஷிரிஷ் ஆப்தே: இந்தியாவின் 5 தண்ணீர் போராளிகள் - விரிவான தகவல்

2030 ஆம் ஆண்டிற்குள் சுத்தமான நீர் இருப்பு, முறையான சுகாதாரம் மற்றும் நிலையான நீர் மேலாண்மை ஆகியவற்றை உறுதி செய்வதே தொலைநோக்கு பார்வையாகும். இந்தியாவும் உலகமும் இணைந்து இன்றைய மற்றும் வருங்கால சந்ததியினருக்கான தண்ணீரை மீட்டெடுப்பதற்கும் பாதுகாப்பதற்கும் அதிக தண்ணீர் போராளிகள் தேவை.

Govind

நிதி ஆயோக்கின் அறிக்கையின் படி 2020 ஆம் ஆண்டிலேயே 21 மாநிலங்களில் குடிநீர் பஞ்சம் தலைதூக்கி விட்டது. தண்ணீர்தான் ஒரு நாட்டின் அடிப்படை ஆதாரம். ஆனால் நமது நகரங்களில் பெரும்பாலானவை குடிநீரின்றி தத்தளிக்கிறது. தண்ணீர் தட்டுப்பாட்டுடன், கிடைக்கும் நீரிலேயே 70 சதவீதம் அசுத்தமான நீர் கலந்துதான் வருகிறது. இந்நிலையில் இங்கே மக்களின் அடிப்படை உரிமையான நீருக்காகப் போராடும் போராளிகள் சிலரைப் பார்ப்போம்.

ராஜேந்திர சிங்

ராஜேந்திர சிங் இந்தியாவின் தண்ணீர் மனிதர் என்று அழைக்கப்படுகிறார். இந்தியாவின் கிராமப்புறங்களில் நீரை சேகரிக்க அவர் செய்த முயற்சிகள், பணிகளுக்காகப் பாராட்டப்படுபவர். இயற்கை வளங்களை பாதுகாக்கும் பொருட்டு சமூகத்தில் விழிப்புணர்வு ஊட்டும் நோக்கத்துடன் தருண் பாரத் சங்கம் எனும் இலாப நோக்கமற்ற நிறுவனத்தை நிறுவியவர் ராஜேந்திர சிங்.

இரண்டு பத்தாண்டுகளில் அவர் மக்கள் ஆதரவுடன் கிட்டத்தட்ட 8,600 குளங்களை உருவாக்கியோ மறுசீரமைத்ததோடு, 1000த்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்குத் தண்ணீரை மீண்டும் கொண்டு வரும் கட்டமைப்புகளை உருவாக்கினார். ராஜேந்திர சிங் 2009 இல் நிறுவப்பட்ட தேசிய கங்கை நதிப் படுகை ஆணையத்தின் (NGRBA) நிறுவன உறுப்பினர்களில் ஒருவர் ஆவார்.

ராஜேந்திர சிங்குக்கு 2001 மற்றும் 2008 இல் புகழ்பெற்ற ராமன் மகசய் விருதும், 2015இல் ஸ்டாக்ஹோம் நீர் பரிசு விருதும் வழங்கப்பட்டுள்ளன. இங்கிலாந்தின் புகழ்பெற்ற பத்திரிகையான கார்டியன், பூமியைக் காப்பாற்றக் கூடிய 50 பேர்களில் ஒருவராக ராஜேந்திர சிங்கை சேர்த்திருக்கிறது.

ஆம்லா ரூயா

ஆம்லா ரூயா மும்பையைச் சேர்ந்த நீர் ஆர்வலர் ஆவார். அவர் பானி மாதா (அல்லது "நீர் தாய்") என்று நன்கு அறியப்பட்டவர். அவர் பாரம்பரிய நீர் சேகரிப்பு நுட்பங்களை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளார். ராஜஸ்தானில் 100 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 200 க்கும் மேற்பட்ட தடுப்பு அணைகளைக் கட்டியுள்ளார்.

குறிப்பாக ராஜஸ்தானின் வறட்சி பாதித்த பகுதிகளில் தண்ணீரை சேமிப்பதற்காக நிலையான மற்றும் நிரந்தர தீர்வை உருவாக்கும் நோக்கத்துடன் அவர் ஆகார் அறக்கட்டளையை நிறுவினார்.

இவரது முயற்சியால் மக்களுடன் இணைந்து இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மக்களின் ஆண்டு வருமானம் 300 கோடி ரூபாய்க்கும் மேல் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

ஆம்லாவுக்கு 2011 ஆம் ஆண்டில் சமூக சேவை மற்றும் சமூக மேம்பாடு பிரிவில் லக்ஷ்மிபத் சிங்கானியா - ஐஐஎம் லக்னோ தேசிய தலைமைத்துவ விருது மற்றும் 2018 ஆம் ஆண்டில் இந்தியன் ஐ இன்டர்நேஷனல் மனித உரிமைகள் பார்வையாளர் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

ஆபி சுர்தி

தனது 80 வயதில் டிராப் டெட் பவுண்டேஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு ஆபி சுர்தி தலைமை தாங்குகிறார். இவர் 2007 ஆம் ஆண்டில் நாளிதழ் ஒன்றில் ஒரு கட்டுரையைப் படிக்கிறார். அதில் தண்ணீரைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் தவறான நீர் மேலாண்மை காரணமாக ஏற்பட்டுள்ள வறட்சியின் தீவிரம் இடம் பெற்றிருந்தது. இதன் பிறகே ஆபி சுர்தி தனது நிறுவனத்தை நிறுவுகிறார்.

வீடுகளில் கசியும் தண்ணீர் குழாயிலிருந்து சொட்டும் நீர் ஒவ்வொரு மாதமும் 1000 லிட்டர் வீணாகிறது. இந்த நீர்ப் போராளி தனது முதல் ஆண்டில் 4.14 இலட்சம் லிட்டர் தண்ணீரைச் சேமிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதற்காக தனது அமைப்பின் மூலம் ஒரு பிளம்பரை அமர்த்திக் கொண்டு வீடு வீடாகக் கசிவு குழாய்களை இலவசமாகப் பழுது பார்க்கிறார்.

கிரிக்கெட்டில் ஸ்கோர் எவ்வளவு என்பதன் மூலமே நாம் எண்களின் பட்டியலைப் பார்க்கிறோம். ஆனால் சொட்டும் நீர் எவ்வளவு எண்களில் வீணாகிறது என்று எண்ணி எண்ணி அதைப் பழுது பார்க்கிறார் இந்த தண்ணீர்ப் போராளி. அந்தப் பொறுப்பை தனது தோளில் சுமந்து தனது வட்டாரத்தில் சரி செய்கிறார்.

ஐயப்ப மசகி

முன்பு லார்சன் & டர்போவில் மெக்கானிக்கல் இன்ஜினியராக இருந்த அய்யப்பா இப்போது நீர் பாதுகாப்பு வழக்கறிஞராக உள்ளார். கிராமப்புற வளர்ச்சிக்கு அறிவியலைப் பயன்படுத்த வேண்டும் என்ற அவரது கனவுடன், ஆரம்பத் தோல்விகளுக்குப் பிறகு, நீர் சேமிப்பு, மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர்ப்பாசனம் அல்லாத விவசாய நடைமுறைகளுக்கான முறைகள் மற்றும் நுட்பங்களை வெற்றிகரமாக வகுத்துள்ளார்.

இந்த தண்ணீர்ப் போராளி 13 மாநிலங்களில் நீர் மேலாண்மையை மாற்றியுள்ளார். மற்றும் 11 மாநிலங்களில் 1000 வறண்ட ஆழ்துளை கிணறுகளுக்குப் புத்துயிர் அளிப்பது உட்பட ஆயிரக்கணக்கான பாதுகாப்பு திட்டங்களை உருவாக்கியுள்ளளார். மேலும் நாட்டில் 700 செயற்கை ஏரிகளை உருவாக்கி லிம்கா புக் ஆஃப் வேர்ல்ட் சாதனை படைத்துள்ளார்.

அய்யப்ப மசாகி, நீர் காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். மேலும் நீர் எழுத்தறிவு அறக்கட்டளை மற்றும் மழை நீர் கருத்துகள் பிரைவேட் லிமிடெட் ஆகிய இரண்டு அமைப்புகளை நிறுவி நடத்துகிறார்.

ஷிரிஷ் ஆப்தே

மகாராஷ்டிராவில் உள்ள பண்டாரா மாவட்டத்தின் சிறு நீர்ப்பாசனப் பிரிவில் கண்காணிப்புப் பொறியாளராக பணியாற்றியவர் ஷிரிஷ் ஆப்தே. அப்போது 2008 ஆம் ஆண்டில் நடந்த நீர் பாதுகாப்புப் புரட்சியின் ஒரு பகுதியாக ஆப்தே மாறினார். இரண்டு ஆண்டுகளாக, 300 ஆண்டுகள் பழமையான மல்குஜார் குளத்தை பழுது பார்த்து மீட்டெடுக்கும் தனது முதல் திட்டத்தில் பணியாற்றினார். மல்குஜார் குளங்கள் உள்ளூர் ஜமீன்தார்களான முல்குஜார்களால் உருவாக்கப்பட்டது. பழங்காலத்தில், இந்த சிறு குளங்கள் முக்கிய நீர் ஆதாரமாக செயல்பட்டன. ஆனால் காலப் போக்கில் புறக்கணிப்பு மற்றும் தவறான நிர்வாகத்தால் இவை வறண்டு விட்டன.

ஆப்தேவின் முயற்சியால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, அந்த பகுதியில் விவசாயம் மற்றும் மீன் உற்பத்தி அதிகரித்தது. பண்டாராவில் உள்ள 21 மல்குசாரி குளங்களை மீட்டெடுக்குமாறு இந்தப் போராளி அரசு நிர்வாகத்தை வலியுறுத்தினார்.

ஆப்தேவுக்கு இந்தியா டுடேயின் சஃபாய் விருது, சமூகப் பிரிவில் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு கணிப்பின்படி இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதத்தை நீர் நெருக்கடிகள் காரணமாக 2050க்குள் இழக்கும் என்று கருதப்படுகிறது. இத்தகைய நெருக்கடிகள் முற்றும் காலத்தில் அனைவரும் போற்றத் தக்க இந்த தண்ணீர் போராளிகள் வணக்கத்திற்குரியவர்கள்.

மேற்கண்ட 5 பேரைத் தவிர, வெளியுலகம் அறியாத தண்ணீர் பாதுகாப்பு ஹீரோக்கள் பட்டியலில் கீழ்க்கண்டவர்களும் இடம் பிடித்துள்ளார்கள்.

அவர்கள்:

ஏ ஆர் சிவகுமார்

பஜன்தாஸ் விட்டல் பவார்

லக்ஷ்மன் சிங்

சத்தர் சிங்

எஸ் ராகநாயகி

சுத்தமான நீர் மற்றும் சுகாதாரம் தொடர்பான நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்காக, 2030 ஆம் ஆண்டிற்குள் சுத்தமான நீர் இருப்பு, முறையான சுகாதாரம் மற்றும் நிலையான நீர் மேலாண்மை ஆகியவற்றை உறுதி செய்வதே தொலைநோக்கு பார்வையாகும். இந்தியாவும் உலகமும் இணைந்து இன்றைய மற்றும் வருங்கால சந்ததியினருக்கான தண்ணீரை மீட்டெடுப்பதற்கும் பாதுகாப்பதற்கும் அதிக தண்ணீர் போராளிகள் தேவை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?