வயநாடு பரிதாபங்கள்: பரோட்டா வித் பீஃப் முதல் ஜிப் லைன் ரைடு வரை - ஒரு ஃப்லாப் ட்ரிப்! Twitter
இந்தியா

வயநாடு பரிதாபங்கள்: சாஃப்ட்டான பரோட்டா முதல் ஜிப் லைன் ரைடு வரை - ஒரு ஃப்லாப் ட்ரிப்!

நாங்கள் இருந்த கபினி ஆற்று பகுதி மிகவும் முக்கியமானதாகும். வெயில் காலத்திலும் வற்றாத ஆறு என்பதனால் காட்டிலிருக்கும் புலி, யானை போன்ற விலங்குகளும் இங்கு வந்து செல்லும். நாங்கள் வரும் போதே முதலைகள் இருக்கும் ஜாக்கிரதை என திகிலூட்டி தான் அனுப்பினார்கள்.

Antony Ajay R

சுற்றுலாவை விரும்பும் எவருக்கும் வயநாடு ஒரு பூலோக சொர்க்கமாக இருக்கும். சுற்றிலும் மலைகள், பசுமை, சில்லென்ற காற்று, சுற்றிவரும் மேகங்கள் இவற்றுக்கு மத்தியில் படகு சவாரி, அணை, ஏரிகள் வழியில் வரும் மான்கள், காட்டு யானை எதுவும் இல்லாத ஃப்லாப் வயநாடு ட்ரிப்பாக அமைந்தது எங்களது பயணம்.

சென்னையில் இருந்து வயநாடுக்கு கோழிக்கோடு வரை ரயிலில் சென்று அங்கிருந்து 2மணி நேர பயணத்தில் வயநாட்டை அடையலாம். ஆனால் டிக்கெட் இல்லாததால் மைசூரு சென்று அங்கிருந்து புறப்படும் படி ஆனது.

மைசுரு முதல் வயநாடு செல்லும் பாதை மிகவும் ரம்மியமானது. பந்த்திப்பூர் தேசியபூங்கா வழியாக பேருந்து செல்லும்.

வயநாட்டில் பொதுவாக மக்கள் கல்பேட்டாவில் ஹோட்டல் புக் செய்து தங்குவது வழக்கம். ஆனால் கல்பேட்டா டவுன் சாதாரணமாக இருப்பதனால் கொஞ்சம் வெளியில் உள்ள இடத்தில் தங்கினோம். 

நாங்கள் இருந்த கபினி ஆற்று பகுதி மிகவும் முக்கியமானதாகும். வெயில் காலத்திலும் வற்றாத ஆறு என்பதனால் காட்டிலிருக்கும் புலி, யானை போன்ற விலங்குகளும் இங்கு வந்து செல்லும். நாங்கள் வரும் போதே முதலைகள் இருக்கும் ஜாக்கிரதை என திகிலூட்டி தான் அனுப்பினார்கள்.

வைல்ட் லைஃப் சஃபாரி செல்பவர்களுக்கு கோடைதான் வயநாட்டில் ஏற்ற காலமாக இருக்கும்.

கேரளா சென்றால் மறக்காமல் சாப்பிட வேண்டியது அவர்களின் சாஃப்டான பரோட்டாவும் பீஃப் கறியும். காலை, மதியம், இரவு என எல்லா வேளையிலும் இங்கு பரோட்டா சாப்பிட முடிகிறது.

சாப்பாடெல்லாம் நல்லாத்தான் நடந்தது ஆனால் சுற்றிப்பார்க்க சென்ற கூடல் கடவு அணை மூடப்பட்டிருந்தது. ஒரு ஃப்லாப் ட்ரிப்பில் என்ன தான் சரியா நடக்கும்? அடுத்ததாக ஜிப் லைன் சென்றோம் அங்கே நடந்த கூத்தெல்லாம் வீடியோ பாத்து தெரிஞ்சிக்கங்க…

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?