Weekend Getaways - Budget Places for Short Trips in tamilnadu Twitter
இந்தியா

இந்த வார லாங் வீக் எண்டு விடுமுறைக்கு எங்கே செல்லலாம்? அட்டகாசமான ஸ்பாட்ஸ் இதோ!

Priyadharshini R

இந்த வாரம் சனி, ஞாயிறு கிழமைகளை தொடர்ந்து ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை வருவதால் தொடர் விடுமுறை கிடைக்கிறது. இந்த விடுமுறைகளில் நண்பர்களுடனோ அல்லது குடும்பத்துடனோ இனிமையானதொரு சுற்றுலா செல்லலாம்.

ஆனால் எங்கு செல்வது என்பது பற்றி முடிவெடுக்க முடியவில்லையா? குறைந்த பட்ஜெட்டில் எளிதாக சென்றுவரக்கூடிய பல சுற்றுலா தலங்கள் நம் தமிழ்நாட்டிலேயே, இருக்கின்றன. அந்த இடங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.

பழவேற்காடு ஏரி

இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரி. இது சென்னையில் இருந்து 60 கி.மீ தொலைவில் தமிழக ஆந்திரப்பிரதேச மாநில எல்லையில் அமைந்திருக்கிறது. வடக்கே ஸ்வரணமுகி ஆறும் வட மேற்கே காலாங்கி ஆறும் தெற்கே ஆரணி ஆறும் கூடுதலாக இன்னும் சில ஓடைகளும் இந்த ஏரியினை உருவாக்குகின்றன. ஆற்று நீருக்கும் கடலுக்கும் இடைப்பட்ட பகுதியாக இந்த ஏரி இருக்கிறது.

இதன் அருகே பழமையான தேவாலாயம், டச்சுகாரர்களின் கோட்டை ஆகியவற்றை இங்கு காணலாம் இவை கி.பி 1631 ல் கட்டப்பட்டது என கூறப்படுகின்றது.

பரளிக்காடு

கோவையில் இருந்து 66 கிலோ மீட்டர் தொலைவில் பரளிக்காடு அமைந்துள்ளது.

பரிசல் படகுகள் இங்கு இருக்கும். நீங்கள் பரிசல் படகில் ஏறியவுடன், பில்லூர் அணையிலிருந்து வரும் தண்ணீருக்கு நடுவே உங்கள் அமைதியான படகு சவாரி பரளிக்காடின் கண்கொள்ளாக் காட்சியை உங்களுக்கு விருந்தாக அளிக்கும்.

அதே சமயம் இங்கு உள்ள சூழல் உங்களுக்கு புது அனுபவத்தை கொடுக்கும் , இங்கு மலைவாழ் மக்கள் சமைத்துக் கொடுக்கும் உணவு வகைகள் சுற்றுலாப்பயணிகளுக்கு வழங்கப்படுகிறது. பாரம்பரியமான உணவு வகைகளை இந்த பயணத்தில் நீங்கள் உண்ண முடியும்.

ஆலம்பரை கோட்டை

மாமல்லபுரத்திலிருந்து 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 17ம் நூற்றாண்டில் முகலாயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. பிதாமகன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் இந்தக் கோட்டையில் எடுக்கப்பட்டுள்ளன. 

கோட்டையின் பெரும் பகுதி கடலுக்குள் சென்றுவிட்டாலும் மீதமுள்ள கோட்டைப் பகுதிகளை மக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். இந்த கோட்டை அதிகம் அறியப்படாத சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தக் கோட்டை பார்வையாளர்களை கடந்த காலத்திற்கு அழைத்து செல்லும்.

பிச்சை மூப்பன் வலசை கண்ணாடி படகு சவாரி

தமிழகத்தின் தென்பகுதியில் அமைந்துள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள பவளப்பாறைகல் கண்களையும் மனதையும் கவரும் வகையில் இருக்கும். கடலுக்கு கீழே உள்ள பவளப்பாறைகளை காண கண்ணாடி படகு சவாரி உள்ளது.இதன் மூலம் கடல் வாழ் உயிரினங்களை நீங்கள் ரசிக்கலாம்.

அகத்தியர் அருவி

இந்த அருவிக்குக் காரையார் மற்றும் சேர்வலாறு நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் வந்து கொண்டிருக்கிறது. சுமார் 25 அடி உயரத்தில் இருந்து விழும் இந்த அருவி, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இருக்கிறது.

இந்த அருவியில் ஆண்டு முழுமைக்கும் தண்ணீர் வருவதால், இந்த அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

குருசடை தீவு 

ராமேஸ்வரம் மண்டபம் பகுதியிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் தான் அழகிய குருசடை தீவு அமைந்துள்ளது.

குருசடை தீவு ஏறத்தாழ 66 ஹெக்டேர் பரப்பளவில் விரிந்துள்ளது. ஒரு நாள் பிக்னிக் செல்ல ஆசை இருந்தால் இந்த இடத்திற்கு தாராளமாக சென்று விட்டு வரலாம்.

சுற்றிலும் கடல், நகரத்தின் இரைச்சலில் இருந்து தப்பித்து, ஆரவாரமில்லாத அலை ஓசை, தெளிவான நீர், பவளப்பாறைகள், அரிய கடல் உயிரினங்கள், படகு சவாரி என இந்த இடம் ஒரு நாள் சுற்றுலாவுக்கு இந்த குருசடை சூப்பர் ஸ்பாட் என்றே சொல்லலாம்.

பாலருவி

கேரள மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு சுற்றுலாத் தலம் தான் பாலருவி.

பால் போல வெள்ளை வெளேர் என்று இருப்பதால் இது பாலருவி என்று பெயர்பெற்றது. இவ்வருவியின் நீரானது 300 மீட்டர் உயரத்திலிருந்து வருகிறது.

அருவிக்கு அருகில் அகத்தியருக்கு சிறு கோயிலொன்று உள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?