இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட கற்கால கருவிகள் - உலகம் கண்ட வினோதமான கண்டுபிடிப்புகள் என்ன? Twitter
இந்தியா

உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வினோத புதை படிமங்கள்- இந்தியாவில் என்ன?

Priyadharshini R

உலகின் பல்வேறு இடங்களில் பழங்கால அல்லது நூற்றாண்டு பழமையான பொருட்கள் கண்டெடுத்து வருகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற கலைப்பொருட்கள் பெரும்பாலும் துண்டு துண்டாக, புதைக்கப்பட்டு, புரிந்துகொள்வதற்கே சவாலானதாக இருக்கின்றது.

அப்படி உலகம் கண்ட சில விசித்திரமான கண்டுபிடிப்புகளின் பட்டியலை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

மனித வாழ்விடம் 78,000 ஆண்டுகள்

பங்கா யா சைடி, கென்யாவின் அமைந்துள்ள ஒரு தொல்பொருள் குகைத் தளமாகும். இது கற்காலம் முதல் நவீன காலம் வரை பல்வேறு தொல்பொருள் பதிவுகளை கொண்டுள்ளது.

இந்த குகை, ஒரு நிலையான வெப்பமண்டல காட்டில் அமைந்துள்ளது. பங்கா யா சைடியில் உள்ள குகையில் சுமார் 78,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித வாழ்விடங்களை கண்டறிந்தனர்.

சுமார் 67,000 ஆண்டுகளுக்கு முந்தைய பெரிய கல் கருவிகள் மற்றும் அதிநவீன அம்புக்குறிகள், கத்திகள் ஆகியவை அங்கு கண்டெடுக்கப்பட்டன.

சாண்ட்பி போர்க் படுகொலை

ஸ்வீடனின் ஒலாண்ட் தீவில் உள்ள இந்த தளத்தை ஆய்வு செய்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், திடுக்கிடும் கண்டுபிடிப்புகளால் அதிர்ந்துபோகியிருக்கின்றன.

வீடுகளுக்குள் கிடக்கும் மனித எலும்புக்கூடுகள், கோடாரிகள், வாள்கள் மற்றும் தடி போன்ற ஆயுதங்களுடன் கொடூரமான முறையில் மனிதர்கள் கொல்லப்பட்டிருந்ததையும் கண்டுள்ளனர்.

சுமார் 26 உடல்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கற்கால கருவிகள்

இன்றைய மனிதர்களில் 90% க்கும் அதிகமானோர் 60,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறிய மனிதர்கள் என மரபணு சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன.

தென்னிந்தியாவில், ஆராயப்பட்ட பண்டைய தளங்களில் 200,000 ஆண்டுகளுக்கு முந்தைய கருவிகளை கண்டெடுத்துள்ளனர். இதற்கு ஆப்பிரிக்காவில் இருந்து பல மனித இடம்பெயர்வுகள் தான் காரணம் என ஊகிக்கின்றன.

வேற்றுகிரகவாசியா?

2003 ஆம் ஆண்டில், சிலியின் அட்டகாமா பாலைவனத்தில் 6 அங்குல உயரமுள்ள மம்மி ஒரு நீளமான தலையுடன் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆரம்பத்தில், அதன் அளவு மற்றும் எலும்பு அடர்த்தி ஆறு வயது சிறுவனை ஒத்திருப்பதால், இது வேற்று கிரகத்தில் இருப்பதாக நம்பப்பட்டது.

அதேசமயம் டிஎன்ஏ பகுப்பாய்வில், இது மனிதர் என்பதை வெளிப்படுத்தியது. அவரது டிஎன்ஏவில் வளர்ச்சி தொடர்பான ஏழு மரபணு மாற்றங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். ஆனால் எலும்பு சிதைவுக்கு காரணமான ஒன்றைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?