விநாயகர் சதுர்த்தி : களிமண் சிலை வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் இதுதான்! Twitter
இந்தியா

விநாயகர் சதுர்த்தி : களிமண் சிலை வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் இதுதான்!

Priyadharshini R

இந்துக்களால் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் பண்டிகையில் விநாயகர் சதுர்த்தியும் ஒன்று. யானையின் தலையுடைய விநாயகர் அனைவரின் பிரியமான கடவுளாகப் பார்க்கப்படுகிறார்.

எந்தவொரு மங்களகரமான முயற்சியின் தொடக்கத்திலும் விநாயகர் தென்படுவார். முழுமுதற் கடவுளும் ஈசனின் மகனுமான விநாயகர் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி விழாவானது ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 18 ஆம் தேதி விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

இந்நாளில் விநாயகர் சிலையை வீட்டில் வைத்து சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் செய்துவார்கள். களிமண்ணால் செய்த விநாயகர் சிலையை வாங்கி வரும்போது சில விஷயங்களை கவனிப்பது அவசியம். என்னென்ன என்பதை பார்க்கலாம்.

விநாகயர் சிலை வாங்கும்போது தலையில் க்ரீடத்துடன் இருப்பதையே வாங்கினால் சிறப்பு. க்ரீடம் இல்லாத விநாயகர் சிலை முழுமையாக தோன்றாத வண்ணம் இருக்கும்.

விநாயகர் அமர்ந்த நிலையில் இருக்கும் சிலை வாங்கினால் சிறப்பு. விநாயகர் கூட எலியும் இருந்தால் கூடுதல் சிறப்பு.

விநாயகர் தும்பிக்கை வலதுபுறம் இருப்பதை விட இடதுபுறம் தும்பிக்கை வளைந்தவாறு இருக்கும் சிலை வாங்கினால் நல்லது.

வீட்டிற்குள் சிலையை கொண்டு வரும் வாசலில் ஆராதனை காட்டி , பூஜை செய்து உள்ளே கொண்டு வந்தால் நல்லது.

விநாயகர் சிலையை மூன்று நாள் அல்லது 9 நாள் வைத்து வழிபடப்போகிறீர்கள் எனில் தினமும் பூஜை, ஆராதனைகள் செய்ய வேண்டும். வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?