உங்க வீட்டுல இவ்ளோ இன்ச் டிவி இருக்கா? எத்தனை தூரத்திலிருந்து டிவி பார்க்கணும்? canva (rep)
இந்தியா

உங்க வீட்டுல இவ்ளோ இன்ச் டிவி இருக்கா? எத்தனை தூரத்திலிருந்து டிவி பார்க்கணும்?

Keerthanaa R

இப்போதெல்லாம் எல்லார் வீட்டிலும் டிவி இருக்கிறது. என்னதான் மொபைல் போன்கள் ஆதிக்கம் செலுத்தினாலும், டிவி பார்ப்பதில் இருக்கும் உணர்வு வேறு. ஒரு சாதாரண பிளாக் அண்ட் வைட் பெட்டியாக தொடங்கிய டிவியின் பயணம் தற்போது ஸ்மார்ட் டிவி வரை வந்திருக்கிறது.

இந்த டிவிகள் எல்லாம் பல்வேறு சைஸ்களில் வருகின்றன. 21 இன்ச், 30 இன்ச், 40, 50 70 என பல இன்ச்களில் தொலைக்காட்சிகள் கிடைக்கின்றன.

இந்த டிவிக்களை நாம் தேவைப்பட்டால் ஸ்டாண்ட் ஒன்றில் நிறுத்திவைத்துக்கொள்ளலாம். அல்லது சுவருடன் பொருத்தும் வால் மௌண்ட் டிவிக்களும் உள்ளன.

இந்த ஸ்மார்ட் டிவிக்களில் ஓடிடி தளங்கள் முதல் இணையதள வசதிகள், வீட்டின் மற்ற மின்னணு சாதனங்களை கையாளும் ஃபீச்சர்கள், வீட்டின் பாதுகாப்பு அம்சங்களை கையாளும் வசதிகளும் கூட இன் பில்ட் ஆக வந்துவிட்டன.

ஒரு அட்வான்ஸ் ஸ்மார்ட் டிவி இருந்தால் நாம் தியேட்டருக்கு கூட போகவேண்டாம். பாப்கார்ன் கோல்ட் காஃபி வைத்துக்கொண்டு வீட்டையே தியேட்டராக மாற்றிவிடலாம்.

ஆனால் இந்த டிவியை நாம் பார்க்கும்போது எவ்வளவு தூரத்தில் இருந்து பார்க்கிறோம் என்பதை கவனித்திருப்போமா?

இதனால் அதிக பாதிப்பு கண்களுக்கு தான். கண் பிரச்னை ஏற்படாமல் தவிர்க்க, எத்தனை இன்ச் டிவி வைத்திருந்தால் எவ்வளவு தூரத்தில் இருந்து பார்க்கவேண்டும் என்பதை தெரிந்துகொள்ளலாம்.

  • 30 இன்ச் டிவி இருந்தால் 3 - 4 அடி தூரத்தில் டிவி பார்க்கவேண்டும்

  • 35 இன்ச் டிவி இருந்தால் 3.5 - 4.8 அடி தூரத்தில் தான் டிவி பார்க்கவேண்டும்

  • 40 இன்ச் டிவி இருந்தால் 3.5 - 5 அடி தூரம் மெயிண்டெயின் செய்யவேண்டும்

  • 45 இன்ச் டிவிக்கு 3.5 முதல் 5.5 அடி இருக்கலாம்

  • 50 இன்ச் டிவி இருந்தால் 4.5 முதல் 6 அடி தூரமும், 60 இன்ச் இருந்தால் ஐந்து முதல் ஏழரை அடி தூரமும் இருக்கவேண்டியது அவசியமாகிறது

  • 80 இன்ச் டிவி வைத்திருந்தால், 6 முதல் 10 தூரம் இருக்கவேண்டும்.

தூரம் என்பது எவ்வளவு முக்கியமோ, நாம் டிவி பார்க்கும்போது கண்பார்வையும் மையமாக நேராக இருக்கவேண்டும்.

டிவிக்கு பக்கத்திலேயே உட்கார்ந்து கழுத்தை மேலே தூக்கி வலி வந்தது கூட தெரியாமல் வாய்பிளந்து எல்லாம் பார்ப்போமே? ஆனால் உண்மையில் இதனால் உடல்நல பாதிப்புகள் ஏற்படும்.

நீண்ட நேரம் அண்ணார்ந்து பார்ப்பதால் கழுத்து மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்படுகிறது. நம்மை அறியாமல் கூன் போட்டு உட்காருவோம். வெகு நேரம் ஒரே இடத்தில் அசையாமல் உட்கார்ந்திருப்போம்.

டிவி பார்த்துக்கொண்டே என்ன உணவு சாப்பிடுகிறோம் என்று கூட தெரியாமல் இருக்கும். இதனால் உடல் பருமனும் கூடும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?