Indian Railways: ரயில் பாதைகளில் இருக்கும் இந்த குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்? twitter
இந்தியா

Indian Railways: ரயில் பாதைகளில் இருக்கும் இந்த குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்?

இந்த குறியீடுகளை லோகோ பைலட்டுகள், அதாவது ரயில் ஓட்டுநர்கள் கவனித்தால், அவர்களுக்கு அந்த சிக்னல் தெளிவாக இருளில் தெரியவேண்டும் என்பதற்காக இந்த நிறத்தில் பலகைகள் வைக்கப்பட்டிருக்கும்.

Keerthanaa R

பயணங்களில் அற்புதமான அனுபவத்தை கொடுக்கவல்லது ரயில் பயணக்கள் தான். இயற்கையுடன் ஒன்றி நம்மை கூட்டிச் செல்லும் இந்த பயணங்கள் நமக்கு நிறைய விஷயங்களை கற்றுத் தருகிறது.

அதில், ரயில்கள் இயக்கப்படும் விதம் தொடங்கி, அதன் குறியீடுகள், அவை சென்று வருகிற வழித்தடங்கள் என அவற்றைக் குறித்த தகவல்களையும் நாம் தெரிந்துகொள்கிறோம்.

இந்த பதிவிலும் ரயில்வேவை சார்ந்த சில குறியீடுகளின் பொருள் என்ன என்பதை தான் பார்க்கவுள்ளோம்

நாம் நெடுந்தூரம் ரயிலில் பயணிக்கும்போது, W/L, C/FA ஆகிய குறியீடுகளை கவனித்திருப்போம். இவை மஞ்சள் நிற போர்டுகளில் கருப்பு நிறத்தில் எழுதப்பட்டிருக்கும்.

இந்த குறியீடுகளை லோகோ பைலட்டுகள், அதாவது ரயில் ஓட்டுநர்கள் கவனித்தால், அவர்களுக்கு அந்த சிக்னல் தெளிவாக இருளில் தெரியவேண்டும் என்பதற்காக இந்த நிறத்தில் பலகைகள் வைக்கப்பட்டிருக்கும்.

ரயில்கள், ரயில்வே கிராசிங் பகுதிகளை கடக்கும் போது ஹாரன் அடிக்கவேண்டும் என்பதை குறிக்கவே இந்த பதாகைகள் வைக்கப்பட்டிருக்கின்றன

W/L என்பதன் அர்த்தம், Whistle For Level Crossing எனப்படுகிறது. C/FA என்பது, இதே செய்தியை சொல்லும் இந்தி மொழி எழுத்துகளின் சுருக்கமாகும்.

இந்த குறியீடுகள் கொண்ட பதாகைகள், ஆளில்லா கடவுப்பாதைகள் (லெவல் கிராசிங்கை) குறிக்கின்றன. ஆட்கள் இல்லாத கிராசிங்கை ரயில் அடைவதற்கு 250 மீட்டர் முன்னரே இந்த போர்டுகள் வைக்கப்பட்டிருக்கும்.

இதை தவிர, W/B என்ற குறியீடும் இருக்கும். இதன் விரிவாக்கம் Whistle Bridge. ரயில் செல்லும் பாதையில், சிறிது தூரத்தில் பாலம் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட இந்த பலகை வைக்கப்பட்டிருக்கும். இதை பார்த்து லோகோ பைலட்டுகள் மெதுவாக ரயிலை இயக்குவார்கள்.

அடுத்ததாக T/P, T/G என்ற குறியீடு இருக்கும். இவை ரயிலினை வேகமாக இயக்குவதற்கான பகுதி முடிந்துவிட்டது, மிதமான வேகத்தில் ரயிலை இயக்கவேண்டும் என்பதை சுட்டிக்காட்டும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?