What Is The Mystery Behind No Doors Or Locks In This Village In India? Twitter
இந்தியா

300 ஆண்டுகளாக கதவுகளே இல்லாத வீடுகள் - இந்திய கிராமத்தின் பின்னணி தெரியுமா?

இந்த கிராமத்தில் உள்ள வீடு, அலுவலகம், கோவில், மண்டபம், ஏன் வங்கிகளுக்கு கூட கதவுகள் இல்லையாம். இப்படி ஒரு கிராமமா? எதாவது கொள்ளை போனால் என்ன ஆவது ? என்ன சார் சொல்றீங்க என்று உங்களது மைண்ட் வாயை புரிந்து கொள்ள முடிகிறது.

Priyadharshini R

பொதுவாக நம்மில் பலர் வீட்டை விட்டு வெளியே செல்லும் முன்பு பூட்டிய கதவுகளை ஒருமுறைக்கு இரண்டு முறை இழுத்து பார்ப்போம், சரியாக பூட்டப்பட்டுள்ளதா? என்று

ஆனால் இந்தியாவில் இருக்கும் ஒரு கிராமத்தில் எந்த கட்டிடத்திற்கும் கதவுகளோ பூட்டுகளோ கிடையாதாம், கேட்கவே ஆச்சரியமான இருக்குறதா? என்ன காரணம் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.

மகாராஷ்டிராவில் உள்ள ஷனி ஷிங்னாபூர் என்ற கிராமத்தில் இருக்கும் எந்த கட்டிடத்திற்கும் கதவுகள் கிடையாது.

இந்த கிராமத்தில் உள்ள வீடு, அலுவலகம், கோவில், மண்டபம், ஏன் வங்கிகளுக்கு கூட கதவுகள் இல்லையாம்

இப்படி ஒரு கிராமமா? எதாவது கொள்ளை போனால் என்ன ஆவது ? என்ன சார் சொல்றீங்க என்று உங்களது மைண்ட் வாயை புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் இந்த கிராமத்தில் அப்படி ஒரு திருட்டு சம்பவம் கூட நடப்பதே இல்லையாம்.

எப்போதுமே வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்லும் போது கடவுள் மீது பாரத்தை போட்டு விட்டு சொல்வோம்.

ஆனால் ஷனி ஷிங்னாபூர் மக்கள் எப்போதும் அதை கடவுள் கைகளில் விட்டுவிட்டு நிம்மதியாக வாழ்கிறார்கள்.

வீட்டில் வைத்திருக்கும் நகையை பத்திரப்படுத்த அவர்கள் பதற்றம் ஆகாமல் இருக்க ஒரு புராணக் கதையை நம்புகின்றனர்.

300 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஊரில் பனஸ்னலா நதி பெருக்கெடுத்து வெள்ளமென ஓடியுள்ளது. அப்போது அதில் பெரிய கருப்பான கல் ஒன்று தென்பட்டுள்ளது.

அன்றைய இரவே ஊர்த்தலைவர் கனவில் சனி பகவான் தோன்றி அந்த கருங்கல் தான் என் சிலை. அதை வைத்து வழிபடுங்கள்.

நான் உங்கள் ஊரை காப்பாற்றுகிறேன். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை, என்னை கூரை வைத்த கோவிலில் வைக்க கூடாது. கதவுகள் வைத்து என்னை அடைக்க கூடாது. விசாலமாக திறந்து வையுங்கள். உங்களின் பாதுகாப்பை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

அன்றில் இருந்து ஊரின் நடுவே அந்த சனிபகவான் சிலைக்கு பூஜைகள் நடத்தப்படுகிறது. அதேபோல அந்த கிராமத்து மக்களும் தங்கள் வீடுகளில் இருந்த கதவுகளை எடுத்துவிட்டனர்.

ஷனி ஷிங்னாபூரில் யுனைடெட் கமர்ஷியல் வங்கி 2011 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் "பூட்டு இல்லாத" கிளையைத் திறந்தது.

வழக்கமாக இருக்கும் கிரில் கேட்டுகள் போல இல்லாமால் கிராம மக்களின் நம்பிக்கைகளை மதித்து, அதே நேரம் பாதுகாப்பிற்காக ஒரு கண்ணுக்குத் தெரியாத ரிமோட் கண்ட்ரோல் மின்காந்த பூட்டையும் நிறுவியது.

அதன் பின்னர் 2015 இல் தான் இங்கு முதல் காவல் நிலையமே இங்கு நிறுவப்பட்டது. ஆனால் இன்று வரை இந்த காவல் நிலையத்தில் ஒரு குற்ற நிகழ்வு கூட பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் கூட திருட்டு நிகழ்வுகள் நடைபெற்றதாக தகவல்கள் பரவி வந்த நிலையில் இந்த கிராமத்து மக்கள் அதை ஏற்கவில்லை. இன்றும் கதவுகள் இல்லாமல் தான் இந்த கிராமம் உள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?