பயணம்

Twitter

இந்தியா

வெளிநாட்டுக்கு Bike Ride செல்ல என்ன செய்ய வேண்டும்? எங்கே அனுமதி பெற வேண்டும்? | Hangout

Antony Ajay R

சுற்றுலா என்றால் குடும்பத்துடன் கோவிலுக்கு செல்வது, பள்ளி கல்லூரியில் இருந்து அழைத்து செல்வது அதிகபட்சமாக நண்பர்களுடன் ஊட்டி பக்கம் சென்று இரண்டு நாட்கள் தங்கி வருவது என்பதையெல்லாம் தாண்டி தற்போது சுற்றுலாவுக்கான இலக்கணம் முற்றிலுமாக மாறி வருகிறது.

டூர் செல்வது என்ஜாய் செய்வதற்காக என்பவர்கள் சிலர், நிறைய இடங்களை எக்ஸ்ப்ளோர் செய்யவேண்டும் என்பவர்கள் சிலர், நிறைய அழகான இடங்களுக்கு ரைடு போனும்டா எனக் கூறும் ரைடர்கள் சிலர். சமீபகாலமாக இளைஞர்களுக்கு ரைட் செல்லும் பழக்கம் அதிகரித்திருக்கிறது. கன்னியாக்குமரி டூ லடாக் ரைடு, ஆல் இந்தியா ரைடு, சவுத் இந்தியா என பிளான் செய்து பல சுற்றுலா தளங்களைக் காண்பது ரைடுகளின் நோக்கமாக இருக்கும். இந்த ரைடுகள் ஒரு படி முன்னேறி தற்போது பைக் மார்கமாகவே அண்டை நாடுகளுக்கும் செல்லும் ஆசை பைக்கர்களை தொற்றியுள்ளது.

பயணம்

நாடு விட்டு நாடு பைக் அல்லது சைக்கிளில் செல்வது பல காலமாக நடைமுறையில் இருப்பது தான். ஆனால் அதற்கு உரிய அனுமதிகளைப் பெற வேண்டும். ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு, ஒருவர் தன்னுடைய சொந்த வாகனத்தில் பயணிக்க வேண்டும் என்றால் அதற்குப் பல அனுமதிகளைப் பெற வேண்டும். ஒரு தனி மனிதனுக்கு எப்படி பாஸ்போர்ட் இருக்கிறதோ, அதே போல், அந்த வாகனத்திற்கும் ஒரு பாஸ்போர்ட் இருக்கிறது. அதன் பெயர் CARNET DE PASSAGE. இந்தியாவைப் பொறுத்தவரை, Federation of Indian Automobile Associations என்ற அமைப்பு தான் இந்த அனுமதியைத் தர முடியும். இந்த அனுமதியைப் பெற சில கட்டுப்பாடுகளும் உண்டு.

அந்த குறிப்பிட்ட வாகனத்தை ஓட்டுபவரின் பாஸ்போர்ட்டில், அவர் கடந்து செல்லக்கூடிய நாடுகளின் விசாவை அச்சடிக்க, 20 காலி பக்கங்கள் தேவை என்பதில் தொடங்கி, அவர் எந்த நாடுகளுக்குச் செல்கிறாரோ அங்குச் செல்லுபடியாகும் வகையில், சர்வதேச ஓட்டுநர் உரிமம், காப்பீடு போன்றவை கண்டிப்பாக இருக்க வேண்டும். இந்த CARNET DE PASSAGEஐ, TRIP TICKET என்று அழைக்கிறார்கள். இதனைப் பெற வேண்டும் என்றால், அந்த குறிப்பிட்ட வாகனத்தின் சந்தை மதிப்பு என்னவோ, அது போல் 200 விழுக்காடு தொகையை டெபாசிட்டாக கொடுக்க வேண்டும். இந்த டெபாசிட், வங்கி வரைவோலையாகவோ, காசோலையாகவோ அல்லது வங்கி உத்தரவாதமாகவோ வழங்கலாம்.

பயணம்

200 விழுக்காடு தொகையை முன்பணமாக வாங்குவதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. இந்த TRIP TICKETன் கால அளவு ஒரு வருடம் என்று கொடுக்கப்பட்டு இருந்தால், அந்த ஒரு ஆண்டுக்குள், மீண்டும் அந்த வாகனம் இந்தியாவிற்குள் வந்து விட வேண்டும். இல்லை என்றால், அந்த வாகனத்தை, இந்தியாவிலிருந்து ஒரு நாடு இறக்குமதி செய்து கொண்டதாகக் கணக்கில் கொள்ளப்படும்.

அப்படி இறக்குமதி செய்யப்பட்டதாகக் கணக்கில் கொள்ளப்படும் பட்சத்தில், அதற்கான இறக்குமதி வரியாக ட்ரிப் டிக்கெட் எடுத்தவர் செலுத்திய டெப்பாசிட் தொகையைப் பயன்படுத்திக் கொள்வார்கள். அந்த வாகனம் கடைசியாக எந்த நாட்டில் பயணித்ததோ, அந்த குறிப்பிட்ட நாட்டிற்கு அந்த வரி தொகையைச் செலுத்திவிடுவார்கள். இந்த TRIP TICKETஐ இந்தியாவில் பெறாமல் சென்றுவிட்டால், ஒவ்வொரு நாட்டின் எல்லையிலும், ஒரு குறிப்பிட்ட தொகையை முன்பணமாகச் செலுத்திவிட்டுச் செல்ல வேண்டும். அந்த பணத்தை மீண்டும் பெறுவதற்கு நீண்ட காலம் ஆகும். இந்த சிக்கலைத் தவிர்க்கத் தான், எந்த நாட்டிலிருந்து செல்கிறோமோ, அந்த நாட்டிலேயே ஒரு குறிப்பிட்ட தொகையை முன்பணமாகச் செலுத்திவிட்டு, சுற்றுலாவை முடித்த பின்னர், வாகனத்தைக் காண்பித்து, செலுத்திய முன்பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

சாலை மார்க்கமாக நாடுகளைக் கடக்க பைக்-ஐத் தவிர வேறு வழியும் உண்டு அது, ரயில் அல்லது பஸ்ஸில் பயணிப்பது. ஆனால் அது அதிக காஸ்ட்லியாக இருக்கும். இந்தியாவிலிருந்து லண்டன் வரை 20000 கிலோ மீட்டர் பஸ்ஸில் பயணிக்க 23,10,000 ரூபாய் டிக்கெட் விலையாம்.

இனி இந்த அனுமதிகளை வாங்கிக்கொண்டு தயக்கமில்லாம கிளம்புங்க. ரைட்.. ரைட்…

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?