ஹேர்பின் முதல் ஆணுறை வரை: 1 ரூபாயில் என்னென்ன வாங்கலாம்? - சுவாரஸ்ய தகவல்கள்! Twitter
இந்தியா

ஹேர்பின் முதல் ஆணுறை வரை: 1 ரூபாயில் என்னென்ன வாங்கலாம்? - சுவாரஸ்ய தகவல்கள்!

"பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன், புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன்" எனப் பாடுவது மட்டுமல்லாமல் ஒரு ரூபாயை வைத்துப் பல விஷயங்களை நம்மால் செய்ய முடியும்.

Antony Ajay R

ஒரு ரூபாயை வைத்து சிவாஜி படத்தில் வரும் ரஜினி மாதிரி ஸ்கூல், காலேஜ், ஹாஸ்பிடல் எல்லாம் நடத்த முடியாது.
ஆனால் இன்றும் இந்தியாவில் ஒரு ரூபயை வைத்து நமக்கு தேவையான பல பொருட்களை வாங்க முடியும்.

25, 50 பைசாக்கள் எல்லாம் செல்லாமல் போனதால் ஒரு ரூபாயில் தான் ரூபாய் கணக்கே தொடங்குகிறது. இந்த ஒரு ரூபாயை நாம் சாதாரணமாக நினைத்துவிடக் கூடாது.

ஒரு ரூபாயை வைத்து "பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன், புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன்" எனப் பாடுவது மட்டுமல்லாமல் பல விஷயங்களை நம்மால் செய்ய முடியும்.

மேங்கோ பைட் : சிறுவயதிலிருந்து நமக்கு விருப்பமானதாக இருக்கும் மேங்கோ பைட் மிட்டாயை 1 ரூபாய்க்கு வாங்கலாம். எக்லர்ஸ் போன்ற சாக்லேட்களும் சில்லரைக்காக கொடுக்கப்படுகின்றன. நாக்கில் பட்டவுடன் கரைந்துவிடும் ஜெல்லிமிட்டாயையும், மூளையை அமைதிப்படுத்தும் சுவிங்கம்மையும் சேர்த்துக்கொள்ளலாம்.

ஹேர் பின்: முடியில் குத்திக்கொள்ளும் இந்த பின் அளவில் சிறியது என்றாலும் பெரிதும் உதவக் கூடியதாக இருக்கும்.

எடைப்பார்த்தல்: ரயில் நிலையங்களில் இன்றும் 1 ரூபாய்க்கு எடைப்பார்க்கும் கருவி இருக்கிறது. சில இடங்களில் 2 ரூபாய், 5 ரூபாய் என வசூலிக்கப்படுகிறது.


இட்லி: இது தமிழ்நாட்டில் மட்டும் ஸ்பெஷல்! அம்மா உணவகத்தில் ஒரு ரூபாய்க்கு இட்லி கிடைக்கும்.

தீப்பெட்டி: மனித வரலாற்றைத் தொடக்கிவைத்த நெருப்பை உருவாக்கும் தீப்பெட்டிகள் ஒரு ரூபாய்தான்!

மருந்து: ஜெலுசில் மாத்திரை ஒரு ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நெஞ்செரிச்சல், அசிடிட்டி மற்றும் வயிற்று வலிக்கு ஒரு ரூபாயில் தீர்வு.

ஷாம்பு: வெறும் ஒரு ரூபாய் தான், நம் அழகை 2 மடங்காக்கிவிடும். ஆரோக்கியமான முடியும் கிடைக்கும்.

சலவைத்தூள்: ஷாம்பு போலவே சிறிய ஷாசேக்களில் சலைவைத் தூள் வாங்கினால் 1 ரூபாய்தான். நாம் சுத்தமான உடைகளை அணிய நமக்கு 1 ரூபாய் போதும்!


ரப்பர் பேண்ட்: நம் தினசரி வாழ்க்கையில் பல வகைகளில் உதவக் கூடிய ஒன்று ரப்பர் பேண்ட்கள். ஒரு ரூபாய்க்கு ஒன்றுக்கும் மேற்பட்ட ரப்பர் பேண்ட்கள் கிடைக்கும். பள்ளி மாணவர்கள் அழிக்கும் ரப்பரை ஒரு ரூபாய்க்கு வாங்க முடியும்.

ஆணுறை: தேசிய ஏய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு 3 ரூபாய்க்கு 5 ஆணுறைகளை வழங்குகிறது. அதாவது ஒரு ரூபாய்க்கு குறைவான விலையில் ஆணுறைகள் கிடைக்கிறது.

பொட்டு: ஷாம்பு போலவே ஒரு ரூபாயில் நம் அழகை அதிகரிக்கலாம். லட்சக்கணக்கில் செலவெல்லாம் செய்ய வேண்டாம் நெற்றிவகுடில் ஒரு பொட்டு வைத்தாளே திருமணம் ஆனவர் போல தெரிவீர்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?