Rudaali: பணம் வாங்கி கொண்டு இறுதிசடங்கில் அழும் பெண்கள் - கண்ணீரின் விலை என்ன? | Explainer ட்விட்டர
இந்தியா

Rudaali: பணம் வாங்கி கொண்டு இறுதிசடங்கில் அழும் பெண்கள் - கண்ணீரின் விலை என்ன? | Explainer

இவர்களின் கண்ணீர் கன்னத்தை கூட தாண்டாது! அவர்களுக்கு பதிலாக நன்றாக ஓலமிட்டு அழுக பெண்கள் கூட்டம் நியமிக்கப்படுகிறது.

Keerthanaa R

நம் வீடுகளில் ஒருவர் இறந்துவிட்டால், அந்த பிரிவினை வெளிப்படுத்தும் உணர்வு அழுகை தான். நம்முடன் அந்த நபர் எந்த அளவுக்கு நெருக்கமாக இருக்கிறார் என்பது பொறுத்து நமது அழுகையின் ஆழம் மாறலாம்.

சிலர் அழுகாமல் இறுக்கமாக இருப்பார்கள். சிலருக்கு அழுபவரை பார்த்தாலே அழுகை வந்துவிடும்.

ஆனால் இது மாதிரியான இரங்கல் வீடுகளில் ஒரு பெண்மணியோ ஒரு குழுவான பெண்களோ மிக அதிகமாக அழுதுகொண்டிருப்பார்கள்.

இவர்களுக்கும் இறந்தவரின் குடும்பத்திற்கும் எந்த தொடர்பும் இருக்காது. இவர்களெல்லாம் பணத்திற்காக அழ நியமிக்கப்பட்ட professional mourners!

எகிப்து, தெற்கு ஆசிய நாடுகள், ரோம், கிரேக்கம் போன்ற நாடுகளில் இது மாதிரியாக பணத்திற்காக அழுவது வழக்கத்தில் இருந்துள்ளது.

ஏன் இது மாதிரியாக பணம் கொடுத்து ஒருவரை அழ அழைக்கின்றனர்?

அல்லது பணம் வாங்கிக்கொண்டு இவர்கள் ஏன் அழுகின்றனர்?

இந்த பதிவில்...

பொதுவாக ஒருவர் உயிரிழந்துவிட்டால், அவரது இறுதிச் சடங்கிற்கு, அல்லது குடும்பத்தினரை துக்கம் விசாரிக்க வரும் கூட்டத்தை வைத்து தான் அந்த மனிதர் நல்லவர், பிரபலமானவர் என்பதை சமூகம் கணிக்கிறது.

அதனால், இறந்தவர்களின் வீடுகளில் அழ இந்த தொழில்முறை துக்கம் அனுசரிப்பவர்கள் வரவழைக்கப்படுகிறார்கள். எவ்வளவு நாட்களுக்கு, எவ்வளவு சத்தமாக இவர்கள் அழுகிறார்களோ, இறந்தவருக்கு அவ்வளவு சொந்தம் இருப்பதாக நினைக்கிறார்கள்

ஆனால் இங்கு இதற்குள் இன்னுமொரு காரணமும் ஒளிந்திருக்கிறது.

பெரிய வீடுகளில் வாழும் மக்கள், குறிப்பாக பெண்கள் அழுவதை குடும்ப கௌரவத்துக்கு இழுக்காகப் பார்க்கின்றனர். இதனால், இவர்கள் மனம் விட்டு கத்தி அழ அனுமதிக்கப்படுவதில்லை.

இவர்களின் கண்ணீர் கன்னத்தை கூட தாண்டாது! அவர்களுக்கு பதிலாக நன்றாக ஓலமிட்டு அழுக கீழ் சாதியினராக கருதப்படும் பெண்கள் கூட்டம் நியமிக்கப்படுகிறது.

இந்தியாவில் ராஜஸ்தான் பகுதியில், ருடாலீஸ் எனப்படும் ஒரு பெண்கள் கூட்டம் இருக்கிறது. இவர்கள் தான் அந்த ஊரில் வாழும் professional mourners.

திருமணமாகி செல்லும் ‘மேல் சாதி’ பெண்களுடன் இவர்கள் அனுப்பிவைக்கப்படுகிறார்கள் என்றும் ஒரு கூற்று இருக்கிறது.

இவர்கள் எவ்வளவு அதிகமான நாட்களுக்கு அழுகிறார்களோ, அத்தனை செல்வாக்குடையவர் இறந்தவர்.

இப்படி வந்து மாரிலும் தலையிலும் அடித்துக்கொண்டும், தரையில் விழுந்து உருண்டும் அழும் இவர்களுக்கு 5 முதல் 6 ரூபாய் தான் கட்டணமாக வழங்கப்படுகிறது என்று தகவல்கள் கூறுகின்றன.

இவர்களுக்கு உணவும், பழைய துணிகளும், வழங்கப்படுகிறது.

இந்த ருடாலி பெண்களை அந்த ஊரின் தாகூர் (தலைவர்) தான் கவனித்துக்கொள்கிறார். அவர்களுக்கு எல்லா விதத்திலும் இந்த பெண்கள் சேவைகள் செய்ய வேண்டும் என்பது சொல்லப்படாத விதி.

இந்த ருடாலி பெண்கள் யமனுக்கு உகந்ததாக கருதப்படும் கருப்பு நிற உடைகளை மட்டுமே அணிகின்றனர்.

இவர்களுக்கு திருமணம் செய்துகொள்ள, தங்களுக்கென்று குடும்பத்துடன் வாழ அனுமதியில்லை. குடும்பம் குழந்தைகள் என்று வந்துவிட்டால் இவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி வந்துவிடும், இறுதிச் சடங்கில் மனம் விட்டு அழ மாட்டார்கள் என்பதால் இந்த நிபந்தனை.

அதையும் மீறி இவர்களுக்கு குழந்தை பிறந்தால், அது திருமணம் மீறிய உறவில் பிறந்ததாக தான் இருக்கிறது. அந்த குழந்தை ஆணாக இருந்தால் பிழைக்கும். பெண் குழந்தையாக இருக்கும் பட்சத்தில் அதனையும், அவர்களின் தாய்மார்களை போல இந்த தொழிலுக்கு தள்ளிவிடுகின்றனர்

இந்த குழுக்களில் இருப்பவர்கள் பெரும்பாலும் பெண்களாகவே இருக்கின்றனர். குறிப்பாக எகிப்து போன்ற நாடுகளில் பெண்கள் மட்டுமே இந்த பணியை செய்யவேண்டும்.

சீனா, எகிப்து போன்ற நாடுகளில் எல்லாம் இந்த இறப்பும், அதனை தொடர்ந்து வரும் நாட்களில் நடக்கும் சடங்குகளும் இசை நடனம் விருந்து என திருவிழாக் கோலமாக இருக்கின்றன.

அங்கும் இது போல பணத்திற்காக அழுக குழுக்கள் உள்ளது. இவர்களுக்கு அதிக பணமும் வழங்கப்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?