Who is Neera Arya, INA's First Woman Spy  Twitter
இந்தியா

Neera Arya : நாட்டுக்காக கணவரை கொன்ற இந்திய பெண் உளவாளி - யார் இந்த நீரா ஆர்யா?

Priyadharshini R

இந்தியாவின் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் எத்தனையோ பேர் உயிர் தியாகம் செய்தனர். அறியப்பட்ட சிலரைத் தவிர, பெரும்பான்மையான சுதந்திரப் போராளிகள் தேசத்திற்கு பெயரற்ற சேவையை செய்திருகின்றனர்.

அப்படி பலரும் அறியாத ஒருவர் தான் நீரா ஆர்யா, இந்திய தேசிய இராணுவத்தின் போர்வீரர்.

இந்திய தேசிய ராணுவத்தின் முதல் பெண் உளவாளி என்று பிரபலமாக அறியப்பட்ட நீரா ஆர்யா, ஜான்சி ராணி ரெஜிமென்ட்டில் (படைப்பிரிவு) ஒரு சிப்பாயாக இருந்தார்.

நீரா ஆர்யா யார்?

மார்ச் 5, 1902 அன்று உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் உள்ள கெக்ரா என்ற நகரத்தில் நீரா ஆர்யா பிறந்தார்.

நீரா ஆர்யா புகழ்பெற்ற தொழிலதிபர் சேத் சாஜுமாலின் மகள். நீரா ஆர்யா பிறந்தபோது, ​​ஆங்கிலேயர்கள் இந்தியாவில் ஆட்சி செய்து வந்தனர்.

சிறுவயதிலிருந்தே, அவரது செயல்கள் தேசத்தின் மீதான அவரது அன்பை நிரூபித்தது. ஏனெனில், அவரது குழந்தை பருவத்தில், அவர் பல சுதந்திர இயக்கங்களில் பங்கேற்றார்.

நீரா ஆர்யாவின் தந்தை விரைவில் தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். விசாரணை அதிகாரியான ஸ்ரீகாந்த் ஜெய்ரஞ்சன் என்பவரை நீரா ஆர்யா திருமணம் செய்து கொண்டார்.

திருமணமான உடனேயே, நீரா ஆர்யா மற்றும் அவரது கணவரின் தொழில்கள் அவர்களுக்குள் மோதலாக மாறியது. அவரது கணவர் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்காக பணிபுரிந்தார், அவர் ஒரு விசுவாசமான பிரிட்டிஷ் ஊழியராக இருந்தார்.

அதேசமயம் நீரா தனது நாட்டிற்கு ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற விரும்பினார். தேசத்தின் மீது கொண்ட அன்பின் காரணமாக, நீரா தனது திருமணத்திற்குப் பிறகு ஆசாத் ஹிந்த் ஃபௌஜின் கீழ் ஜான்சி படைப்பிரிவில் சேர்ந்தார்.

இந்த படைப்பிரிவை நிறுவியவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இந்த படைப்பிரிவு நாட்டில் சுதந்திர இயக்கத்திற்காக வேலை செய்தது. ஆசாத் ஹிந்த் ஃபௌஜ் என்றும் அழைக்கப்படும் இந்திய தேசிய இராணுவம் (INA) சிங்கப்பூரில் அக்டோபர் 21, 1943 இல் நிறுவப்பட்டது.

இந்த அமைப்பு ஆசாத் ஹிந்தின் நிறுவனர் சுபாஷ் சந்திர போஸின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டது. இந்தியாவில் இருந்து பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை வீழ்த்துவதற்காக மோகன் சிங் தலைமையில் 1942 இல் முதன்முதலில் இராணுவம் உருவாக்கப்பட்டது.

குடும்பத்தை விட தேசம் முக்கியம்

நீரா ஆர்யா இந்திய தேசிய இராணுவத்தின் ஜான்சி ராணி படைப்பிரிவின் ஒரு பகுதியாக மாறியதை உணர்ந்த இவரது கணவர் ஸ்ரீகாந்த், தனது மனைவியைக் கொண்டு நேதாஜி சுபாஷ் சந்திர போஸை கொலை செய்ய விரும்பினார். நேதாஜியை உளவு பார்க்கவும், அவரைக் கொல்லவும் உத்தரவிட்டார்.

இந்தச் செயலை நீரா ஆர்யா மறுத்தபோதும், ஸ்ரீகாந்த் ஜெய்ரஞ்சன் தாஸ் நேதாஜியைக் கொல்ல நேதாஜியின் இருப்பிடத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று கூறினார்.

ஸ்ரீகாந்த் நேதாஜியை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். நேதாஜி துப்பாக்கிச் சூட்டில் உயிர் தப்பினார், இது தோல்வியுற்ற ஒரு கொலை முயற்சியானது.

ஆனால் அவரது வாகன ஓட்டுநர் சுட்டு வீழ்த்தப்பட்டார். இதையறிந்த நீரா, தனது கணவர் ஸ்ரீகாந்தை குத்திக் கொன்றார்.

ஐஎன்ஏவின் முதல் பெண் உளவாளி

பிரிட்டிஷ் அரசு ஊழியரைக் கொன்றதற்காக, அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அறிக்கைகளின்படி, நீரா ஒவ்வொரு நாளும் சித்திரவதை செய்யப்பட்டார் மற்றும் INC இன் தலைவர்கள், குறிப்பாக சுபாஷ் சந்திர போஸ் பற்றிய தகவல்களை வெளியிட லஞ்சம் வழங்கப்பட்டது.

அப்படிச் செய்தால், அவருக்கு ஜாமீன் வழங்கப்படும் என்றனர். ஆனால் அவரது தேசபக்தியை இந்த கடினமான நேரத்திலும் விட்டு கொடுக்கவில்லை நீரா

வரலாற்றின் படி, நீரா நாட்டிற்காக தொடர்ந்து போராடினார். மேலும் சுபாஷ் சந்திரபோஸ் இருக்கும் இடத்தைப் பற்றிய தகவலை கொடுக்க மறுத்ததால் அவரது மார்பகங்கள் வெட்டப்பட்டன.

நிறைய சித்திரவதைகள் இருந்தபோதிலும், நீரா ஆர்யா தேசத்திற்கும் சுபாஷ் சந்திர போஸுக்கும் விசுவாசமாக இருந்தார். மேலும் ஆசாத் ஹிந்த் ஃபௌஜின் முதல் பெண் உளவாளி ஆனார்.

ஐஎன்ஏவின் முதல் பெண் உளவாளியாக அறியப்பட்ட நீரா ஆர்யா சுதந்திரத்திற்குப் பிறகு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவர் தனது வாழ்நாள் முழுவதையும் ஹைதராபாத்தில் கழித்தார்.

1998 ஆம் உயிர் நீத்தார் நீரா.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?