IND vs AUS: 20 ஆண்டுக்கு முன் இறுதிப்போட்டியில் என்ன நடந்தது? பழி தீர்க்குமா இந்தியா? Twitter
இந்தியா

IND vs AUS: 20 ஆண்டுக்கு முன் இறுதிப்போட்டியில் என்ன நடந்தது? பழி தீர்க்குமா இந்தியா?

இந்தியா ஆஸ்திரேலியாவுடன் உலகக்கோப்பை பைனலில் மோதுவது இது முதல் முறை அல்ல. 20 வருடங்களுக்கு முன்... 90ஸ் கிட்களின் மனதில் தீரா காயமாக நீங்கா தழும்பாக பதிந்தது ஒரு தோல்வி!

Keerthanaa R

இன்று நவம்பர் 19 இது இந்தியர்களுக்கு, குறிப்பாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிக முக்கியமான நாள்.

நாளை இந்திய அணி ஆஸ்திரேலியாவை அகமதாபாத் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சந்திக்கிறது.

இந்தியா ஆஸ்திரேலியாவுடன் உலகக்கோப்பை பைனலில் மோதுவது இது முதல் முறை அல்ல.

20 வருடங்களுக்கு முன்...

90ஸ் கிட்களின் மனதில் தீரா காயமாக நீங்கா தழும்பாக பதிந்தது ஒரு தோல்வி!

2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸியும், சௌரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணியும் மோதின.

2003 மார்ச் 23ஆம் நாளில் தென் ஆப்பிரிக்காவின் ஜொஹான்னஸ்பெர்க் மைதானத்தில் நடந்தது ஃபைனல்.

இந்திய அணி டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்தார். 1983க்கு பிறகு இரண்டாவது முறையாக ஃபைனலுக்கு சென்றது இந்தியா. ஆனால் 1987, 1999 என இரண்டு முறை கோப்பை வென்று, கிரிக்கெட் உலகின் உச்சாணியில் அமர்ந்திருந்தது ஆஸி.

சாகீர் கான் வீசிய முதல் ஓவரிலேயே 15 ரன்கள், வெறும் 40 பந்துகளில் கில்கிறிஸ்ட் அரைசதம் என இந்திய பந்துவீச்சாளர்களை பந்தாடியது பாண்ட்டிங் படை.

இவர்கள் இருவரையும் ஹர்பஜன் சிங் திருப்பி அனுப்பினாலும், ஏண்டா விக்கெட்ட எடுத்தோம் என்ற அளவுக்கு மனதை உடைத்தார் கேப்டன் பாண்டிங்.

நாலாபுறமும் பந்துகளை பறக்கவிட்டு அதிரடியாக விளையாடிய அவர் 140 ரன்களை குவித்தார். அவரது பேட்டில் ஸ்ப்ரிங் இருக்கிறது, அதுவே அவருக்கு சாதமாக அமைந்தது என்றெல்லாம் கதைகள் கட்டினர்.

50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 359 ரன்களை எடுத்திருந்தது. ஜாகிர் கான், ஜவகர் ஸ்ரீநாத் தொடங்கி, சேவாக் சச்சின் பந்துவீச்சும் எடுபடவில்லை.

360 என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கியது இந்திய அணி. இந்திய அணியின் நம்பிக்கை நாயகன் சச்சின் டெண்டுல்கர் 4 ரன்களில் அவுட் ஆக, இந்திய ரசிகர்கள் மனம் சற்றே விரிசல் விடத் தொடங்கியது. காரணம், அந்த தொடரில் 673 ரன்கள் குவித்து அதிக ரன் எடுத்த வீரராக இருந்தார் சச்சின்.

மறுபுறம் சேவாக் பௌண்டரிகள் விளாசினாலும், 82 ரன்கள் எடுத்த போது ரன் அவுட் ஆகினார். இதனை suicidal run out என விவரித்தனர். கங்குலி, கைஃப், ராகுல் டிராவிட், யுவராஜ் சிங் என அனைவருமே சொர்ப்ப ரன்களில் திரும்ப 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது இந்திய அணி.

அதிக ரன்கள் வித்தியாசத்தில் உலகக்கோப்பை வென்ற அணி என்ற சாதனை படைத்தது ஆஸ்திரேலியா. ரசிகர்கள், இந்திய வீரர்கள் பலர் கண்ணீர் சிந்திய தருணங்கள் பசுமரத்தாணி போல இன்றும் பதிந்திருக்கிறது.

40 ரன்கள் இருந்தபோது ரிக்கி பாண்டிங் lbw ஆனார், எனினும் நடுவர் அவுட் கொடுக்காதது ஆஸிக்கு சாதகமாக மாறியது என்ற பரவலான குற்றச்சாட்டு இருந்தது.

எதுவாகினும், படுதோல்வி அடைந்தது இந்திய அணி

இந்த 2003 பைனலுக்கும் 2023 பைனலுக்கும் ஒரு கனெக்‌ஷன் உள்ளது.

2003ல்...

  • ஆஸ்திரேலியா ஒரு லீக் போட்டியில் கூட தோல்வியடையவில்லை.

  • 8 தொடர் வெற்றிகளை பெற்றிருந்தது ஆஸி

  • இந்தியாவை லீக் போட்டியில் ஆஸி வென்றது

2023ல்...

  • இந்தியா ஒரு லீக் போட்டியில் கூட தோல்வியடையவில்லை

  • லீக் போட்டியில் ஆஸியை வீழ்த்தியுள்ளது

  • தொடர்ந்து 8 வெற்றிகளை கண்டுள்ளது.

என்ன தான் 2011ல் இந்தியா உலகக்கோப்பை வென்றாலும், நாளை நடைபெறவுள்ள பைனல், பர்சனலாக பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஆஸ்திரேலியா அணியின் தற்போதைய கேப்டன் பேட் கம்மின்ஸ், அகமதாபாத்தின் ஒன்றரை லட்சம் இந்திய ரசிகர்களை அமைதியாக்குவதே எங்கள் இலக்கு என்று கூறியுள்ளார்.

சொன்னதை செய்து காட்டி இந்தியாவை மீண்டும் பைனலில் வீழ்த்தி, 6வது முறையாக ஆஸி கோப்பை வெல்லுமா?

அல்லது பேசிய வாய்களை அடைத்து, 2003 ரணத்துக்கு மருந்தாக ரோஹித்தின் படை நாளை வெல்லுமா?

காத்திருந்து பார்க்கலாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?