Apple Watch  Twitter
இந்தியா

கர்ப்பத்தைக் கண்டறிந்த ஸ்மார்ட் வாட்ச் - மருத்துவ பரிசோதனைக்கு முன்பே தெரிய வந்தது எப்படி?

Priyadharshini R

34 வயதான பெண் ஒருவரின் கர்ப்பத்தை அவரது ஆப்பிள் வாட்ச் கண்டறிந்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிள் வாட்ச், அசாதாரண இதயத் துடிப்பு, ஆக்ஸிஜன் அளவில் மாறுபாடு, என பலவற்றைக் கண்டறிந்து மக்களின் உயிரைக் காப்பாற்றிய நிகழ்வுகளைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

ஆனால் முதன்முறையாக, ஆப்பிள் வாட்ச் பயனர் ஒருவரின் மருத்துவ பரிசோதனைக்கு முன்பே அவரின் கர்ப்பத்தைக் கண்டறிந்துள்ளது.

34 வயதான பெண் ஒருவர் ஆப்பிள் வாட்ச் உடனான தனது அனுபவத்தை Reddit இல் பகிர்ந்துள்ளார்.

அவரது ஆப்பிள் வாட்ச் 15 நாட்களுக்கும் மேலாக அதிகரித்த இதயத் துடிப்பை எச்சரித்ததாக அவர் தெரிவித்தார்.

பொதுவாக எனது இதயத் துடிப்பு சுமார் 57 ஆக இருக்கும், ஆனால் 15 நாட்களாக 72 ஆக அதிகரித்திருந்தது.

உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி குறித்து தெரிவித்த அவர், 18 மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து வருவதாகவும் கூறினார்.

இதய துடிப்பு கணிசமான அதிகரிப்புக்கு நிறைய காரணங்கள் இருக்கும். எனவே, முதலில், அந்தப் பெண் கோவிட் பரிசோதனையை மேற்கொண்டார். அது எதிர்மறையாக வந்தது.

இதுகுறித்து இண்டர்நெட்டில் தேடியுள்ளார். கர்ப்பத்தின் ஆரம்பத்தில், பெண்களின் இதயத் துடிப்பு அதிகமாக இருக்கும் என படித்துள்ளார்.

பின்னர், உறுதிப்படுத்துவதற்காக, அவர் ஒரு கிளினிக்கிற்குச் சென்றார், அங்கு அவர் 4 வார கர்ப்பமாக இருப்பதை மருத்துவர் தெரிவித்தார்.

அவருக்கு மாதவிடாய் வரவில்லை என்பதும் கர்ப்பம் ஆரம்ப கட்டத்தில் இருந்ததால், அது தொடர்பான அறிகுறிகளை அவர் கவனிக்கவில்லை என தெரிகிறது.

ஆனால் ஆச்சரியப்படும் விதமாக, அவரது ஆப்பிள் வாட்ச் உ அசாதாரணமான இதயத்துடிப்பை கண்டறிந்து எச்சரித்ததுள்ளது.

கர்ப்பத்தைக் கண்டறிவதற்காக உதவிய தனது ஆப்பிள் வாட்சைப் பாராட்டிய அவர், ஆப்பிள் வாட்சின் பயனர்கள் இதயத் துடிப்பு குறித்து கொஞ்சம் கவனம் செலுத்துமாறு பரிந்துரைத்தார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?