உலகின் பணக்கார கிராமம்: 17 வங்கிகள் & 5000 கோடி டெபாசிட் பணம்! எங்கே? Twitter
இந்தியா

உலகின் பணக்கார கிராமம்: 17 வங்கிகள் & 5000 கோடி டெபாசிட் பணம்! எங்கே இருக்கிறது?

NewsSense Editorial Team

இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள் தான் என்று சொல்வார்கள். கிராமம் என்று சொன்னாலே அடிப்படை வசதிகள் இல்லாத சுற்றுப்புறமும் ஏழை மக்களும் இருக்கும் ஒரு இடம் தான் நமது நினைவுக்கு வரும். ஆனால், ஒரு கிராமத்தில் உள்ள அத்தனை பேரும் பணக்காரர்களாக இருக்கும் ஒரு இடம் இந்தியாவில் இருக்கிறது.

அதாவது, குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ளது மதாபர் என்ற கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 7,600 வீடுகள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்களுக்காக 17 வங்கிகள், 5000 கோடி ரூபாய் டெபாசிட் உடன் இயங்கி வருகிறது.

7 ஆயிரம் வீடுகள் இருக்கும் கிராமத்தில் 17 வங்கிகள் இருக்கிறது என்பதை நம்பமுடியாமல் இருக்கிறதல்லவா? இதற்கு காரணம் இந்த ஊர்வாசிகள் பலரும் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட உலகின் மற்ற பகுதிகளில் வேலை பார்த்து வருவது தான்.

இந்த மக்கள் வெவ்வேறு நாடுகளில் வேலை பார்த்து வந்தாலும், தங்களது சம்பளத்தை சொந்த ஊரில் டெபாசிட் செய்ய விரும்புகின்றனர். இக்கிராமத்தில் வசிக்கும் மக்களின் தொழில் விவசாயம் செய்வது தான்.

'மதாபர்' கிராமத்தில் பள்ளிகள், கல்லூரிகள், கோவில்கள், விளையாட்டு மைதானங்கள், உலகத்தரம் வாய்ந்த சுகாதார நிலைய வசதிகள் போன்ற அனைத்து சேவைகளும் உள்ளது.

லண்டனில் கடந்த 1968 ஆம் ஆண்டு 'மாதபர் கிராம சங்கம்' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதாவது, மாதபர் கிராம மக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் வகையிலும், லண்டனில் வசிக்கும் மக்கள் நேரடியாக தங்கள் கிராமத்தைச் சேர்ந்த மக்களுடன் தொடர்பு கொள்ளவும் இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?