UFOs and Aliens  Twitter
அறிவியல்

வேற்று கிரக வாசிகள் : ஏலியன்களை தேடும் முயற்சியில் வியக்க வைக்கும் சாதனை

NewsSense Editorial Team

நமது சூரிய குடும்பத்திலியே வேற்று கிரக வாசிகளைக் கண்டறியும் முயற்சியில் ஒரு சாதனை நடந்திருக்கிறது.

1970 களின் பிற்பகுதியில் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் இரண்டு வாயேஜர் விண்கலங்கள் வியாழன் கிரகத்தைச் சுற்றி வரும் நிலவான யூரோபாவை நோக்கிப் பறந்து ஆய்வு செய்தது. யூரோபாவில் பனிக்கட்டி முகடுக்கு அடியில் கடல் நீர் பதுங்கியிருப்பதற்கான வலுவான ஆதாரங்களைக் கண்டறிந்தது.

அங்கே ஒரு பாறைக்கு அடியில் சுழலும் கடல் நீர் யூரோபாவில் வேற்று கிரக வாசிகள் அங்கே இருக்குமோ என்று கண்டறிவதற்கான தேடலை ஊக்குவித்தது. ஆனால் அதன் பனிக்கட்டி மேலோடு, தோராயமாக 30 கிலோமீட்டர் தடிமன் கொண்டது. இதனால் இந்தக் கடல் நீரை அடைவது என்பது கடினமாக ஒன்றாக இருந்தது.

ஆனால் நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதழில் செவ்வாய்க்கிழமை ஒரு புதிய ஆய்வு வெளியிடப்பட்ட து. அதன் படி யூரோபாவின் ஆழமான நீரைக் கண்டறிய ஒரு மாதிரியைப் பூமியில் உருவாக்குவதன் மூலம் ஒரு மாற்று வழியை விஞ்ஞானிகள் கண்டறியலாம் என்று கூறுகிறது. பூமியில் உள்ள கிரீன்லாந்து பனிப்பாறையில் ஒரு வகை பனிக்கட்டியை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது யூரோபாவின் மேற்பரப்பைச் சுற்றியுள்ள பல முகடுகளுடன் மிகவும் ஒத்திருக்கிறது. மேலும் கிரீன்லாந்தின் இந்த கட்டமைப்புகளில் ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பார்த்தால், அது யூரோப்பாவின் ஆழத்திலிருந்து தண்ணீரைக் காணலாம்.

கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பனிக்கட்டிகள் மற்றும் பனிப்பாறைகளைப் படிக்கும் ரிலே கல்பெர்க் ஒரு புவி இயற்பியலாளர் ஆவார். ஆனால் தங்கள் வேலையைப் பகிர்ந்து கொள்ளும் ஆராய்ச்சியாளர்களின் ஒரு இடைநிலைக் குழுவுடன் பணிபுரிகிறார். இருப்பினும், அவரது சகாக்களில் ஒருவர் யூரோபாவின் மேற்பரப்பைக் கடக்கும் பனி முகடுகளின் படத்தொகுப்பைக் காட்டியபோது ​​​​அவர் ஆச்சரியமடைந்தார்.

"ஆஹா, இது கிரீன்லாந்தில் இருந்து தயாரிக்கப்பட்ட எனது தரவுகளில் பார்த்த அதே வித்தியாசமான விஷயத்தைப் போலவே தோன்றுகிறது," என்று டாக்டர் கல்பெர்க் உற்சாகம் பொங்கக் கூறினார்.

கிரீன்லாந்தில் அவர் பார்த்தது பனிக்கட்டியின் "இரட்டை மேடு." கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் நீளமுள்ள பனிக்கட்டியின் இணை முகடுகளின் வரிசை சுமார் இரண்டு மீட்டர் உயரத்தைக் கொண்டது. சுமார் 50 மீட்டர் அகலமுடையது.

"நீங்கள் அதைப் பாதியாக வெட்டி, அதன் குறுக்குவெட்டைப் பார்த்தால், அது பெரிய எழுத்து 'M' போல இருக்கும்," டாக்டர் கல்பெர்க் கூறினார்.

கிரீன்லாந்தில் உள்ள இரட்டை முகடு பனிக்கட்டி இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ஒரே மாதிரியாக இருக்கிறது. யூரோபாவில் இது போன்ற இரட்டை முகடுகள் பல இருப்பதோடு அவை அளவிலும் பெரிதானவை.

UFOs and Aliens

"யூரோபாவில், இவை 160 முதல் 200 மீட்டர் உயரம் இருக்கலாம்" என்று டாக்டர் கல்பெர்க் கூறினார்.

டாக்டர் குல்பெர்க் கூறுகையில், கிரீன்லாந்திலன் மேற்பரப்பில் நீர் உருகியதன் விளைவாக இரட்டை முகடு தோன்றியது. பின்னர் அது குளிர்ச்சியடையும் பனிக்குள் ஊடுருவியது.

"தண்ணீர் உறையும் போது விரிவடைவதால், இந்த பனி பாக்கெட்டின் மையத்தில் உள்ள உள் நீர் அழுத்தம் பெறுகிறது," என்று அவர் கூறினார். "இறுதியில் அங்கு அதிக அழுத்தம் இருந்ததாக நாங்கள் நினைக்கிறோம். அது உடைந்து சிறிய அளவிலான நீரும் பனியும் வெளியேறி, மேற்பரப்பை இந்த முகடுகளுக்குள் குவிக்குமாறு கட்டாயப்படுத்தியது."

யூரோபாவின் மேற்பரப்பு பனி உருகுவதற்கு மிகவும் குளிராக இருப்பதைத் தவிர, யூரோபாவிலும் இதேபோன்ற ஒரு வழிமுறை செயல்படக்கூடும். யூரோபாவின் பனிக்கட்டியில் போதுமான ஆழத்தில் தண்ணீர் இருந்தால், அது உறைந்து இரட்டை முகடுகளை உருவாக்குகிறது அது கீழே இருந்து வந்திருக்க வேண்டும்.

"இது மேற்பரப்பு கடலிலிருந்து வரும் தண்ணீராக இருக்கலாம், இது பனிக்கட்டியின் உள்ளே முறிவுகள் மூலம் கட்டாயப்படுத்தப்படலாம்" என்று டாக்டர் கல்பெர்க் கூறினார். "அல்லது நீங்கள் ஒரு சூடான, மிதக்கும் பனிக்கட்டியைப் பெற்றிருந்தால், அதன் உள்ளே ஒருவித உள் உருகலைப் பெறலாம்."

இருப்பினும், இதே மெக்கானிசத்தை யூரோபாவில் கொண்டு சென்றாலும், அங்கே பனிக்கட்டியில் இருந்து அல்லது அதற்குக் கீழே உள்ள பொருட்கள் சில கிலோமீட்டர்கள் ஆழத்தில் காணப்படலாம். எதிர்கால விண்வெளிப் பயணங்கள் அந்தப் பொருளை அணுகலாம் மற்றும் அதில் உயிரினங்களின் அறிகுறிகள் உள்ளதா என்பதை மதிப்பிடலாம். 30 கிலோமீட்டர் கடினமான பனியைத் துளையிடுவது ஒரு பெரிய பணி என்றாலும், பூமியில் ஒரு சில கிலோமீட்டர்கள் துளையிடுவது சாதாரணமாக ஒன்று.

"நாங்கள் மத்திய கிரீன்லாந்தில் அல்லது மத்திய கிழக்கு அண்டார்டிக்காவில் மூன்றரை கிலோமீட்டர் ஆழமான பனிக்கட்டிகளைத் துளையிடுகிறோம்" என்று டாக்டர் குல்பெர்க் கூறினார். "இது ஒரு பெரிய அமைப்பைத் துளையிட்டுத் தகர்த்து எடுக்கும் அளவுக்கு அதிக சக்தி தேவைப்படுகிறது. செவ்வாய் கிரகத்திற்குச் சென்ற சிறிய அளவிலான ரோவர் அல்லது வேறு ஏதாவது ஒன்றைப் போல நீங்கள் இதைச் செய்ய முடியாது. இது கடினமாக இருக்கும், ஆனால் இது பூமியில் நாம் சாதாரணமாகச் செய்யும் ஒன்று."

இன்றைக்கு இந்த ஆய்வு பூமியில் செய்யும்படியான ஒன்றாக இருக்கிறது. இதையே யூரோப்பாவில் செய்வதற்கு இன்னும் மிகுந்த தொழில்நுட்பமும், பொறுமையும் தேவைப்படும். அது சாத்தியமானால் யூரோப்பாவில் உயிரினங்கள் வாழும் அறிகுறியைக் கண்டுபிடிக்கலாம். அப்படிக் கண்டுபிடித்தால் அது ஒரு பெரும் பாய்ச்சலாக இருப்பது மட்டும் நிச்சயம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?