Animals That Are Pregnant for an Absurdly Long Time canva
அறிவியல்

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

கடலில் வாழும் மிகப்பெரிய மீனான திமிங்கல சுறாவின் கர்ப்ப காலம் 3.5 ஆண்டுகள். பெண் திமிங்கல சுறாக்கள் தங்கள் முட்டைகளை வயிற்றுக்குள்ளேயே சுமந்து குட்டி பொரித்து வெளியிடுமாம்.

Priyadharshini R

மனிதர்களுக்கு 10 மாதம் மகப்பேறு இருப்பது நமக்கு தெரியும். ஆனால் சில விலங்குகள் 3 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொண்டவையாக உள்ளன. அப்படி நீண்ட காலம் கர்ப்ப காலம் கொண்ட விலங்குகள் குறித்து பார்க்கலாம்.

யானைகள்

யானை தனது குட்டியை ஈன 22 மாதங்கள் ஆகுமாம். யானையின் மூளை வளர்ச்சி அடைவதற்கு நீண்ட காலம் எடுக்கும் என கூறப்படுகிறது.

ஆல்பைன் சாலமண்டர்

ஆல்பைன் சாலமண்டர் என்பது ஐரோப்பியாவின் மலைப்பகுதிகளில் காணப்படும் ஒரு தனித்துவமான ஊர்வன ஆகும். இது தனது குட்டியை ஈன இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை ஆகும்.

திமிங்கல சுறா

கடலில் வாழும் மிகப்பெரிய மீனான திமிங்கல சுறாவின் கர்ப்ப காலம் 3.5 ஆண்டுகள். பெண் திமிங்கல சுறாக்கள் தங்கள் முட்டைகளை வயிற்றுக்குள்ளேயே சுமந்து குட்டி பொரித்து வெளியிடும். ஒரே பிரசவத்தில் 300 சுறா குட்டிகளை வரை பெற்றெடுக்குமாம்.

ஒட்டகங்கள்

ஒட்டகங்கள் தனது குட்டிகளை போட 13 முதல் 15 மாதங்கள் வரை எடுத்துக் கொள்ளும். குறிப்பாக வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய ஆசியாவில் வசிக்கும் ஒட்டகங்கள் இவ்வளவு காலம் எடுத்துக் கொள்கின்றன.

ஒட்டகச்சிவிங்கி

சுமார் 15 மாதங்களுக்கு தங்களது குட்டிகளை சுமக்கின்றன. இவ்வளவு காலம் ஆவதற்கு காரணம் அதன் நீண்ட கால்கள் வளர்ச்சி அடைவது தான். பிறக்கும்போது ஒட்டகச்சிவிங்கி 6 ft வரை உயரத்தில் இருக்குமாம்.

கருப்பு காண்டாமிருகம்

கருப்பு காண்டாமிருகம் கிட்டதட்ட 15 முதல் 16 மாதங்கள் வரை கருவுற்றிருக்கும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?