Facebook Canva
அறிவியல்

Facebook : பேஸ்புக் பயனர்கள் ஜாக்கிரதை! ஏமாற்று ஃபிஷிங் மோசடி உஷார்!

NewsSense Editorial Team

பேஸ்புக்கில் பக்கங்கள் வைத்திருக்கும் நிறுவனங்களின் நிர்வாகிகளைக் குறிவைத்து புதிய ஃபிஷிங் பிரச்சாரம் நடைபெறுவதாகப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ஃபிஷிங் எனும் வலை விரித்துப் பிடிப்பது என்பது உங்கள் பணத்தை அல்லது உங்கள் அடையாளத்தைத் திருட முயற்சிக்கும் ஒரு தாக்குதலாகும். இது கிரெடிட் கார்டு எண்கள், வங்கித் தகவல் அல்லது சமூக ஊடகங்களின் கடவுச்சொற்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களை - சட்டப்பூர்வமானதாகக் காட்டிக் கொள்ளும் மோசடியான போலி இணையதளங்கள் மூலம் திருடும் முயற்சியாகும்.

ZDNet எனப்படும் இசட் டி நெட் நிறுவனம் ரெட் வென்ச்சர்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ஒன்று. இது ஒரு வணிக தொழில் நுட்ப செய்தி இணைய தளமாகும். இந்நிறுவனம் 1991 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

இந்த நிறுவனத்தின் சமீபத்திய கூற்றுப்படி, பேஸ்புக் பயனர்களுக்கு ஒரு சிக்கலை உடனடியாக தீர்க்கவில்லை என்றால், கணக்கு நிரந்தரமாக நிறுத்தப்படும் என்று பரிந்துரைக்கும் மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகிறது. இதை இந்நிறுவனம் கண்டுபிடித்து எச்சரிக்கை விடுக்கிறது.

Scam Alert

இந்த மோசடியின் குறிக்கோள், மக்கள் தங்கள் கடவுச்சொற்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்களை அனுப்பி ஏமாறுவதாகும். இதன் மூலம் ஒருவேளை அவர்கள் நிர்வகிக்கும் நிறுவனத்தின் பக்கங்கள் மோசடியாவார்களால் கைப்பற்றப்படலாம்.

தவறான அவசர உணர்வை உருவாக்கி நடத்தப்படும் மோசடி

முதலாவதாக, பாதிக்கப்பட்டவர் "தி ஃபேஸ்புக் டீம்" என்ற பெயரிலிருந்து ஒரு மின்னஞ்சலைப் பெறுகிறார். அவர்கள் மற்றவர்களின் பதிப்புரிமையை மீறும் உள்ளடக்கத்தைப் பகிர்ந்துள்ளதாகவும், உடனடியாக இந்த காப்பிரைட் பிரச்சினைக்குப் பதில் அளிக்கவில்லை எனில், அவர்களின் கணக்கு மூடப்படும் என்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

மின்னஞ்சலில் இரண்டு இணைப்புகள் உள்ளன. ஒன்று பாதிக்கப்பட்டவரை முறையான ஃபேஸ்புக் இடுகைக்கு அழைத்துச் செல்லும். மற்றொன்று "தங்கள் காரணத்தை வாதாடக்கூடிய" இணையதளத்திற்கு அழைத்துச் செல்லும்.

இந்த மோசடியான தீங்கிழைக்கும் பக்கத்தில் எந்த தீய மென்பொருளும் இல்லை. மாறாக, பாதிக்கப்பட்டவரின் பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் ஃபேஸ்புக் கடவுச்சொல் போன்ற தனிப்பட்ட தகவல்களைக் கோருகிறது.

எனவே ஃபேஸ்புக் பயனர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களுக்கு ஃபேஸ்புக் நிறுவனத்திடமிருந்து வரும் மின்னஞ்சல் முறையான யூஆர்எல் முகவரியிலிருந்து வருகிறதா என்பதைச் சோதிக்க வேண்டும். அதில் சந்தேகமிருந்தால் ஃபேஸ்புக் உதவி பக்கம் சென்று புகார் பதிவிடலாம். அல்லது அந்த தவறான ஃபேஸ்புக் முகவரியோடு வரும் லிங்குகளை பின்தொடராமல் இருப்பது நல்லது. இல்லையேல் உங்களது ஃபேஸ்புக் பக்கங்களின் தனிப்பட்ட தகவல்கள் எளிதில் திருடப்படலாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?