ஏலியன்களை தொடர்புகொள்ள கைரேகையை பயன்படுத்தும் அறிவியல் NewsSense
அறிவியல்

ஏலியன்களை தொடர்புகொள்ள கைரேகையை பயன்படுத்தும் அறிவியல் : என்ன? எங்கே? எப்படி?

ஒருவேளை யூக்ளிட் ஏலியன்களின் எதிர்கால சந்ததிகளிடம் சிக்கினால் என்ன செய்வது? பூமியில் வாழ்கிற மக்களின் மனித நேயத்தைப் பற்றி அவர்களுக்கு இந்த ஓவியத்தின் மூலம் உணர்த்தலாம் இல்லையா?” என்று டாம் கிச்சுங் கூறினார்.

NewsSense Editorial Team

2023-ஆம் ஆண்டு ஏவப்பட உள்ள யூக்ளிட் விண்கலத்தில் தனித்துவமான கைரேகை ஓவியத்தை அனுப்ப விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். 3டி மேப்பிங் மூலம் பிரபஞ்சத்தின் பரிணாம வளர்ச்சியை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டு வரையப்படுகிற அந்த 3டி ஓவியமானது, மனித இன நாகரீகத்தின் பிரதிநிதியாக விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளது.

இந்த ஓவியமானது பால்வெளி அண்டத்தை சித்தரிக்கும் வகையில் இருக்கும். மேலும் 250 விஞ்ஞானிகள் மற்றும் ’யூக்ளிட் கருவி’ விஞ்ஞானி டாம் கிச்சிங் ஆகியோருடன் இணைந்து பிரபல ஓவியக் கலைஞர் லிசா பெட்டிபோன் இந்த ஓவியத்தை உருவாக்கியிருக்கிறார். இந்த ஓவியத்தின் நோக்கத்தைப் பற்றி கேட்டபோது, “யூக்ளிட்டின் வாழ்நாளுக்குப் பிறகு, அது விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கும்.

அப்போது, ஒருவேளை யூக்ளிட் ஏலியன்களின் எதிர்கால சந்ததிகளிடம் சிக்கினால் என்ன செய்வது? பூமியில் வாழ்கிற மக்களின் மனித நேயத்தைப் பற்றி அவர்களுக்கு இந்த ஓவியத்தின் மூலம் உணர்த்தலாம் இல்லையா?” என்று டாம் கிச்சுங் கூறினார்.

ஓவியர் லிசா பெட்டிபோன் கூறுக்கையில், “இந்த ஓவியம் யூக்ளிட் திட்டத்தில் "மனிதநேயத்தை" பூமியின் அடையாளமாகச் சேர்க்கும்” என்று கூறினார். மேலும் இந்த ஓவியத்தை, மொத்த விஞ்ஞானிகள் குழுவில் இருப்போரின் விரல்களையும் வண்ணப்பூச்சில் நனைத்து எடுத்து, அதை அப்படியே பதிவு செய்து உருவாக்கியதாகவும் கூறினார்.

"யூக்ளிட் அதன் தொழிற்நுட்பம், உருவாக்கம், செயல்பாடு ஆகியவற்றால் அழகானதாக இருந்தாலும், உண்மையில் அது நம் ஒட்டுமொத்த மனிதகுலம் பற்றியும், மனிதநேயம் பற்றியும் எந்த அம்சத்தையும் கொண்டிருக்கவில்லை. எனவே, மக்களிடம் பேசக்கூடிய கலைநயமிக்க ஒன்றை அதன் அம்சமாக சேர்க்க முடியுமா? என எங்களை நாங்களே கேட்டுக்கொண்டோம்,” என்று ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி இணையதளத்தில் லிசா பெட்டிபோன் கூறினார்.

அந்த ஓவியத்தில் இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டி இருக்கிறது. லேசர்களைப் பயன்படுத்தி, ஒரு தகடு மீது பொறிக்கப்பட்ட பிறகு அந்த ஓவியமானது யூக்ளிடில் பொருத்தப்படும். மேலும் இதனுள், தட்டச்சுப்பொறி எழுத்துருவில் கவிஞர் சைமன் பாராக்லோவின் சிறு கவிதையும் இடம்பெற்றுள்ளதாக ESA கூறியது.


"இந்த ஓவியமானது இருண்ட, பறந்த நம் பார்வைக்கே எட்டாமல் இருக்கிற ஓரிடத்திற்கு மனிதகுலத்தின் ஒரு அடையாளத்தை கொண்டு சேர்க்கிறது. அங்கு, இதுவரையில் நாம் பார்க்க முடிந்தவரை, வேறு எந்த அறிவார்ந்த வாழ்க்கையும் இல்லை" என்று லிசா பெட்டிபோன் கூறினார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?