காற்றை தூய்மையாக்கும் திரவம் - இனி மரம் வளர்க்க தேவையில்லையா? Liquid 3 / Twitter
அறிவியல்

Liquid 3: காற்றை தூய்மையாக்கும் திரவம் - இனி மரம் வளர்க்க தேவையில்லையா?

Antony Ajay R

நம் அன்றாட வாழ்க்கையில் அனைவருமே மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு வருகிறோம். நம் நகரங்களைக் காக்க அதிக மரங்களை நடவேண்டியது அவசியம். ஆனால் கட்டிடங்களும் சாலைகளும் நிறைந்திருக்கும் பெரு நகரங்களில் மரம் வைப்பதற்கு ஏற்ற இடங்களே இல்லை.

இந்த சிக்கலுக்கான தீர்வைக் கண்டுள்ளார் டாக்டர் இவான். செர்பியாவைச் சேர்ந்த விஞ்ஞானியான இவர் திரவ மரத்தைக் கண்டறிந்துள்ளார்.

ஆம், செர்பியாவின் தலைநகரான பெல்கிரேடில் சாலை ஓரமாக பெஞ்ச்களில் வைக்கப்பட்டுள்ளது இந்த திரவ மரம். இது உயிருள்ளது, மரங்களைப் போலவே சுவாசித்து சுற்றுபுறத்தில் இருந்து கெட்ட காற்றை எடுத்துக்கொண்டு நமக்கு தூய்மையான காற்றைத் தரக்கூடியது.

இது எந்த மாயாஜாலமும் இல்லை. தண்ணீரை ஒரு பாத்திரத்தில் இருந்து மற்றொன்றுக்கு மாற்றுவது போல இந்த மரத்தை மாற்ற முடியும். அறிவியல் எப்போதுமே நமக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படுத்தும் ஆச்சரியங்களை வழங்கிக்கொண்டிருக்கிறதல்லவா😅

இந்த மரம் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

வேர், தண்டு, கிளை, இலை எதுவும் இல்லை. இந்த திரவம் ஒரு மரம் செய்யும் வேலையை கச்சிதமாக செய்துவிடும். இதற்கு லிக்குயிட் 3 (Liquid 3) என்று பெயர்.

லிக்குயிட் 3 தண்ணீருடன் மைக்ரோஆல்கே என்ற இரகசிய நுண் பொருளும் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. தண்ணீர், சூரிய ஒளி மற்றும் கார்பன் டை ஆக்சைடு உதவியால் வாழும் உயிர்தான் இந்த மைக்ரோஆல்கே.

பெஞ்சில் இருக்கும் தொட்டியில் மைக்ரோஆல்கே சுவாசிக்கும் போது சுற்றுபுறத்தில் உள்ள காற்று தூய்மையாகிறது. இதனால் பெருநகரங்களுக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கக்கூடும்.

ஒரு லிக்குயிட் 3 தொட்டி 20 வயது மரம் அளவு காற்றை தூய்மைபடுத்தும். அதாவது ஒரு மரத்தை நட்டு 20 வருடங்கள் காத்திருப்பதற்கு பதிலாக ஒரே நாளில் இந்த லிக்குயிட் 3 தொட்டியை அமைக்கலாம்.

எனில் வருங்காலத்தில் மரங்களே இல்லாமல் இந்த திரவத்தை வைத்துவிடுவார்களா? 🤔

அதுதான் இல்லை. லிக்குயிட் 3 மரம் செய்யும் வேலையை செய்தாலும் நிழல், குளுமை, என இயற்கையான மரங்களிடம் இருந்து நமக்கு கிடைக்கும் பலன்கள் தான் அதிகம்.

மரம் நட முடியாத பெரு நகரங்களில் சாதாரண பெஞ்ச்களுக்கு பதிலாக இந்த லிக்குயிட் 3 பெஞ்ச்களை அமைக்க திட்டமிடுகின்றனர்.

லிக்குயிட் 3 பெஞ்களில் சார்ஜிங் போர்ட் உள்ளிட்ட வசதிகளையும் செய்ய முடியும். பாரிஸ், நியூ யார்க், டெல்லி போன்ற பெரு நகரங்களில் சீக்கிரமே இந்த திரவ மரங்களைப் பார்க்கலாம்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?