திங்களன்று, அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா இன்ஸ்டாகிராமில் சிவப்பு கோளான செவ்வாயில் உள்ள ஒரு விசித்திரமான பள்ளத்தின் படத்தைப் பகிர்ந்து கொண்டது.
"அந்த இடம் செவ்வாயில் உள்ள பள்ளம் ஒன்றைக் குறிக்கிறது" என்று நாசா அதிகாரிகள் படத்தின் கீழ் எழுதினர்.
"நீங்கள் செவ்வாய்க் கிரகத்தில் 0° தீர்க்க ரேகையைப் பார்க்கிறீர்கள்- பூமியில் உள்ள கிரீன்விச் ஆய்வகத்திற்குச் சமமானது இது" என்று அப்படத்தின் குறிப்பில் நாசா அதிகாரிகள் மேலும் எழுதினர்.
பூமியில் உள்ள கிரீன்விச் ஆய்வகம் இங்கிலாந்தின் லண்டனில் உள்ள செங்குத்தான மலையின் மீது அமர்ந்திருக்கிறது. இது நமது கிரகத்தின் பிரைம் மெரிடியன் கோடு எங்குச் செல்கிறது என்பதைக் குறிக்கிறது.
வரலாற்று பிரைம் மெரிடியன் அல்லது கிரீன்விச் மெரிடியன் என்பது கிரீன்விச், ராயல் அப்சர்வேட்டரி வழியாகச் செல்லும் புவியியல் குறிப்புக் கோடு ஆகும். மேலும் கிரீன்விச் சராசரி நேரம் (ஜிஎம்டி) என்பது கிரீன்விச்சில் உள்ள ராயல் அப்சர்வேட்டரியில் நள்ளிரவில் இருந்து கணக்கிடப்படும் சராசரி சூரிய நேரம் ஆகும்.
இன்று பரவலாகப் பயன்படுத்தப்படும் நவீன IERS (International Earth Rotation and Reference Systems Service) சர்வதேச புவி சுழற்சி மற்றும் குறிப்பு அமைப்புகள் சேவை, கிரீன்விச் மெரிடியனை அடிப்படையாகக் கொண்டது.
பிரைம் மெரிடியன் என்பது வடக்கு-தெற்கு கோடு ஆகும். இது கிழக்கும் மேற்கும் எங்குச் சந்திக்கிறது என்பதை வரையறுக்கிறது.
மேலும், இது "வானியல் அவதானிப்புகளுக்கான பூஜ்ஜிய குறிப்பு வரியாகப் பயன்படுத்தப்படுகிறது" என்று நாசா கூறியது.
செவ்வாய்க் கிரகத்தின் படத்தில், ஒரு பெரிய பள்ளம் இரண்டாவது பாறைப் படுகையில் இருக்கும், " ஏர்ரி க்ரேட்டர் - காற்றோட்டமான பள்ளம்" என்று அழைக்கப்படுகிறது.
ஏர்ரி க்ரேட்டர் முதலில் செவ்வாய்க் கிரகத்திற்கான பூஜ்ஜிய தீர்க்கரேகையை வரையறுத்தாக கூறப்பட்டது. ஆனால் விஞ்ஞானிகள் கிரகத்தின் மேற்பரப்பின் விரிவான படங்களைப் பெறத் தொடங்கியதால், அவர்களுக்கு மிகவும் துல்லியமான குறிப்பான் - (Marker) தேவைப்பட்டது.
எனவே, நாசா சிறிய பள்ளத்தை ஏர்ரி-0 (பூஜ்ஜியம்) Airy-0 (zero) எனப் பெயரிட்டுள்ளது. ஏனெனில் இது பிரைம் மெரிடியன் எனப்படும் வடக்கு - தெற்கு கோடு என்பதால் ஏற்கனவே உள்ள வரைபடங்களை மாற்றாது.
அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசா, செவ்வாய்க் கிரகத்தின் பரிசோதனை சுற்றுப்பாதையில் உள்ள உயர் தெளிவுத்திறன் கொண்ட இமேஜிங் அறிவியல் பரிசோதனையை (HiRISE) பயன்படுத்தி படம் பிடித்தது.
செவ்வாய்க் கிரகத்தின் இந்தப் பள்ளத்தை இன்ஸ்டாகிராமில் நாசா வெளியிட்ட உடன், புகைப்படம் கிட்டத்தட்ட 3,00,000 லைக்குகளைப் பெற்றுள்ளது
நூற்றுக்கணக்கான இன்ஸ்டாகிராம் பயனர்களும் தங்கள் பிரமிப்பை வெளிப்படுத்தப் படத்தின் கீழ் பல்வேறு கருத்துகள் தெரிவித்தனர்.
“பொய் சொல்லப் போவதில்லை, புகைப்படம் என்னைக் கவர்கிறது! ஆனால் உண்மையில் மிகவும் சுவாரஸ்யமானது" என்று ஒரு பயனர் எழுதினார்.
“ஐயோ! என்ன ஒரு அற்புதமான படம், ”என்று இரண்டாவது நபர் கூறினார்.
"தண்ணீர் போல் தெரிகிறது," மூன்றாவது நபர் குறிப்பிட்டார்.
இப்படி மக்கள் அறிவியல் பூர்வமாக மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டிருக்கும் போது சதிக்கோட்பாடுகளை நம்பும் சிலர் இது ஏலியன்ஸ் எனப்படும் வேற்றுக்கிரகவாசிகளின் கால்தடங்கள் போலத் தெரிகிறது என்று எழுதினர். இந்நேரம் இது தொடர்பாகப் பல வீடியோக்கள், விளக்கங்கள், சதிக்கோட்பாடுகள், ஊடக செய்திகள் வெளிவந்திருக்கும்.
சுருக்கமாகச் சொன்னால் செவ்வாயின் பிரைம் மெரிடியன் கோடு கண்டுபிடிக்கப் பட்டதற்காக மகிழ்வதா இல்லை இதை ஏலியன் என்று கதை விடுவது குறித்து அழுவதா? தெரியவில்லை..
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com