Galaxy Gautham
அறிவியல்

ஒரு பெண், ஒரு ஆணின் நிர்வாணப் படத்தை விண்வெளிக்கு அனுப்பத் திட்டம்! எதற்கு? யார் படம்?

வேற்றுக்கிரக வாசிகளுடன் மனிதனுக்கு ஒரு தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியாக, ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் நிர்வாணமாக் கைகுலுக்கிக்கொள்ளும் ஒரு படத்தை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது நாசா

Gautham

மனிதனுக்கு என்னவோ ஏலியன்கள் மீது தொடர்ந்து ஒரு தீரா தேடல், ஈர்ப்பு இருந்து கொண்டு தான் இருக்கிறது. மனித இனம் செவ்வாய்க் கிரகத்தில் குடியேறுவது குறித்தும், நிலவில் காலனி அமைப்பது குறித்தும் தீவிரமாகப் பேசத் தொடங்கிவிட்டது. அதற்கு தொழில்நுட்பங்களும் பெரிய அளவில் கை கொடுக்கும் என்கிற நம்பிக்கை மனிதர்களிடையே வளரத் தொடங்கியுள்ளது.

இது ஒரு புறம் இருக்க, மறுபக்கம், ஏலியன்களின் கவனத்தை ஈர்க்க, மனிதர்களின் நிர்வாண படங்களை விண்வெளிக்கு அனுப்ப நாசா (தேசிய வானூர்தியல் மற்றும் விண்வெளி நிர்வாகம்) விஞ்ஞானிகள் திட்டமிட்டுக் கொண்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இச்செய்தி சற்றே ஆச்சரியத்தைத் தந்தாலும், இது மனிதர்களால் செய்யப்படும் புதிய முயற்சியோ, முதல் முறையோ அல்ல. முன்பே ஓரிரு முறை இந்த முயற்சியைச் செய்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்

Contacting aliens

இப்படி ஏலியன்களோடு தொடர்பு கொள்ள மனித இனம் கடந்த 150 ஆண்டுகளாக முயன்று வருகிறது. ஆனால் ஒருமுறை கூட முழுமையாக வெற்றி கிடைத்ததாகத் தெரியவில்லை.

சரியான விதத்தில் ஏலியன்களோடு தொடர்பு கொள்ளப்பட்டால், இரு இனங்களுக்கு இடையில் ஒரு இணைப்பு நிறுவப்படும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அதற்கு நிர்வாணமாக ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் ஹலோ சொல்லி கையை அசைப்பது போன்றதொரு படத்தை அனுப்ப உள்ளனர்.

Human-alien relationship

யாருடைய படம்?

நிர்வாண படத்தை அனுப்பப் போகிறார்கள் சரி, யாருடைய படத்தை அனுப்பப் போகிறார்கள் என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. பிரபல நடிகர், நடிகைகளின் படமா? விளையாட்டு வீரர்களின் படமா? அரசியல்வாதிகளின் படமா? என்று நாம் மூளையைக் கசக்கிப் பிழிந்தாலும், அவர்கள் அனுப்பப்போவது எந்த ஒரு குறிப்பிட்ட மனிதரின் படத்தையும் அல்ல. அது ஒரு பொதுவான ஆண் பால், பெண் பாலைக் குறிக்கும் பிக்ஸலேடட் படம். அது டி.என்.ஏ-வின் சித்தரிப்புக்கு அடுத்தபடியான ஒரு நிர்வாண படமாகும்.

'பீகன் இன் தி கெலாக்ஸி' என்கிற திட்டத்தின் ஒரு பகுதியாகத் தான் இந்த படம் அனுப்பப்பட உள்ளது. விண்வெளியில் வாழும் மற்ற நாகரீகங்களைச் சேர்ந்தவர்களை தொடர்புகொள்ள அழைப்பு விடுப்பது தான் இதன் நோக்கம்.

Inviting aliens

நிர்வாண படத்தைத் தாண்டி புவி ஈர்ப்பு விசை மற்றும் மரபணுவையும் அப்படத்தில் இணைத்துள்ளார்கள் விஞ்ஞானிகள். பைனரி கோட்களால் நிறைந்த செய்தியை அனுப்பும் போது, அதை ஏலியன்களால் புரிந்து கொள்ள முடியலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

"மனிதர்கள் பார்வையில் இருக்கும் சிக்கலான கணிதத்தை ஏலியன்கள் அடையாளம் கண்டு கொள்ளப்படாமல் புரிந்து கொள்ளாமல் போவதற்கான வாய்ப்பு இருக்கிறது. பைனரி என்பது பிரபஞ்ச அளவில் பொதுவான ஒரு விஷயமாக இருக்கலாம்" என விஞ்ஞானிகள் தங்களின் இத்திட்ட ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளனர்.

Binary codes

பைனரி என்பது கணிதத்தின் மிக எளிமையான ஒரு வடிவம். அதில் 0 அல்லது 1 என இரண்டு மட்டுமே உள்ளது. அதாவது அதை ஆம் அல்லது இல்லை, கருப்பு அல்லது வெள்ளை, நிறை கொண்டது அல்லது காலியாக இருக்கும் வெளி" என பொருள் கொள்ளலாம்.

இப்படி விஞ்ஞானிகள் ஏலியன்களோடு தொடர்பு கொள்ள, நிர்வாண படங்களை அனுப்புவது இது ஒன்றும் முதல் முறையல்ல. கடந்த 1972ஆம் ஆண்டு பயொனியர் 10 மற்றும் 1973ஆம் ஆண்டு பயோனியர் 11 ஆகிய விண்வெளி திட்டங்களின் போது, இது போன்ற நிர்வாண மனித இனத்தின் படங்களை அதன் ஆன்டனாக்களில் வைத்து அனுப்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் வாசகர்களுக்காக பிற தளங்களில் உள்ள முக்கிய செய்திகளை வழங்கும் முயற்சி இது. | #NewsSenseTNContent

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?