நமது பிரபஞ்சம் ’விரைவில்’ மரணமடையும் Pexels
அறிவியல்

நமது பிரபஞ்சம் ’விரைவில்’ மரணமடையும் - விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல்

Govind

பிரபஞ்சம் (பேரண்டம்) என்பது என்ன? யூனிவர்சஸ் எனும் லத்தின் வார்த்தையில் இருந்து வந்ததுதான் யுனிவர்ஸ் எனப்படும் பிரபஞ்சம். பிரபஞ்சம் என்பது இடம், காலம் மற்றும் அதில் இடம்பெற்றுள்ள கோள்கள், நட்சத்திரங்கள், விண்மீண்திரள்கள் (அண்டம்) மற்றும் அனைத்து வகையான பொருள் மற்றும் ஆற்றல் அனைத்தையும் கொண்ட ஒரு பெருவெளியாகும்.

பிக் பேங்க் தியரி எனப்படும் பெருவெடிப்புக் கோட்பாடு என்பது பிரபஞ்சத்தின் வளர்ச்சியை விளக்கும் பேரண்டவியில் கோட்பாடாகும். இதன்படி விண்வெளியும் நேரமும் 13.787±0.020 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாகத் தோன்றின.அன்றிலிருந்து பிரபஞ்சம் விரிவடைந்து வருகிறது. முழு பிரபஞ்சத்தின் அளவு தெரியவில்லை என்றாலும், பேரண்டவியல் சமன்பாடு அது குறைந்தபட்ச விட்டம் 23 டிரில்லியன் ஒளி ஆண்டுகள் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்படுகிறது. மேலும் கவனிக்கக்கூடிய பிரபஞ்சத்தின் அளவை அளவிட முடியும். இன்றைய நிலையில் பிரபஞ்சத்தின் விட்டம் என்பது சுமார் 93 பில்லியன் ஒளியாண்டுகள் கொண்டதாக கருதப்படுகிறது.

ஆகவே இதுவரை ஏற்றுக் கொண்ட கோட்பாட்டின் படி பிரபஞ்சம் விரிவடைவது என்பது அனைவரும் அறிந்த உண்மை. தி பிக் பேங் தியரி - பெருவெடிப்புக் கோட்பாட்டின் படி பிரபஞ்சம் கற்பனை செய்ய முடியாத ஒரு பாரிய பெருவெடிப்பில் உருவானது. மேலும் பருப் பொருளானது ஒரு புள்ளியில் இருந்து வெளியே வீசப்பட்டது. இதுதான் பிரபஞ்சத்தின் தோற்றம்.

எனவே மேற்கண்ட பிரபஞ்சத்தின் தோற்றத்தை வைத்துப் பார்க்கும் போது கடந்த 13.8 பில்லியன் ஆண்டுகளாக பிரபஞ்சம் விரிவடைந்து வருகிறது என்று கற்பனை செய்வது எளிது. எந்தவொரு வெடிப்பும் பொருளை வெளிப்புறமாக வீசுகிறது. எனவே விரிவடைதல் என்பது மிகவும் தர்க்க ரீதியானது.

இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், பிரபஞ்சத்தின் விரிவடையும் வேகம் குறைவதற்குப் பதிலாக தற்போது வேகமெடுத்துள்ளது. இதற்குக் காரணம் டார்க் எனர்ஜி எனப்படும் இருண்ட ஆற்றல். மர்மமான இந்த ஆற்றலின் வடிவம் புவியீர்ப்பு விசையை விட அதிகமான விரட்டும் ஆற்றலையும் விளைவையும் கொண்டுள்ளது. இதனால் முழு பிரபஞ்சமும் விரிவடைகிறது.

ஆனால் விஞ்ஞானிகள் இப்போது பிரபஞ்சம் குறிப்பிடத்தக்க வகையில் விரைவில் சுருங்கத் தொடங்கும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் அமெரிக்காவில் இலாப நோக்கமற்ற வகையில் இயங்கும் தேசிய அறிவியல் அகாடமியின் அறிவியல் செயல்முறைகள் இதழில் தங்கள் ஆராய்ச்சியை முன்வைத்துள்ளனர்.

இயற்பியலில், ஐந்திணை (quintessence) என்பது இருண்ட ஆற்றலின் ஒரு அனுமான வடிவமாகும். மேலும் துல்லியமாக ஒரு அளவிடல் புலம் (scalar field) என்று அழைக்கப்படுகிறது. பிரபஞ்சத்தின் விரிவாக்க விகிதத்தை கவனிப்பதற்கான விளக்கமாக இது முன்வைக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையின் முதல் உதாரணம் ராட்ரா மற்றும் பீபிள்ஸ் மற்றும் வெட்டரிச் ஆகியோரால் முன்மொழியப்பட்டது.

தற்போது மேற்கண்ட இந்த ஆய்வின் பின்னணியில் உள்ள விஞ்ஞானிகள் குழு பிரபஞ்சத்தின் ஒரு மாதிரியை உருவாக்கியுள்ளது. அதில் டார்க் எனர்ஜி என்பது இயற்கையின் நிலையான சக்தி அல்ல. தற்போது இந்த ஐந்திணை என்று அழைக்கப்படும் இந்த பொருள் காலப்போக்கில் சிதைந்துவிடும் என்று கருதப்படுகிறது.

எனவே அடுத்த 65 மில்லியன் ஆண்டுகளில் பிரபஞ்சத்தின் முடுக்கம் நின்றுவிடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அடுத்த 100 மில்லியன் ஆண்டுகளில் (விண்வெளியைக் கருத்தில் கொள்ளும்போது மிகக் குறுகிய காலம்) அது விரிவடைவதை நிறுத்தி சுருங்கத் தொடங்கும். அதற்குப் பிறகு பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு, பிரபஞ்சம் அதன் மரணத்தை சந்திக்கலாம். அல்லது ஒரு புதிய பரபஞ்சத்தின் இடமும் காலமும் புதிதாக தோன்றுவதாகக் கூட இருக்கலாம்.

கவலைப்படாதீர்கள். இந்த அழிவுக்கும், பிறப்பிற்கும் நீங்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கான நீண்ட காலம் உள்ளது. ஆகவே என்றோ பிரபஞ்சம் அழியப் போகிறது என்று உங்களது அன்றாட வாழ்க்கையில் கவலை கொள்ளாதீர்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?