Earth News Sense
அறிவியல்

விண்கல்லில் இருந்து தோன்றியதா பூமியின் முதல் உயிர்? - ஆய்வுகள் கூறும் ஆச்சர்ய தகவல்

மரபணு அல்லது டிஎன்ஏ உருவாவதற்குத் தேவையான ஐந்து இரசாயனக் கூறுகளில் மூன்று அந்த விண்கற்களில் இருப்பது கண்டறியப்பட்டது.

Govind

உயிர் எப்படித் தோன்றியது, எப்படி மறைகிறது என்பது பழமையான உலக நாகரீக காலம் தொட்டு இன்று வரை மனித குலம் கேட்டு வருகின்ற தத்துவஞானக் கேள்வி. இன்றைக்கு அறிவியல் உலகம் வெகுவாக வளர்ந்து விட்டாலும் துல்லியமான பதிலைத்தேடி விஞ்ஞானிகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். மேலும் உலகின் தோற்றம் மற்றும் அதன் அடுத்தடுத்த வளர்ச்சி விஞ்ஞானிகளுக்கு வற்றாத ஆர்வத்தைத் தூண்டுகிறது.

பூமி எனும் நமது கிரகத்தில் வாழ்ழும் உயிர்களின் ஆதாரத்தைக் கண்டுபிடிக்க அவர்கள் பெரும் எண்ணிக்கையிலான சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்திய ஆய்வு ஒன்றில் இது தொடர்பான பழைய கேள்விகளுக்கு முக்கியமான பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கை தென்படுகிறது. ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ பல்கலைக்கழகத்தின் குறைந்த வெப்பநிலை அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த யசுஹிரோ ஓபா மற்றும் மேரிலாந்தில் உள்ள நாசாவின் கோடார்ட் விண்வெளி விமான மையத்தின் வானியற்பியல் நிபுணர் டேனி கிளாவின் ஆகியோர் இணைந்து இது குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.

அதில் பூமியில் உயிர்கள் தோன்றுவதற்குத் தேவையான பொருட்கள் விண்வெளியிலிருந்து வந்திருக்கலாம் என்று தெரிய வந்திருக்கிறது.

நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதழில் இந்த ஆய்வு குறித்த கட்டுரை வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் கனடாவில் காணப்படும் இந்த விண்கற்கள் ஆய்வு செய்யப்பட்ட செய்தி விளக்கப்பட்டிருக்கிறது. மரபணு அல்லது டிஎன்ஏ உருவாவதற்குத் தேவையான ஐந்து இரசாயனக் கூறுகளில் மூன்று அந்த விண்கற்களில் இருப்பது கண்டறியப்பட்டது.

ஆய்வாளர்கள் பகுப்பாய்வு முறையை சரிசெய்த பிறகு மரபணுவின் மற்ற இரண்டு கூறுகளும் கண்டறியப்பட்டன. ஆய்வு செய்யப்பட்ட விண்கற்கள் மூன்று வெவ்வேறு மூலங்களிலிருந்து வந்தவை. ஒன்று 1950 இல் அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்திலிருந்தும், இரண்டாவது கனடாவில் உள்ள டாகிஷ் ஏரியிலிருந்து 2000 ஆம் ஆண்டிலும் மற்றும் மூன்றாவது ஆஸ்திரேலியாவில் விக்டோரியாவில் இருந்து 1969 ஆம் ஆண்டிலும் கண்டறியப்பட்டவை.

இவை அனைத்தும் கார்பனேசிய காண்டிரைட்டுகள் எனப்படும் கார்பன் நிறைந்த பாறைப் பொருளாகும். கார்பனேசியஸ் காண்டிரைட்டுகள் அல்லது சி காண்டிரைட்டுகள் என்பது காண்டிரிடிக் விண்கற்களின் ஒரு வகையாகும். அவற்றில் மிகவும் பழமையான அறியப்பட்ட விண்கற்களும் அடங்கும்.

Earth

ஜப்பானிய விஞ்ஞானி யசுஹிரோ ஓபாவின் கூற்றுப்படி, சோதனையில் பயன்படுத்தப்பட்ட முறையானது, விண்கற்களிலிருந்து கூறுகளைப் பிரித்தெடுப்பதற்காக வலுவான அமிலங்களைப் பயன்படுத்தவில்லை. இதன் விளைவாக, உலகின் முதல் உயிரினங்களின் வளர்ச்சியில் விண்கற்கள் பெரும் பங்கு வகித்தன என்ற கோட்பாட்டை ஆய்வு மேலும் வலுப்படுத்துகிறது.

எனில் விண்வெளியிலிருந்து வந்த விண்கற்கள் எங்கிருந்து எப்படி வந்து சேர்ந்தன? அவற்றில் இருக்கும் கார்பனேசிய காண்டிரைட்டுகள் பூமி வரை அழியாமல் எப்படி வந்து சேர்ந்தன? இதே மூலப்பொருள் விண்கற்கள் வேறு கிரகங்களில் விழுந்திருக்குமா? என்று பல கேள்விகளை அறிவியல் உலகம் ஆய்வு செய்து வருகிறது.

இப்போதைக்கு உயிரினத்தின் மூலக்கூறு பொருட்கள் விண்வெளியிலிருந்து வந்தது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அப்படி எனில் நமது தாயகம் இதுதான் என்று குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய வெளியில் இருக்கும் ஒன்றா? அல்லது இந்த ஒட்டு மொத்த பிரபஞ்சத்தின் இயக்கத்தில் தோன்றிய ஒன்றா? விரைவில் அறிவியல் உலகம் இதற்கும் பதிலைக் கண்டுபிடிக்கும்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?