Search Engines Pexels
அறிவியல்

Internet Explorer வரிசையில் காணாமல் போன 5 முக்கிய தளங்களை தெரியுமா?

முன் நாட்களில், அதிகமாக பயன்படுத்தப்பட்ட இணயதளங்களில் சில இன்று பயன்பாட்டில் இல்லை. தொழில்நுட்பத்தால் அதிகரித்த காலத்தின் வேகத்தில் காணமல்போன சில முக்கியமான தளங்களை இப்போதுக் காணலாம்.

Keerthanaa R

இன்டெர்நெட் தோன்றிய காலத்திலிருந்து, தகவல் தொடர்பு துறை அடைந்த வளர்ச்சி எல்லையற்றது. மனிதர்களின் வாழ்வை டெக்னாலஜி மாற்றியமைத்து என்றால் அது மிகையாகாது. வாழ்வியல் ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் நம் அன்றாடத்தில் இன்டெர்னெட் மற்றும் டெக்னாலஜி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

தொழில்நுட்பங்களை எப்போதும் நாம் டைனமிக் என்போம். காரணம், மாற்றங்கள் அதன் பெரும் பகுதி. காலத்திற்கேற்ப, அதன் தேவைகளுக்கு ஏற்ப டெக்னாலஜி மாறும், மாற்றப்படும்.

Search Engines

இன்று புழக்கத்தில் இருக்கும் மிக முக்கிய தேடுதல் தளங்கள் (search engines) கூகுள் க்ரோம், சஃபாரி போன்றவை. ஆனால், முன் நாட்களில், அதிகமாக பயன்படுத்தப்பட்ட டெக்னாலஜி தளங்களில் சில இன்றைய தேதியில் பயன்பாட்டில் இல்லை என்பதை அறிவோமா?

சில தளங்கள் முற்றிலுமாக நம் பயன்பாட்டிலிருந்து கடந்துவிட்டன. அந்த தளங்களை வழங்கிய நிறுவனங்களே அவற்றின் சேவையை நிறுத்தியும்விட்டது.

அந்தவரிசையில் முன்பு பயன்பாட்டிலிருந்து இன்று காணாமல் போன சில டெக் தளங்கள் இதோ...

G+

G+ - கூகுள் பிளஸ்:

2011 ஆம் ஆண்டு, முகநூல் மற்றும் டிவிட்டருக்குப் போட்டியாக களமிறக்கப்பட்ட தளம் தான் G+. ஆனால், அவற்றிற்கு இணையான சேவைகளையும், சுவாரஸ்யத்தையும் G+ கொடுக்க தவறியதால், அதன் மீதான எதிர்பார்ப்பு குறைந்து, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 அன்று ஷட் டவுன் செய்யப்பட்டது.

ஆர்குட் (orkut):

கூகுளின் சோஷியல் நெட்வர்க்கிங் தளமான ஆர்குட், இந்தியா மற்றும் பிரேசிலில் மிகவும் பயன்படுத்தப்பட்ட தளமாகும். 2004 ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆர்குட், 2008ல் உச்சத்தை தொட்டது. ஆனால் வர வர அதன் பயன்பாடு குறையத் தொடங்கி, மற்ற தளங்களின் போட்டி அதிகரித்ததால், கூகுள் ஆர்குட்டை 2014 உடன் திரும்பப்பெற்றது. இதன் ஆர்கைவ் வெர்ஷனை இன்றும் பலர் பயன்படுத்தித்தான் வருகின்றனர்

Orkut

யாஹூ (Yahoo):

2005ல் துவங்கப்பட்ட யாஹூ, கடந்த ஆண்டு வரை மிக முக்கியமான வினா விடை தளமாக இருந்தது. யாஹூ ஆன்சர்ஸ் எனப்படும் இந்த தளம் மனிதனின் எந்தவொரு சந்தேகத்திற்கும் பதிலளிக்கும். ஆனால், காலப்போக்கில் ரெட்டிட், கோரா போன்ற தளங்களின் வருகை, இதன் பயன்பாட்டைக் குறைக்கவே, கடந்த ஆண்டு மே மாதத்துடன் யாஹூவின் சேவை நிறுத்தப்பட்டது.

Yahoo

இன்டெர்னெட் எக்ஸ்ப்லோரர்(Internet Explorer)

கூகுளின் க்ரோம் வருவதற்கு முன், இன்டெர்னெட் எக்ஸ்ப்லோரர் தான் கிங். 1995ல் லான்ச் செய்யப்பட்ட இத்தளம், Microsoft நிறுவனத்தின் ஒரு பழமையான browser. முதலில் விண்டோஸ் 95 உடன் வந்த இந்த தளம், பின்னர் இலவசமாகக் கொடுக்கப்பட்டது. 2003ல் 95% பேர் இந்த தளத்தை தான் பயன்படுத்தியிருந்தனர். கடந்த ஜூன் 15க்கு மேல், Internet Explorer - யின் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

Internet Explorer

வைன்(Vine)

குறுகிய நேரம் கொண்ட காணொலிகளை (short form videos) உருவாக்குவதற்கான ஒரு செயலியாக 2013ல் டிவிட்டரால் இந்த வைன் தளம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 6 வினாடிகளுக்குள் இருக்கிற வீடியோக்களை மட்டுமே பகிரமுடியும். அளவுக்கு அதிகமான பயனர்களை குறுகியகாலத்தில் இந்த செயலி பெற்றிருந்தாலும், 2016ல் வைனின் தாய் நிறுவனமான டிவிட்டர் அதன் சேவையை ரத்து செய்தது.

Vine

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?