நம் பூமியில் 7 கண்டங்கள் உள்ளன. ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா, தென அமெரிக்கா, ஆஸ்ட்ரேலியா ஓசேனியா, அண்ட்டார்ட்டிகா. இந்த ஏழுடன் நமது கண்டங்கள் முடிந்து விட்டனவா? இல்லை. எட்டாவதாக ஒரு கண்டம் இருந்திருப்பதற்கான வாய்ப்பை அறிவியல் உலகம் ஆய்வு செய்து வருகிறது. அதைப் பற்றி இத்தொடரில் காண்போம்.
ஏபெல் டாஸ்மான்
தொலைந்து போன 8-வது கண்டத்தை கண்டுபிடிக்க 375 ஆண்டுகளுக்கே ஒரு முயறசி துவங்கியது.
அது 1642-ம் ஆண்டு. ஏபெல் டாஸ்மான் டச்சு நாட்டைத் சேர்ந்த ஒரு அனுபவம் வாய்ந்த முரட்டுத்தனமான மாலுமி. ஒரு முறை குடிபோதையில் அவர் தனது குழுவினரை தூக்கிலிட முயன்ற போது ஒரு பெரிய கண்டம் தெற்கு அரைக்கோளத்தில் இருப்பதை நம்பினார். அதைக் கண்டுபிடிப்பதிலும் உறுதியாக இருந்தார்.
டெர்ரா ஆஸ்ட்ராலிஸ்
அக்காலத்தில் பூமியின் இப்பகுதி ஐரோப்பியர்களுக்கு ஒரு மர்மமாகவே இருந்தது. ஆனால் அங்கே ஒரு பெரிய நிலப்பகுதி இருக்க வேண்டும் என்பதில் அவர்கள் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தனர். அதற்கு முன்கூட்டியே டெர்ரா ஆஸ்ட்ராலிஸ் என்று பெயரிட்டிருந்தனர். வடக்கில் உள்ள தங்களது சொந்தக் கண்டத்தை சமப்படுதும் வண்ணம் தெற்கில் இப்படி ஒரு பகுதி இருக்க வேண்டும் என்று நம்பினர்.
எனவே 1642-ம் ஆண்டு ஆகஸ்டு 14 அன்று, டாஸ்மன் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள தனது நிறுவனத்தின் தளத்திலிருந்து இரண்டு சிறிய கப்பல்களுடன் புறப்பட்டு மேற்கு, பின்னர் தெற்கு, பின்னர் கிழக்கு நோக்கிச் சென்று இறுதியில் நியூசிலாந்தின் தெற்கு தீவில் பயணத்தை முடித்தார்.
மாவோரி மக்கள்
அங்கே பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே குடியிருந்ததாக கருதப்படும் மாவோரி மக்கள் இருந்தனர். அவர்களுடனான டாஸ்மன் குழுவின் முதல் சந்திப்பு அமைதியாக இருக்கவில்லை. டாஸ்மான் வந்த இரண்டாம் நாளில் மாவோரி மக்கள் ஒரு படகில் அவரது கப்பலை மோதினர். அதில் 4 ஐரோப்பியர்கள் இறந்தனர். பதிலடியாக ஐரோப்பியர்கள் 11 பீரங்கிகளை வைத்து அவர்களை சுட்டனர். அவர்களுக்கு என்ன ஆ னது என்று தெரியவில்லை
Australia
கொஞ்சம் நகைச்சுவை உணர்வுடன் அந்த இடத்துக்கு மூர்டோனர்ஸ் அதாவது கொலையாளிகள் விரிகுடா என்று டாஸ்மன் பெயரிட்டார். பல வாரங்கள் ஆகியும் அவர் இந்த புதிய நிலத்தில் காலடி வைக்காமல் தனது நாட்டிற்கு திரும்பினார். தான் கண்ட நிலப்பகுதிதான் மிகப்பெரிய தெற்கு கண்டம் என்று அவர் நம்பினார்.
இக்காலத்தில் ஐரோப்பியர்களுக்கு ஆஸ்திரேலியா பற்றி தெரிந்திருந்தது. அது தாங்கள் தேடும் பழம்பெரும் கண்டம் அல்ல என்று அவர்கள நினைத்தார்கள். பின்னர் அவர்கள் மனம மாறிய போது டெர்ரா ஆஸ்ட்ராலிஸ் என்று பெயரிடப்பட்டது. டாஸ்மனுக்கு அந்தக் கண்டத்தைப் பற்றி சிறிதுதான் தெரிந்திருந்தாலும் அவரது நம்பிக்கை சரியாகவே இருந்த்து. ஆம். அங்கே ஒரு கண்டம் மறைந்திருக்கிறது.
Continent Underwater
2017 ஆம் ஆண்டில், புவியியலாளர்கள் குழு மாவோரி மொழியில் சிலாண்டியாவைக் கண்டுபிடித்ததாக அறிவித்தபோது அது தலைப்புச் செய்தியாகியது. அது 1.89 மில்லியன் சதுர மைல்கள் (4.9 மில்லியன் சதுர கிமீ) கொண்ட ஒரு பரந்த கண்டம், மடகாஸ்கரை விட ஆறு மடங்கு பெரியது.
உலகின் கலைக்களஞ்சியங்கள், வரைபடங்கள் மற்றும் தேடுபொறிகள் சில காலமாக ஏழு கண்டங்கள் மட்டுமே உள்ளன என்று பிடிவாதமாக இருந்தபோதிலும், மேற்கண்ட புவியலாளர் குழு இது தவறு என்று உலகிற்கு நம்பிக்கையுடன் தெரிவித்தது.
உலகின் இந்த புதிய கண்டம் சிறிய, மெல்லிய, இளைய கண்டமாகும். அதன் 94% பகுதி நீருக்கடியில் மூழகியிருக்கிறது. நியூசிலாந்து போன்ற சில தீவுகள் மட்டும் கடல் ஆழத்திலிருந்து விடுபட்டு மேலே தெரிகின்றன. அதனால்தான் நம் கண்களுக்கு இக்கண்டம் தெரியாமல் நெடுங்காலம் மறைந்தே இருந்திருக்கிறது.
ஆனால் இது ஆரம்பம்தான். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, கண்டம் எப்போதும் போல் புதிராகத்தான் இருந்தது. அதன் ரகசியங்கள் பொறாமைப்படும் அளவில் இன்னும் 6,560 அடி (2 கிமீ) தண்ணீருக்கு அடியில் பாதுகாக்கப்படுகின்றன. இக்கண்டம் எப்படி உருவானது? அங்கு வழக்கமாக என்ன வாழ்ந்தது? அது எவ்வளவு காலம் நீருக்கடியில் இருந்திருக்கிறது?
2017 ஆம் ஆண்டில், புவியியலாளர்கள் குழு மாவோரி மொழியில் சிலாண்டியாவைக் கண்டுபிடித்ததாக அறிவித்தபோது அது தலைப்புச் செய்தியாகியது. அது 1.89 மில்லியன் சதுர மைல்கள் (4.9 மில்லியன் சதுர கிமீ) கொண்ட ஒரு பரந்த கண்டம், மடகாஸ்கரை விட ஆறு மடங்கு பெரியது.
உலகின் கலைக்களஞ்சியங்கள், வரைபடங்கள் மற்றும் தேடுபொறிகள் சில காலமாக ஏழு கண்டங்கள் மட்டுமே உள்ளன என்று பிடிவாதமாக இருந்தபோதிலும், மேற்கண்ட புவியலாளர் குழு இது தவறு என்று உலகிற்கு நம்பிக்கையுடன் தெரிவித்தது.
உலகின் இந்த புதிய கண்டம் சிறிய, மெல்லிய, இளைய கண்டமாகும். அதன் 94% பகுதி நீருக்கடியில் மூழகியிருக்கிறது. நியூசிலாந்து போன்ற சில தீவுகள் மட்டும் கடல் ஆழத்திலிருந்து விடுபட்டு மேலே தெரிகின்றன. அதனால்தான் நம் கண்களுக்கு இக்கண்டம் தெரியாமல் நெடுங்காலம் மறைந்தே இருந்திருக்கிறது.
ஆனால் இது ஆரம்பம்தான். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, கண்டம் எப்போதும் போல் புதிராகத்தான் இருந்தது. அதன் ரகசியங்கள் பொறாமைப்படும் அளவில் இன்னும் 6,560 அடி (2 கிமீ) தண்ணீருக்கு அடியில் பாதுகாக்கப்படுகின்றன. இக்கண்டம் எப்படி உருவானது? அங்கு வழக்கமாக என்ன வாழ்ந்தது? அது எவ்வளவு காலம் நீருக்கடியில் இருந்திருக்கிறது?
ஜேம்ஸ் குக்
642 இல் டாஸ்மான் நியூசிலாந்தை கண்டுபிடித்து ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, பிரிட்டிஷ் வரைபடத்தை உருவாக்கிய ஜேம்ஸ் குக் தெற்கு அரைக்கோளத்திற்கு அறிவியல் பயணத்தின் பொருட்டு அனுப்பப்பட்டார். சூரியன் எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதைக் கணக்கிடுவதற்காக, பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் வீனஸ் கடந்து செல்வதைக் கவனிக்க வேண்டும் என்பதே அவருக்கு அளிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ வழிகாட்டுதலாகும்.
ஆனால், அவர் தனது முதல் பணியை முடித்த உடன் சீலிடப்பட்ட ஒரு உறையை எடுத்து திறந்து பார்க்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருந்தார். இது தெற்கு கண்டத்தை கண்டுபிடிப்பதற்கான ஒரு உயர்-ரகசிய பணியைக் கொண்டிருந்தது. அவரும் அதில் வெற்றி பெற்றிருக்க வாய்ப்பில்லை.
1895 ஆம் ஆண்டில் நியூசிலாந்தின் தெற்குக் கடற்கரையில் உள்ள தீவுகளின் தொடர் ஆய்வுக்காக ஒரு பயணத்தில் கலந்து கொண்டார், ஸ்காட்டிஷ் இயற்கை ஆர்வலரான சர் ஜேம்ஸ் ஹெக்டநர். இவரால்தான் சிலாண்டியாவின் இருப்புக்கான முதல் உண்மையான தடயங்கள் சேகரிக்கப்பட்டன. அவற்றின் புவியியல் ஆய்வுக்குப் பிறகு, அவர் நியூசிலாந்து " ஒரு மலைச் சங்கிலியின் எச்சம், ஒரு பெரிய கண்டப் பகுதியின் உச்சத்தை உருவாக்கியது, அது தெற்கு மற்றும் கிழக்கு நோக்கி நீண்டுள்ளது, அது இப்போது நீரில் மூழ்கியுள்ளது..." என்றார்.
சிலாண்டியா
இந்த ஆரம்பகட்ட ஆய்வுகளில் முன்னேற்றம் இருந்த போதிலும், சாத்தியமான சிலாண்டியா பற்றிய அறிவு தெளிவற்றதாகவே இருந்தது, மேலும் 1960-கள் வரை ஆய்வுகள் மிகக் குறைவாகவே நடந்தன. 2017 ஆம் ஆண்டு ஆய்வுக்கு தலைமை தாங்கிய ஜிஎன்எஸ் சயின்ஸின் புவியியலாளர் நிக் மோர்டிமர் கூற்றுப்படி இந்த துறையில் விஷயங்கள் மிகவும் மெதுவாகத்தான் நடக்கும்.
1960 களில், புவியியலாளர்கள் இறுதியாக ஒரு கண்டம் எப்படி இருக்க வேண்டும் என்ற இலக்கணத்திற்கு ஒப்புக்கொண்டனர். அதன்படி பரந்த அளவில், உயரமான, பல்வேறு வகையான பாறைகள் மற்றும் அடர்த்தியான மேலோடு கொண்டதாக ஒரு கண்டம் இருக்க வேண்டும். மேலும் அது பெரியதாகவும் இருக்க வேண்டும். இந்த வரையறை புவியலாளர்களுக்கு வேலை செய்ய ஊக்கமளித்த்து. இதன்படி ஆதாரங்களை சேகரிக்க முடிந்தால் உலகின் எட்டாவது கண்டம உண்மையானது என்பதை அவர்கள் நிரூபிக்க முடியும்.
இருப்பினும் பணி முன்னேறவில்லை. ஒரு கண்டத்தை கண்டுபிடிப்பது என்பது சிக்கலான, செலவு அதிகம் உள்ள பணியாகும். பின்னர் 1995 ஆம் ஆண்டில், அமெரிக்க புவி இயற்பியலாளர் புரூஸ் லுயெண்டிக் மீண்டும் இப்பகுதியை ஒரு கண்டம் என்று விவரித்தார் மற்றும் அதை சிலாண்டியா என்று அழைக்க பரிந்துரைத்தார்.
Zealandia
இதே காலத்தில் ஐ.நா.வின் கடல் சட்டம் பற்றிய மாநாடு முடிந்து அதன் விதிகள் அமலுக்கு வந்த்து. இதன்படி நாடுகள் தங்கள் கடற்கரையிலிருந்து 200 கடல் மைல்கள் அல்லது 370 கி.மீ வரை தங்களது சட்டப்பூர்வ எல்லைகளை நீட்டிக்க முடியும். அந்த எல்லைக்குள் வரும் கனிம, கச்சா எண்ணெய் வளம் அந்தந்த நாட்டிற்குரியது.
நியூசிலாந்து ஒரு பெரிய கண்டத்தின் ஒரு பகுதி என்பதை நிரூபிக்க முடிந்தால், அது தனது நிலப்பரப்பை ஆறு மடங்கு அதிகரித்துக் கொள்ள முடியும். திடீரென்று அந்தப் பகுதியை ஆய்வு செய்வதற்கான பயணங்களுக்கு ஏராளமான நிதி கிடைத்தது, மேலும் சான்றுகள் படிப்படியாக கிடைத்தன. சேகரிக்கப்பட்ட ஒவ்வொரு பாறை மாதிரியிலும், சிலாண்டியாவின் இருப்புக்கு ஆதாரமாய் இருந்தது.
இறுதியில் வளமான தரவுகள் செயற்கைக்கோள் மூலம் வந்தது. இது பூமியின் புவியீர்ப்பு விசையின் சிறிய மாறுபாடுகளை அதன் மேற்பரப்பில் வைத்து பல்வேறு பகுதிகளிலும் கடற்பரப்பை வரைபடமாக்க பயன்படுகிறது. இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம், ஆஸ்திரேலியாவைப் போல கிட்டத்தட்ட ஒரு வடிவற்ற தோற்றத்தில் சிலாண்டியா தெளிவாகத் தெரியும்.
சரி இப்போதாவது அறிவியல் உலகம் சிலாண்டியாவை 8வது கண்டமாக ஏற்றுக் கொண்டதா? இரண்டாம் பாகத்தில் பார்ப்போம்.