Nothing Phone NewsSense
அறிவியல்

லண்டன் நிறுவனத்தை அலற விட்ட தெலுகு மக்கள்: #DearNothing இந்திய அளவில் டிரெண்டாவது ஏன்?

Nothing என்பது ஒரு தொழில்நுட்ப நிறுவனம். கடந்த அக்டோபர் 2020-ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுக்க செயல்பட்டு வருகிறது.

NewsSense Editorial Team

ட்விட்டர் சமூக வலைதளத்தில் டாப் டிரெண்டிங் ஆவது பல தனிமனிதர்கள், நிறுவனங்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் அல்லது விமர்சனம் என்று கூறலாம்.

அப்படி இன்று (ஜூலை 13, புதன்கிழமை) காலை முதல் #DearNothing டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது. இது ஏன் டிரெண்டாகிறது? அப்படி என்ன பெரிதாக சாதித்துவிட்டது அல்லது விமர்சிக்கும் அளவுக்கு என்ன தவறு செய்துவிட்டது? வாருங்கள் பார்ப்போம்.

Nothing என்பது ஒரு தொழில்நுட்ப நிறுவனம். கடந்த அக்டோபர் 2020-ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுக்க செயல்பட்டு வருகிறது. ஸ்மார்ட்ஃபோன் மற்றும் இயர்ஃபோன்களைத் தயாரித்து வரும் இந்த நிறுவனம், ஜூலை 12ஆம் தேதி தன் ஃபோன் 1 ஸ்மார்ட்ஃபோனை அறிமுகப்படுத்தியது. இந்த செல்போன் ஃப்ளிப்கார்டில் வரும் ஜூலை 21ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரவிருக்கின்றன.

பொதுவாக இது போல புதிய செல்ஃபோன்கள் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் போது, சமூக வலைதளத்தில் செல்வாக்குமிக்க யூடியூபர்கள், இன்ஸ்டாகிராமர்களிடம் கொடுத்து கருத்துகள் கேட்கப்படும்.

ஃபோன் 1 அறிமுகப்படுத்தப்பட்ட போது, இந்தியாவில் இந்தி என்கிற மொழியைப் பேசும் யூடியூபர்கள் மற்றும் இன்ஸ்டாகிராமர்களுக்கு மட்டும் ஃபோன் 1 வழங்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவில் பேசப்பட்டு வரும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழி சார்ந்த சமூக வலைதள ஆளுமைகளுக்கு ஃபோன் 1 கொடுக்கப்படவில்லை.

தமிழ் மொழியில் தொழில்நுட்பம் சார்ந்த காணொளிகளைத் தயாரித்து வரும் பிரபல யூடியூபர் தமிழ் டெக் (Tamil Tech), தென்னிந்தியாவைச் சேர்ந்த சமூக வலைதள ஆளுமைகளுக்கு ஃபோன் 1 வழங்கப்படவில்லை என தன் காணொளி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். மேலும், குறைந்த எண்ணிக்கையிலேயே ஃபோன் 1 கைவசம் இருப்பதால் பலருக்குக் கொடுக்கப்படவில்லை என கம்பெனி தரப்பில் விளக்கம் கூறியதாகவும், ஆனால் சில சேனல்களுக்கு ஐந்து ஃபோன் 1 சாதனங்களைக் கொடுத்திருப்பதாகவும் தன் காணொளியில் பதிவு செய்துள்ளார்.

மேலும், தென்னிந்தியாவைச் சேர்ந்த தொழில்நுட்ப காணொளிகளைத் தயாரிக்கும் முக்கிய ஆளுமைகள் இணைந்து இந்த விஷயத்தை மக்கள் மத்தியில் கொண்டு வருவதாகவும் தன் காணொளியில் குறிப்பிட்டுள்ளார். அதே காணொளியில் C4ETech என்கிற சேனலுக்கு ஃபோன் 1 கிடைத்திருப்பதாகவும், அவர்கள் ஆங்கில சேனலை நடத்தி வருவதால் கிடைத்திருக்கலாம், அவர்களோடு ஃபோன் 1 குறித்து பேசவில்லை என்றும் தெளிவுபடுத்தி இருக்கிறார். தமிழ் டெக் கூறியது போலவே C4ETech Tamil யூடியூப் சேனலில் ஃபோன் 1 குறித்து ஒரு காணொளி பிரசுரமாகியுள்ளது.

சரி மீண்டும் பிரச்சனைக்கு வருவோம்.

தென்னிந்தியாவின் பிரபல டெக் யூடியூப் சேனல் உரிமையாளர்கள், இப்பிரச்சனை குறித்து அழுத்தம் திருத்தமாக தங்கள் தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இத்தனைக்கும் Nothing நிறுவன ஸ்மார்ட்ஃபோன்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாக பல முன்னணி பத்திரிகைகளிலேயே செய்தி வெளியாகியுள்ளது.

இந்த விஷயம் பரவத் தொடங்கிய பின், சமூக வலைதளத்தில் குறிப்பாக ட்விட்டரில் #Dearnothing டிரெண்டாகத் தொடங்கியது. மெல்ல மொழி சார்ந்த பிரச்சனையும், கோபமும், ஆதங்கமும் வெளிப்படத் தொடங்கியது.

ஒட்டுமொத்த தென்னிந்தியர்களும் ட்விட்டரில் Nothing நிறுவனத்தை ரவுண்டுகட்டி விளாசத் தொடங்கிவிட்டனர்.

பிரபல தெலுகு மொழி தொழில்நுட்ப யூடியூபரான பிரசாத் டெக் இன் தன் ட்விட்டர் பக்கத்தில் " இந்தியாவில் ஐந்து மாநிலங்கள் தென்னிந்தியாவில் இருக்கின்றன. அம்மாநில மக்கள் தங்கள் மொழிகளிலேயே காணொளிகளைக் காண விரும்புகிறார்கள்" என ட்விட் செய்துள்ளார்.

மற்றொரு ட்விட்டர் பயனர் "தமிழ், தெலுகு, கன்னடா, மலையாளம் பேசும் மக்களால் Nothing நிறுவனத்தின் ஃபோன் 1-ஐ வாங்க முடியும், ஆனால் இப்போது இல்லை" என பதிவிட்டுள்ளார்.

தென்னிந்தியர்களுக்கு ஃபோன் 1 இல்லை எனில், எதற்கு தமிழ்நாட்டில் அதை ஏன் தயாரிக்க வேண்டும் என மற்றொரு பயனர் பதிவிட்டிருந்தார்.

ட்விட்டர்வாசிகளில் மற்றொரு பிரிவினர் 'நாங்கள் இந்தியர்கள், ஹிந்தியர்கள் அல்ல' என பதிவிட்டிருந்தனர். வேறொரு பயனர், இந்திய ரூபாய் தாளில் தென்னிந்தியாவின் 4 மொழிகள் உட்பட 15 மொழிகள் அச்சிடப்பட்டிருப்பதை படமெடுத்து பதிவு செய்திருந்தார். உங்களுக்கு தென்னிந்தியர்களின் பலம் தெரியவில்லை என்றால் கேஜிஎஃப், பாகுபலி போன்ற படங்களின் பட்ஜெட்டை கூகுளில் தேடிப் பாருங்கள் என்றும் கடுமையாகக் பதிவிட்டிருந்தார்.

மற்றொரு பயனர், நாங்களும் இந்தியர்கள் தான் என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

தற்போதைய நிலவரப்படி #DearNothing ஹேஷ்டேக், இந்திய அளவில் நான்காவது இடத்தில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது. இதுவரை 2.7 லட்சம் முறை #DearNothing ஹேஷ்டேக் ட்விட்டரில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது உண்மையிலேயே தென்னிந்திய மாநிலங்களை புறக்கணிக்க மேற்கொள்ளப்பட்டதா அல்லது சந்தைப்படுத்தல் யுக்தியா என்பதை Nothing நிறுவனம் தான் விளக்கம் கொடுக்க வேண்டும். விரைவில் நிறுவன தரப்பிலிருந்து பதில் வரும் என எதிர்பார்க்கலாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?