Chat GPT என்றால் என்ன? அது எப்படி வேலை செய்கிறது? ஓர் எளிய விளக்கம்! Twitter
அறிவியல்

Chat GPT என்றால் என்ன? அது எப்படி வேலை செய்கிறது? ஓர் எளிய விளக்கம்!

NewsSense Editorial Team

உலகமே ஆட்டோமேஷனில் மூழ்கும், இனி எல்லா வேலைகளையும் எந்திரங்கள் மட்டுமே செய்யும். மனிதர்கள் விரைவில் வேலையை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என தொழில்நுட்பத்தைக் குறித்து சிலர் அச்சப்படுவதை நாம் பார்த்திருப்போம் அல்லது நாமே கூட கொஞ்சம் பயந்து போயிருபோம். ஆனால் அதே தொழில்நுட்பம் தான் இன்று மனிதர்களின் அறிவையும், கற்றல் திறனையும், பாடங்கள் பயிற்றுவிப்பதிலும், பெரிய பெரிய ஆராய்ச்சிகளையும் அடுத்த தளத்துக்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கிறது.

அதில் ஒன்று தான் இந்த Chat GPT என்றழைக்கப்படும் சாட் ஜெனரேட்டிவ் ப்ரீ - டிரெயிண்ட் டிரான்ஸ்ஃபார்மர். நாம் இதுநாள் வரை சாட் - பாட்களைக் குறித்து கேள்விப்பட்டிருப்போம், மெய்நிகர் உதவியாளர்களைக் குறித்து கேள்விப்பட்டிருப்போம். அவை அனைத்தும் உங்களோடு உரையாடும் தொழில்நுட்பத்தின் முகங்கள் என்றால், ஜி பி டி அதன் உயிர்நாடி அல்லது அதன் மையத் தொழிநுட்பம் எனலாம்.

ஜி பி டி என்றால் என்ன?

நாம் கொடுக்கும் உள்ளீட்டைப் புரிந்து கொண்டு, இயற்கையான மொழியில் சொற்களைக் கோர்த்து விடை கொடுக்கும் ஒரு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் தான் இந்த ஜி பி டி.

முதலில் ஜி பி டிக்கு நிறைய தரவுகள் குறிப்பாக வரி வடிவ, சொல் வடிவத் தரவுகள் கொடுக்கப்படும். பிறகு ஜி பி டி, டிரான்ஸ்ஃபார்மர் என்கிற அல்காரிதத்தைப் பயன்படுத்தி ஒரு மனிதன் விடையளிப்பது போல, தன்னிடம் இருக்கும் தரவுகளைப் பயன்படுத்தி பதில் சொல்லக் கற்றுக்கொள்ளும்.

ஜி பி டி எப்படி செயல்படுகிறது?

பல தரப்பட்ட கட்டுரைகள் அலல்து உரையாடல்கள் ஜி பி டிக்கு வழங்கப்படும். அதை ஜி பி டி பயன்படுத்திக் கொண்டு, மொழியின் கட்டமைப்புகளையும், வடிவங்களையும் கற்றுக் கொள்ளும். ஜி பி டி தொழில்நுட்பம் போதுமான அளவுக்கு மொழியைக் குறித்து உணர்ந்து கொண்ட பிறகு, கேட்கும் கேள்விகளைப் பொருத்து, ஜி பி டி சொந்தமாக தன் சொல் வங்கியில் இருந்து பதங்களைப் பயன்படுத்தி பதிலளிக்கத் தொடங்கும்.

உதாரணத்துக்கு: இன்றைய வானிலை எப்படி இருக்கிறது என ஜி பி டி-யிடம் நீங்கள் கேட்டால்... "இன்றைய வானிலை தெளிவாகவும், 75 டிகிரி ஃபேரன்ஷீட் செல்ஷியஸ் தட்பவெப்பநிலை உடன் வெப்பமாகவும் இருக்கிறது" என விடையளிக்கலாம்.

காரணம், ஜி பி டி தொழில்நுட்பம், வானிலை குறித்த விஷயங்களை கற்றுக் கொண்டுவிட்டது, அதோடு அதை எப்படி ஒரு மனிதன் சொல்வதைப் போல கோர்வையாக வெளிப்படுத்த வேண்டும் என்பதையும் கற்றுணர்ந்து கொண்டுள்ளது.

ஜி பி டிக்குப் பின்னிருக்கும் அல்காரிதம் என்ன?

ஜி பி டிக்கு பயிற்சியளிக்க என்ன அல்காரிதம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என நீங்கள் வியக்கலாம். நாம் முன்பே பார்த்தது போல ஜி பி டி தொழில்நுட்பம் டிரான்ஸ்ஃபார்மர் என்கிற அல்காரிதத்தைப் பயன்படுத்தி வருகிறது.

இந்த அல்காரிதம் நியூரல் நெட்வொர்க்கின் அடிப்படையில் இயங்குகிறது. இது ஒரு வகையான கணினி ப்ரொகிராம் தான் என்றாலும், அது மனித மூளை வேலை செய்வதை ஒட்டி வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

டிரான்ஸ்ஃபார்மர் அல்காரிதத்தால் தரவுகள், வரி வடிவங்கள் போன்றவைகளை பகுத்தாய்ந்து புரிந்து கொள்ள முடியும். அதைப் பயன்படுத்தி மனிதர்கள் பேசுவதைப் போன்ற உரையாடல்களை ஜி பி டி உருவாக்கும்.

சுருக்கமாக ஜி பி டி என்பது ஒரு வகையான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம். அதனால் மனிதர்கள் பேசும் மொழியைப் புரிந்து கொண்டு, அதே சொற்களைப் பயன்படுத்தி பதிலளிக்க முடியும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?