Cat  Canva
அறிவியல்

விலங்குகளை விட மனிதர்கள் குறைவாகவே தூங்க என்ன காரணம் தெரியுமா?

Govind

இணையம், செல்பேசி வந்த பிறகுதான் மக்கள் தூக்கம் போதுமான அளவில் இல்லை என உணரத் துவங்கியிருக்கிறார்கள். காலையில் இன்ஸ்டாகிராமில் விழித்து இரவு தூங்குவதற்கு முன் பேஸ்புக்கோடும், நாள் முழுவதும் வாட்ஸ் ஆப்போடும் கழிகிறது வாழ்க்கை. தூக்கமின்மை என்று பேசினால் அதற்குப் பலரும் உடனே கைகளை உயர்த்துவார்கள். தூக்கமில்லாதவர்கள் சிறுபான்மை என்று நினைக்கிறீர்களா? இல்லை, பெரும்பாலான மக்கள் தூக்கமின்மையால் அவதிப்படுகிறார்கள்.

எனவே உங்களுக்கு போதுமான தூக்கமில்லை என்று தோன்றினால் நீங்கள் தனியாக இல்லை. ஆனால் சிம்பன்ஸி, பஃபூன்ஸ் போன்ற விலங்குகளோடு ஒப்பிடும் போது மனிதர்களின் சராசரி தூக்கம் குறைவாகவே இருக்கிறது. இதை ஒரு புதிய ஆய்வு கண்டுபிடித்திருக்கிறது.

இந்த புதிய ஆய்வை முன்னின்று நடத்தியவர்கள் சார்லஸ் நன் மற்றும் டேவிட் சாம்சன் ஆகிய பரிணாம மானுடவியலாளர்கள். மனிதர்கள் எப்படி பரிணாம வளர்ச்சியடைந்துள்ளனர் என்பதை அவர்கள் ஆய்வு செய்கிறார்கள்.

sleepless

சார்லஸ் நன் அமெரிக்காவில் இருக்கும் டர்ஹாமில் உள்ள டியூக் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். சாம்சன் கனடாவில் உள்ள டொராண்டோ மிசி சாகா பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார்.இருவரும் செய்த இந்த ஆய்வில் மனிதர்கள் உள்ளிட்ட 30 வகையான விலங்குகளின் தூக்க முறைகளை ஒப்பிட்டனர்.

பெரும்பாலான விலங்கினங்கள் தினமும் 9 முதல் 15 மணி நேரம் தூங்கும் போது மனிதர்கள் சராசரியாக 7 மணிநேரம் மட்டுமே தூங்குகிறார்கள். சார்லஸ் மற்றும் சாம்சன் இருவரும் தமது கண்டுபிடிப்புகளை அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் பிசிகல் ஆந்த்ரோபயலாஜி எனப்படும் ஆய்வு இதழில் வெளியிட்டுள்ளனர்.

sleepless

நாம் ஏன் குறைவாகத் தூங்குகிறோம்?

வாழ்க்கை முறை மற்றும் உயிரியல் காரணங்கள் அடிப்படையில் மனிதர்கள் 9.55 மணிநேரம் தூங்கவேண்டுமென இந்த ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். ஆய்வில் உள்ள விலங்குகள் அனைத்தும் இவர்கள் கணித்த படி சரியாகத் தூங்குகின்றன. மனிதர்கள் மட்டும் ஏன் தூங்குவதில்லை?

sleepless

போதுமான அளவுக்குத் தூங்கவில்லை?

மனித வாழ்க்கையின் பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்ட இரண்டு அம்சங்களே தூக்கம் குறைந்ததற்குக் காரணமென ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

முதல் விஷயம் மனித மூதாதையர்கள் மரங்களிலிருந்து இறங்கி தரையில் உறங்குவதை மெல்ல மெல்ல கற்றுக் கொள்கிறார்கள். அப்படி தரையில் உறங்கும் போது தம்மை வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக அவர்கள் நீண்ட நேரம் விழித்திருக்க வேண்டி இருந்தது.

இரண்டாவது அம்சம் புதிய திறன்களைக் கற்றுக்கொள்வதற்கும், அதை மற்றவர்களுக்குக் கற்பிப்பதற்கும், பலரோடு சமூக தொடர்பை ஏற்படுத்துவதற்கும் மனிதர்கள் முயன்றனர். இதனால் ஏற்பட்ட மன ரீதியான அழுத்தம் காரணமாக அவர்களுக்குத் தூங்குவதற்கான அதிக நேரம் கிடைக்கவில்லை.

sleepless

rapid-eye movement - or REM விரைவான கண் இயக்கம் என்பது தூக்கத்தில் நாம் கனவு காணும் போது கண் விழிகள் வேகமாக அசைவதைக் குறிக்கிறது. நாம் காணும் கனவு என்பது நம்முடைய கற்றல் மற்றும் நினைவாற்றலுடன் இணைக்கப்பட்டுள்ளது. தூக்கம் குறையும் போது இந்த விரைவான கண் இயக்கம் ஒரு முக்கிய பங்கை எடுத்துக் கொள்கிறது.

விரைவான கண் இயக்கம் இல்லாத தூக்கம் என்பது மனிதர்களிடம் குறைவாக இருப்பது ஆச்சரியமளிக்கிறது என்கிறார் சார்லஸ் . இப்படி தூக்கம் குறைவாக இருப்பதற்கு நாம் ஏதாவது கொடுக்க வேண்டியுள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

Tiger

இசெபெல்லா கபெல்லினி இங்கிலாந்தில் உள்ள ஹல் பல்கலைக்கழகத்தில் பரிணாம உயிரியலாளராக பணியாற்றுகிறார். விலங்கினங்களை விட மக்கள் ஆச்சரியப்படும் வகையில் குறுகிய நேரம் தூங்குகிறார்கள் என்பதை இந்த புதிய ஆய்வு கூறுவதை அவர் கூறுகிறார். அதே நேரம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 30 விலங்கினங்கள் என்பது போதுமானதல்ல.

இதை வைத்து எந்தவொரு உறுதியான முடிவையும் எட்டுவது சிரமம். 300 அல்லது அதற்கு மேற்பட்ட முக்கியமான விலங்கினங்கள் உள்ளதால் அவற்றையும் ஆய்வு செய்ய வேண்டுமென இவர் கருதுகிறார்.

Dog

விலங்கினங்களின் தூக்கத்தைக் கணக்கிடுதல்

ஆய்வாளர்கள் சார்லஸ் நன் மற்றும் சாம்சன் இருவரும் விலங்குகள் மற்றும் அவற்றின் சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு விலங்கினமும் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்று மதிப்பிடுகிறார்கள். அவற்றில் 20 இனங்களுக்கு விரைவான கண் இயக்கம், மற்றும் இது இல்லாத தூக்கம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதற்கு போதுமான தரவுகள் உள்ளன.

இத்தகைய மதிப்பீடுகள் விலங்குகள் குறித்து இதற்கு முன்பு செய்த ஆய்வுத் தகவல்களின் அடிப்படையில் இருந்தன. அந்த ஆய்வுகள் பெரும்பாலும் சிறைபிடிக்கப்பட்ட விலங்குகளை உள்ளடக்கியது. அவை உறக்க நிலையில் இருக்கும் போது அவற்றின் மூளை செயல்பாட்டை அளவிடும் மின்முறைகளை அணிந்திருந்தன. இதன்படி ஒவ்வொரு விலங்கினத்திற்கும் தூக்க அளவுகளை ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

Research

அதன் பிறகு நடைபெற்ற ஆய்வுகளில் இந்த தூக்க முறைகளைக் குறித்து உயிரினங்களின் உயிரியல், அவற்றின் நடத்தை மற்றும் சூழல்களின் பல்வேறு அம்சங்களுக்கிடையேயான தொடர்புகள் பற்றிய விசயங்களை ஆய்வு செய்தனர்.

சான்றாக இரவு நேர விலங்குகள் பகலில் விழித்திருப்பதை விட அதிக நேரம் தூங்கும். சிறிய குழுக்களாகப் பயணிக்கும் இனங்கள் தம்மை வேட்டையாடும் விலங்கினங்கள் இருக்கும் என்பதால் திறந்த சமவெளி வாழ்விடங்களில் குறைவாகவே தூங்குகின்றன.

இத்தகைய தகவல்களைக் கணக்கிட்டுப் பார்த்தால் மனிதர்கள் ஒவ்வொரு நாளும் சராசரியாக 9.55 மணி நேரம் தூங்க வேண்டுமென ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். ஆனால் மனிதர்கள் உண்மையில் சுமார் 7 மணி நேரம் மட்டுமே தூங்குகிறார்கள். சிலர் இன்னும் குறைவாகவே தூங்குகிறார்கள். தூங்க வேண்டிய நேரத்திற்கும் தூங்கும் நேரத்திற்கும் இடையே 36% பற்றாக்குறை உள்ளது. இது இந்த ஆய்வில் உள்ள மற்ற விலங்கினங்களை விட அதிகமாகும்.

research

சார்லஸ் மற்றும் சாம்சன் மதிப்பீட்டில் மக்கள் தமது தூக்கத்தில் விரைவான கண் இயக்கம் அல்லது கனவிற்காக 1.56 மணி நேரத்தைச் செலவிடுகிறார்கள். ஆனால் விரைவான கண் இயக்கம் அல்லாத தூக்கம் போதுமான அளவுக்கு இல்லை. விரைவான கண் இயக்கம் இல்லாத தூக்கம் மனிதர்களுக்கு 8.42 மணிநேரம் இருக்க வேண்டும். ஆனால் மக்கள் தூங்குவது உண்மையில் 5.41 மட்டுமே.

ஆகத் தூக்கமின்மை என்பது ஏதோ நமது வாழ்க்கைப் பிரச்னைகள், கவலைகளால் மட்டும் வந்துவிடவில்லை. இது நமது உயிரியல் மற்றும் பரிணாம வளர்ச்சியோடு தொடர்புடையது. இனி நாம் போதுமான தூக்கத்தைப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் விஞ்ஞானிகள்தான் கண்டுபிடிக்க வேண்டும். அது வரை நாம் நமது தூங்கும் நேரத்தை அதிகரிக்க முயற்சி செய்வோம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?