வேற்று கிரகவாசிகள்  Pexels
அறிவியல்

Aliens : "என்னை வேற்று கிரகவாசிகள் கடத்தப் பார்க்கிறார்கள்" - அஞ்சும்

ஏதோ ஒன்று வெறுங்காலுடன் எனக்குப் பின்னால் உள்ள மண்ணில் ஓடுவதைக் கேட்டேன். திடீரென, அது கடந்து ஓடியபோது என் மீது மோதியது. என் மார்பு வெடிப்பது போல இருந்தது. அங்கே என்ன நடக்கிறது என்பதை நான் உணரும் முன்பே, நான் பீதியுடன் வீட்டிற்குத் திரும்பி ஓடினேன்.

Govind

நீங்கள் வேற்றுகிரகவாசிகளை நம்புகிறீர்களா? பூமியில் தோன்றாமல் உயிரினங்கள் நமது நீல கிரகத்திற்கு வெளியே வாழலாம் என்று நினைக்கிறீர்களா? சரி, சிலர் அதைச் சத்தியமாக நம்புகிறார்கள். வேற்றுகிரகவாசிகளுடனான அவர்களின் சந்திப்பு என்று அழைக்கப்படும் நிகழ்வுகள் புதிரானவை. அவை தொடர்பான கடுமையான கோட்பாடுகளை, மக்களில் சிலர் தொடர்ந்து பேசுகிறார்கள். சமீபத்தில், ஒரு பெண், தான் பல அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்களை (UFOs) பார்த்ததாகவும், இப்போது வீட்டை விட்டு வெளியே வரவே பயப்படுவதாகவும் கூறியுள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த பத்திரிகையான தி மிரரின் (The Mirror),அறிக்கையின்படி, 51 வயதான சச்சா கிறிஸ்டி, வேற்றுகிரகவாசிகளால் கடத்தப்படலாம் என்று அஞ்சுகிறார்.

அந்தப் பத்திரிகையின் இணையதளம் மேற்கோள் காட்டியபடி, சச்சா, "எனது சந்திப்புகளை விளக்குவது மிகவும் கடினம், நான் பார்த்ததை நம்புவது எனக்குக் கடினமாக உள்ளது" என்கிறார்.

Sacha Christie

" நான் எனது முழு வாழ்க்கையில் உள்ள காட்சிகளாகத்தான் அந்த அமானுஷ்ய காட்சிகள் இருக்குமோ என்று சிந்திக்க முயற்சித்தேன். ஆனால் அது எப்படிப் பார்த்தாலும் வேற்றுக்கிரக வாசிகளது வாழ்க்கை வடிவங்கள் என்பது மட்டுமே எனது முடிவு" என்று அவர் மேலும் கூறினார். "வானத்தைப் பார்ப்பது எனக்குப் பயமாக இருக்கிறது, நான் அடுத்து என்ன பார்க்கப் போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை" என்று அவர் அச்சத்துடன் கூறினார்.

பிரிட்டனின் லிவர்பூலில் இருக்கும் மெர்சிசைடில் பகுதியில் ஒரு இல்லத்தரசியாக கிறிஸ்டி இருக்கிறார் என்று அந்த இணைய தளம் கூறுகிறது. யுஎஃப்ஒக்கள் (UFOs) என்று அவர் கூறும்போது, ​​வானத்தில் விளக்குகள் பறப்பதை அவர் பார்த்திருக்கிறார். 1997 இல் வேல்ஸில் விடுமுறையில் இருந்தபோது சில நண்பர்களுடன் வேற்றுக் கிரக வாசிகளைச் சந்திருப்பதாகக் கூறுகிறார்.

Sacha Christie

இப்போது, ​​​​அவருடைய அனுபவங்கள் காரணமாக அவர் வெளிப்படையாக PTSD ( Post-traumatic stress disorder)நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இந்த நோய் என்பது ஒரு திகிலூட்டும் நிகழ்வால் ஏற்படும் நாட்பட்ட மன உளைச்சல் நோய் ஆகும்.

சமீபத்தில் தனக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தை அவர் மிரர் இணைய தளத்தில் பகிர்ந்து கொண்டார். அவர் வேற்றுகிரக வாசிகளைப் பார்த்ததாகக் கூறப்படும் போது விடுமுறையில் இருந்தார். மேலும் அவர் தனது முன்னாள் துணைவர் மற்றும் மகனுடன் க்ளின் செரியோக் என்ற சிறிய நகரத்தில் இருந்தார்.

அவர் சொன்னார்: "ஸ்டீவ் வெளியே வானத்தைப் பார்த்ததைப் பார்த்தேன், என்ன நடக்கிறது என்று பார்க்க நான் வெளியே ஓடினேன். வானத்தில் உள்ள இந்த ஒளிரும் விளக்குகளை அவர் சுட்டிக் காட்டினார், அவை எங்களை நெருங்க நெருங்க அவை பெரிதாகி வருவதாகத் தோன்றியது."

"மேகங்கள் மிகக் குறைவாக இருந்ததால், UFO-ன் நிழல்களும் வடிவமும் வானத்தில் பிரகாசமாக அலையும் ஜெல்லிமீன்களைப் போல தோற்றமளித்தன. அது கவர்ச்சியாக இருந்தது. அப்போதுதான் ஏதோ ஒன்று அடர்த்தியான புதரிலிருந்து வெளியே வந்து லூயியின் பாதத்தைத் தொட்டது. என்னால் நம்பவே முடியவில்லை. நான் அதிர்ச்சி அடைந்தேன்".

"அவரது காலில் ஏதோ தொட்டதாக லூயி என்னிடம் கூறினார். நான் அவரை நம்பினேன். ஆனால் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள நான் விளக்குகளை அதிகமாகப் பார்க்க விரும்பினேன். நான் இன்னும் ஒரு நிமிடம் அல்லது அதற்கு மேலும் நின்றேன். திடீரென்று ஏதோ ஒன்று வெறுங்காலுடன் எனக்குப் பின்னால் உள்ள மண்ணில் ஓடுவதைக் கேட்டேன்.”

"திடீரென, அது கடந்து ஓடியபோது என் மீது மோதியது. என் மார்பு வெடிப்பது போல இருந்தது. அங்கே என்ன நடக்கிறது என்பதை நான் உணரும் முன்பே, நான் பீதியுடன் வீட்டிற்குத் திரும்பி ஓடினேன். என்ன ஏது என்று தெரியாமல் கண்மூடித்தனமாகத் திக்கு திசை தெரியாமல் ஓடினேன். நான் ஓடியாக வேண்டும் என்பது மட்டும் எனக்குத் தெரியும்" - சாச்சா கிறிஸ்டி உணர்ச்சி பொங்கக் கூறினார்.

அவர் சொல்லியிருக்கும் அனுபவங்கள், கூற்றுக்கள் மிகவும் புதிரானவை. ஆனால் நாம் அவற்றை நம்ப வேண்டுமா? கிறிஸ்டி சொல்வதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?