தெலுங்கு வருடப்பிறப்பு NewsSense
ஆன்மிகம்

உகாதி உணர்த்தும் உண்மைகள் : தெலுங்கு வருடப்பிறப்பு

உகாதி என்பது யுகாதி என்ற சமஸ்கிருத வார்த்தையில் இருந்து உருவானது. “யுக்” என்றால் வயது என்றும் “ஆதி” என்றால் ஆரம்பம் என்று பொருளாகும். தமிழ் மக்களுக்கு தமிழ்ப்புத்தாண்டு எத்தனை சிறப்பானதோ அதே போன்று தெலுங்கு மக்களுக்கு இந்த யுகாதி பண்டிகை சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

ஆர்.ஜே. கிரேசி கோபால்.

பல பயிற்சிகள் செய்ததின் விளைவாக ஒரு முயற்சி வெற்றிபெறும். அந்த பயிற்சிகளும் முயற்சிகளும் நல்லதொரு தொடக்கத்தில் இருந்தால், நாளும் கோளும் கூட நமக்கு உற்ற துணையாக இருக்கும். சாதாரண நாளில் இறை தரிசனத்திற்கும் சிறப்பு நாளில் ராஜ அலங்கார தரிசனமும் கிடைப்பது போன்றது அது. அப்படி நல்ல தொடக்கமாக நற்செயல்களைத் துவங்கிடும் ஒரு நாளில் தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதியும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும்.

உகாதி என்பது யுகாதி என்ற சமஸ்கிருத வார்த்தையில் இருந்து உருவானது. “யுக்” என்றால் வயது என்றும் “ஆதி” என்றால் ஆரம்பம் என்று பொருளாகும். தமிழ் மக்களுக்கு தமிழ்ப்புத்தாண்டு எத்தனை சிறப்பானதோ அதே போன்று தெலுங்கு மக்களுக்கு இந்த யுகாதி பண்டிகை சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். அது மட்டுமின்றி ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா கர்நாடகா, கொங்கன் பகுதிகளில் வருடப்பிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இங்கே தமிழகத்தில் தமிழ் புத்தாண்டாகவும், பஞ்சாபில் வைசாஹியாகவும், அசாமில் பிஹுவாகவும், மேற்கு வங்கத்தில் நாப பார்ஷாவாகவும் ,ஒரிஸாவில் பாண சங்கராந்தியாகவும், சிந்தி மக்கள் சேதி சந்த் எனவும், மகாராஷ்டிர மக்கள் இதே நாளை குடிபாட்வா எனவும் , இந்த தினத்தை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.

யுகாதி வழிபாடு

யுகாதி பண்டிகை பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமை திதியில் கொண்டாடப்படும்அதிகாலை நீராடி, மாவிலைத்தோரணம் கட்டி,. விநாயகர், பெருமாள், கௌரி அம்பிகை மற்றும் இஷ்ட தெய்வம், குலதெய்வங்களை அலங்கரித்து, பால் பாயசம், போளி, புளியோதரை செய்து, தெய்வங்களுக்குப் படையலிட்டு, ஏழு ராகங்கள் பாடி, ஆரத்தி செய்வது வழக்கம். செய்த படையலை ஏழை எளியவர்களுக்கு உணவு வழங்குவது வழக்கம். வாசலில் ரங்கோலி கோலமிட்டு, “பஞ்சாங்க சரவணம்” என்னும் “பஞ்சாங்கம்” படித்து அந்த வருடத்தின் தன்மையை தெரிவிப்பது வழக்கம்.

யுகாதி தினத்தில் , நல்ல காரியங்கள் துவங்கினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதானால் அன்றைய நாட்களில் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

யுகாதி பச்சடி

ஆந்திராவில் யுகாதி பச்சடி என்றும், கர்நாடகத்தில், தேவுபெல்லா என்றும் அழைக்கப்படும் சிறப்பு வாய்ந்த பச்சடி அறுசுவை கொண்டதாக இருக்கும். பச்சடியில், இனிப்புக்கு வெல்லம், கசப்புக்கு வேப்பம்பூ, துவர்ப்புக்கு மாங்காய், புளிப்புக்கு புளி தண்ணீர், காரத்திற்கு மிளகு மற்றும் உப்பு சேர்த்து தயாரிக்கப்படும்.

வாழ்க்கை என்பது இன்பம், துன்பம், ஏமாற்றம், தோல்வி, மகிழ்ச்சி, வெற்றி என எல்லாமே சேர்ந்ததுதான் என்பதை உணரும் பொருட்டு அறுசுவைகளும் கொண்ட பச்சடியை செய்வார்கள். உகாதி பச்சடியில் சேர்க்கப்படும் வெல்லம், மகிழ்ச்சியைக்குறிக்கிறது.

பஞ்சாக சரவணம்:

உகாதி தினத்தன்று அவரவர்கள் தங்கள் ஜோதிடரை வரவழைத்து பூஜைகள் செய்து, வீட்டில் இருப்பவர்களின் வருங்காலத்தை கணிக்கவும், வழி நடத்தல்களை கேட்டுக்கொள்ளவும், எந்த நேரத்தில் எச்சரியாக இருக்க வேண்டும், எப்பொழுதெல்லாம் செல்வமும் மகிழ்வும் செழிக்கும் என்பதெல்லாம் ஆரூடமாக அறிஅவ்தே பஞ்சாக சரவணம் என்று குறிக்கப்படுகிறது.

யுகாதி ஸ்லோகம்

சதாயூர் வஜ்ர தேஹாய சர்வ சம்பத்கராய ச |
சர்வாரிஷ்ட விணாசாய நிம்பஸ்ய தல பக்ஷ்ணம் ||

என்ற ஸ்லோகத்தை கூறி வழிபட்டு வரம் பெறலாம்.

தேவதை வழிபாடு

“தெலுங்கு தேவதை” வழிபாடும் பலகாலமாக இருந்து வருகிறது. ஒரு கையில் அமிர்த கலசம் மறுகையில் விவசாயிகளின் உயிர் “நெற்பயிர்” கொண்டு அருள் தரும் தெலுங்கு தேவதையை வழிபடுவதும் ஒரு மரபாகும்.

2022ல் யுகாதி எப்போது?

தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி 2022-ல் ஏப்ரல் 1-ம் தேதி இரவு 11.53 மணிக்கு தொடங்கி, ஏப்ரல் 2-ம் தேதி இரவு 11.58 மணி வரை கொண்டாப்படுகிறது.

யுகாதி தத்துவம்

மனித வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் மாறிவரும் என்பதையும் அதைப் பொறுமையோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த யுகாதி பண்டிகை உணர்த்துகிறது.

அதிக காரம் ஏன்?

ஜோதிட ரீதியாக, தெலுங்கு பேசுபவர்கள் செவ்வாயின் ஆதிக்கம் நிறைந்து காணப்படுவார்கள். ஒல்லியான தேகம் கொண்டிருப்பார்கள்., எளிதில் உணர்ச்சி வசப்படுவார்கள், முரட்டுத்தனம் கடின உழைப்பு, அதிக காரம் மிகுந்த உணவுகளை விரும்பி சாப்பிடுவது போன்றவை எல்லாம் செவ்வாயின் காரக குணங்களாகும். பெரும்பாலான ஆந்திர மக்கள் அல்லது தெலுங்கு பேசுபவர்கள், இத்தகைய குணங்களை கொண்டிருப்பார்கள்.

அனைத்து மதத்தவரும் பல மொழி பேசுபவர்களும் நிறைந்த நமது நாட்டில், மக்கள் மன நிம்மதியுடனும் உற்சாகத்துடனும் செல்வ வளம் செழிக்க , யுகாதி திருநாளையும் கொண்டாடி மகிழ்வோம். அனைவருக்கும் தெலுங்கு வருடப்பிறப்பு நல்வாழ்த்துக்கள்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?