கரன்சி நோட்டில் கால்பந்து வீரரின் புகைப்படம் ட்விட்டர்
ஸ்போர்ட்ஸ்

மெஸ்ஸி: கரன்சி நோட்டில் கால்பந்து வீரரின் புகைப்படம் - அர்ஜென்டினா மத்திய வங்கி பரிசீலனை?

Keerthanaa R

அர்ஜென்டினா நாட்டின் ரூபாய் நோட்டுகளில் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் புகைப்படத்தை அச்சடிக்க பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

கத்தாரில் நடந்து முடிந்த ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பையில் லியோனல் மெஸ்ஸியின் தலைமையிலான அர்ஜென்டினா அணி வெற்றி வாகை சூடியது.

36 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜென்டினா மூன்றாவது முறையாக உலகக்கோப்பையை வென்றுள்ளது, மேலும் மெஸ்ஸிக்கும் இதுவே முதல் உலக்கோப்பை வெற்றியும்.

இதனை கொண்டாடும் விதமாக அர்ஜென்டினா நாட்டின் கரன்ஸி நோட்டில் மெஸ்ஸியின் புகைப்படத்தை அச்சிடுவது குறித்து அர்ஜென்டினா குடியரசின் மத்திய வங்கி பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்நாட்டின் வணிகப் பத்திரிக்கையான ‘எல் பைனான்சிரோ’ இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

எனினும், மத்திய வங்கி உறுப்பினர்கள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டத்தில் இந்த ஆலோசனையை அவர்கள் வேடிக்கையாக முன்மொழிந்ததாகவும் அந்த செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும், இது குறித்து உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னதாகவே அவர்கள் பேசியிருந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மெஸ்ஸியின் புகைப்படங்கள் அடங்கிய 1000 பெசோ (அர்ஜென்டினா கரன்சி) கரன்சி நோட்டுகளின் எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அந்த கரன்சி நோட்டின் ஒரு பக்கத்தில் மெஸ்ஸியின் புகைப்படமும், மற்றொரு புறத்தில் அணியின் புனைப்பெயரான ’லா ஸ்காலோனேடா’ என்ற பெயரும் அச்சிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னரும் கடந்த 1978 ஆம் ஆண்டு அர்ஜென்டினா உலகக்கோப்பையை வென்றிருந்த போது அதனை அங்கீகரிக்கும் விதமாக அந்நாடு நாணயங்களை வெளியிட்டிருந்தது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?