IndvsPak: மீண்டும் மோதப்போகும் இந்தியா பாகிஸ்தான் - 2023 ஆசியக் கோப்பை அட்டவணை வெளியீடு ட்விட்டர்
ஸ்போர்ட்ஸ்

IndvsPak: மீண்டும் மோதப்போகும் இந்தியா பாகிஸ்தான் - 2023 ஆசியக் கோப்பை அட்டவணை வெளியீடு

Keerthanaa R

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை தொடருக்கான அட்டவணையை வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டும், இந்தியா பாகிஸ்தான் ஆகிய அணிகள் ஒரே குரூப்பில் இடம்பெற்றுள்ளதால், மீண்டும் இவ்விரண்டு அணிகளும் நேருக்கு நேர் மோதும். இதனால் செம்ம உற்சாகத்தில் இருக்கின்றனர் ரசிகர்கள்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமன ஜெய் ஷா தன் ட்விட்டர் பக்கத்தில், 2023 - 2024 ஆம் ஆண்டுகளில் நடைபெறும் போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டிருந்தார்.

அதன்படி, வரும் செப்டம்பர் மாதம் ஆசியக் கோப்பை போட்டிகள் நடைபெறும். மொத்தம் ஆறு அணிகள் இரு பிரிவுகளில் மோதவுள்ளன. குரூப் 1ல் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே குழுவில் இடம்பெற்றுள்ளன. இதனால், மீண்டும் இந்த இரண்டு அணிகளும் மோதவுள்ளதை அடுத்து ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்திய அணி இதுவரை 7 முறை ஆசியக்கோப்பையை வென்றிருக்கிறது. கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆசியக்கோப்பை போட்டியில், இலங்கை பாகிஸ்தானை வீழ்த்தியிருந்தது.

ஆசியக்கோப்பை போட்டிகள் இந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் என பேச்சுக்கள் நிலவிவரும் நிலையில், எங்கு நடைபெறும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை இல்லை.

50 ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?