IPL 2023: ஐந்தாவது கோப்பையை கைப்பற்றிய CSK - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்! twitter
ஸ்போர்ட்ஸ்

IPL 2023: ஐந்தாவது கோப்பையை கைப்பற்றிய CSK - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Keerthanaa R

ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

டாஸ் வென்ற சென்னை அணி பௌலிங் தேர்வு செய்தது. குஜராத் அணி வீரர்கள், கில், சாகா, சாய் சுதர்ஷன் என அனைவரும் பௌண்டரி, சிகர்சர்கள் என விளாச, 20 ஓவரில் 214 ரன் எடுத்தது குஜராத் அணி

சென்னை அணி களமிறங்கியபோது மீண்டும் மழை பிடித்தது.

சுமார் ஒரு மணி நேரம் தற்காலிகமாக தடைப்பட்ட போட்டி மே 30 நள்ளிரவு 12.10 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. டக்வார்த் லீவிஸ் முறைப்படி டார்கெட் 171 ஆக குறைக்கப்பட்டு, ஓவர்களும் 15 ஆக குறைக்கப்பட்டது.

சென்னை அணிக்கு கான்வே ருதுராஜ் ஜோடி நல்ல தொடக்கம் கொடுத்தனர்.

ஆனால் மறுபக்கம் தகுந்த இடைவெளியில் குஜராத் பௌலர்கள் விக்கெட்களை எடுக்க, வெற்றி யார்பக்கம் என்ற விறுவிறுப்பு அதிகரித்தது

நூர் 2 விக்கெகளை வீழ்த்தினார். முக்கியமான தருணத்தில் மோஹித் ஷர்மா ராயுடு மற்றும் தோனியின் விக்கெட்களை வீழ்த்தியதில் சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஹார்ட் பீட் எகிறியது.

விறுவிறுப்பாக சென்ற இறுதிப்போட்டியில், கடைசி பந்தில் 4 ரன்கள் தேவை என்றிருந்த நிலையில், ஜடேஜா பௌண்டரிக்கு பந்தை தட்டிவிட, சென்னை அணி வென்றது.

இது சென்னை அணியின் ஐந்தாவது ஐபிஎல் கோப்பை. இந்த போட்டியுடன் அம்பத்தி ராயுடு ஓய்வு பெறவுள்ளதாக முன்னரே அறிவித்தார்.

போட்டி முடிந்து பேசிய ஜடேஜா, இந்த வெற்றியை தங்களது அணியின் கேப்டன் தோனிக்கு அர்ப்பணிப்பதாக கூறினார்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?