டாஸ் வென்ற பெங்களூரூ அணி, பௌலிங் தேர்ந்தெடுத்துள்ளனர்.
ருதுராஜ் ஜெய்வாட் மற்றும் டேவன் கான்வே ஓபனிங் பேட்ஸ்மேங்களாக களமிறங்கியுள்ளனர்.
பவர் பிளேவின் முதல் பந்தை சிராஜ் வீசினார். சென்னை அணிக்கு ஒரு ரன் கிடைத்தது.
சிராஜ் வீசிய முதல் ஓவரில் சென்னை அணிக்கு 3 ரன்கள் மட்டுமே கிடைத்திருக்கிறது.
இந்த சீசனில் அதிக டாட் பால் வீசிய பௌளராக சிராஜ் திகழ்கிறார். முதல் ஓவரில் 4 டாட் பால்கள் வீசியுள்ளார்.
இரண்டாவது ஓவரின் 3வது பாலில் பவுண்டரி அடித்துள்ளார் கான்வே!
ஸ்கோர் - (10 - 0)
2வது ஓவரின் கடைசி பந்தில் 6 அடித்தார் கான்வே!
சிஎஸ்கே ஓபனரான ரிதுராஜ் கெய்க்வாட் விக்கெட்டை வீழ்த்தினார் முகமது சிராஜ்!
கேர்ச் : பார்னெல்
20 - 1 என்ற கணக்கில் 4வது ஓவரை வீசத்தொடங்க்கினார் பார்னெல்
4வது ஓவர் கடைசி பந்தில் அஜன்கியா ரஹானே கேட்ச் மிஸ் ஆனது.
ஸ்கோர் : 25 - 1
5வது ஓவரை வீசத்தொடங்கினார் வைஷாக். முதல் பந்து பவுண்டரி சென்றது.
கான்வே 20 (13)
5வது ஓவர் மூன்றாவது பந்து, வைஷாக் வீச சிக்ஸ் அடித்தார் ரஹானே!
ரஹானே 14 (9)
7வது ஓவர் 5வது பந்தை ஸ்ட்ரெய்டில் சிக்ஸுக்கு விளாசினார் கான்வே
கான்வே 30(21)
7 வது ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 67 ரன்கள் எடுத்துள்ளது.
ஆர்சிபி அணிக்காக 8வது ஓவரை வீச வந்தார் வனிந்து ஹசரங்கா!
9வது ஓவரை வீசுகிறார் ஹர்ஷல் படேல். 2வது பந்தில் கான்வே மூலம் 6 ரன்கள் கிடைத்திருக்கிறது சிஎஸ்கேவுக்கு.
10வது ஓவரில் அஜன்கியா ரஹானே முதல் பந்தில் 6 அடித்தார். இரண்டாவது பந்தில் ஹசரங்கா கூக்லீயில் போல்ட் ஆனார்.
சிஎஸ்கே அனியின் ஓபனர் டேவன் கான்வே 33 பந்துகளில் 55 ரன்கள் அடித்துள்ளார்.
4 சிக்ஸர்
3 பவுண்டரி
ஹசரங்கா வீசிய 11வது ஓவரில் 4வது பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டார் ஷிவம் தூபே
முதல் பந்தில் பவுண்டரி அடித்தார் கான்வே
கான்வே 69 (38)
துபே 9 (5)
12வது ஓவர் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்தார் கான்வே
கான்வே 72 (40)
ஹர்ஷல் படேல் வீசிய 13வது ஓவர் இரண்டாவது பந்தை 111 மீட்டர் சிக்ஸருக்கு தூக்கினார் துபே!
CSK 132/2
Conway 72 (41)
Dube 19 (11)
14வது ஓவரை வீச வந்திருக்கிறார் சிராஜ்! 2வது பந்தில் 4 அடித்தார் துபே. 5 வது பந்தில் 6 அடித்தார்.
கான்வே மற்றும் துபே அதிரடியாக விளையாடி பார்ட்னர்ஷிப் அரை சதம் அடித்துள்ளனர்.
வைஷாக் வீசும் 15வது ஓவரில் 3வது மற்றும் 5வது பந்தில் சிக்ஸர் மற்றும் 6வது பந்தில் பவுண்டரியும் கிடைத்துள்ளது சென்னை அணிக்கு.
ஷிவம் துபே 40 (20)
கான்வே 79 (43)
ஹர்ஷல் படேல் வீசிய 16வது ஓவர் 4வது பந்தில் கான்வே போல்ட் ஆனார்.
26 பந்துகளுக்கு 52 ரன்கள் அடித்திருந்த ஷிவம் துபே பார்னெல் வீசிய பந்தில் சிராஜிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.
17வது ஓவர் கடைசி பந்தை சிக்ஸருக்கு விளாசினார் மொயின் அலி.
வைஷாக் விஜயகுமாரின் பந்தை ஸ்ட்ரெயிட்டில் சிக்ஸருக்கு விளாசினார் ராயுடு
18வது ஓவர் வைஷாக் பந்தில் கேட்ச் கொடுத்து விக்கெட் இழந்தார் ராயிடு 14 (6)
ராயுடு விக்கெட்டை இழந்ததும் ஜடேஜா களமிறங்கியிருக்கிறார்.
18 ஓவரில் சென்னை 200 ரன்கள் 5 விக்கெட் இழப்புக்கு.
மொயின் அலி 19வது ஓவரில் சிராஜ் வீசிய 2வது பந்தை சிக்ஸருக்கு விளாசினார்.
M.Ali 16 (6)
R. Jadeja 3 (4)
கடைசி ஓவர் இரண்டாவது பந்தை நோபாலாக வீசியுள்ளார் ஹர்ஷல் படேல்
மூன்றாவது பந்தில் மீண்டும் நோபால் போட்டதால் ஹர்ஷல் படேல் வெளியேரியுள்ளார் மேக்ஸ்வெல் பௌலிங் செய்ய வந்துள்ளார்.
ஃப்ரீஹிட் பந்தில் ஜடேஜா சிக்ஸர் அடித்துள்ளார்.
கடைசி ஓவர் 4வது பந்தில் விக்கெட்டை இழந்தார் ரவீந்திர ஜடேஜா!
கடைசி ஓவரின் கடைசி இரண்டு பந்துகளை விளையாட வந்த தோனி ஒரு சிங்கிள் மட்டும் எடுத்திருக்கிறார் தோனி.
கடைசி பந்தில் மொயின் அலி சிங்கிள் எடுத்தார்.
Aakaash வீசிய பந்தில் இன்சைட் எட்ஜில் விக்கெட்டை இழந்தார் விராட்.
டுப்ளெசி அடித்த பந்து கைக்கு வந்த நிலையில், கேட்சை தவறவிட்டார் பௌலர் மஹீஷ் தீக்ஷனா
முடிவுக்கு வந்தது மேக்ஸ்வெல்லின் வெறியாட்டம்!
மொயின் அலியிடம் விக்கெட்டை பறிக்கொடுத்தார் ஆர் சி பி கேப்டன் டுப்ளெசி. கட்சை பிடித்த எம் எஸ் டி
தினேஷ் கார்த்திக் கொடுத்த கேட்சை விட்ட சி எஸ் கே
தினேஷ் கார்த்திக்கின் கேட்சை முந்தைய பந்தில் தவறவிட்ட நிலையில், அதே ஓவரில் அவரை வெளியேற்றினார் துஷார் தேஷ்பாண்டே
தினேஷ் கார்த்திக் வெளியேறிய நிலையில், ஆர் சி பி அணியின் இம்பாக்ட் ப்ளேயர் பிரபுதேசாய் களமிறங்கியுள்ளார்
அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து வரும் ஆர் சி பி. தினேஷ் கார்த்திகை தொடர்ந்து ஷாபாச் அகமத் விக்கெட்டை இழந்தார்
11 பந்துகளில் 30 ரன் தேவையுள்ள நிலையில் பார்னெல் விக்கெட்டை எடுத்துள்ளார் துஷார் தேஷ்பாண்டே
5 பந்துகளில் 19 ரன்கள் தேவை, களத்தில் ஹசரங்கா, பிரபுதேசாய்
கடைசி ஒரு பந்தில் 9 ரன் தேவையாக இருந்த நிலையில், பிரதிரனாவிடம் விக்கெட்டை இழந்தார் பிரபுதேசாய். 8 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூருவை வென்றது சென்னை அணி