CSK vs SRH: இரண்டாவது விக்கெட்டை இழந்த சென்னை அணி! ட்விட்டர்
ஸ்போர்ட்ஸ்

CSK vs SRH: ஜடேஜாவின் சுழல், கான்வேயின் அதிரடியால் வெற்றி பெற்றது சென்னை அணி! - Live

32 பந்துகளில் 25 ரன்கள் தேவையுள்ள நிலையில் இரண்டாவது விக்கெட்டை இழந்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 9 ரன்கள் எடுத்து மார்கண்டேவிடம் ஆட்டமிழந்தார் ரஹானே. தற்போது சென்னை அணியின் இம்பாக்ட் பிளேயர் அமப்அத்தி ராயுடு களமிறங்கியுள்ளார்

Keerthanaa R

டாஸ் வென்ற சென்னை அணி; பௌலிங் தேர்வு !

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது சென்னை அணி. டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பௌலிங்கை தேர்வு செய்துள்ளார்

களத்தில் ப்ரூக் - அபிஷேக்

முதல் ஓவரை சென்னை அணிக்காக ஆகாஷ் சிங் வீச, அபிஷேக் ஷர்மா மற்றும் ஹேரி ப்ரூக் களமிறங்கியுள்ளனர். முதல் ஓவர் முடிவி ஹைதராபாத் ஒரு பவுண்டரியுடன் 6-0

13-0

இரண்டு ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 13 ரன்கள் எடுத்துள்ளனர்

முதல் சிக்ஸர்!

ஆகாஷ் சிங் பௌலிங்கில் முதல் சிக்ஸரை அடித்தார் அபிஷேக் ஷர்மா

கொஞ்சம் அங்க பாரு கண்ணா

விழுந்தது முதல் விக்கெட்!

5வது ஓவரில் ஆகாஷ் சிங் வீசிய 2வது ஓந்தில் ருதுராஜிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் ஹேரி ப்ரூக்

பவர் பிளே முடிவில் ஹைதராபாத் 45 - 1

ஜடேஜாவுக்கு விக்கேட்!

34 ரன்கள் அடித்திருந்த நிலையில், ஜடேஜாவின் பந்தில் வெளியேறினார் அபிஷேக் சர்மா

ஜடேஜா சுழலில் விழுந்த ராகுல்!

21 ரன்கள் அடித்திருந்த ராகுல் திரிபாதி ஜடேஜா பந்தில் ஔட் ஆகியுள்ளார். தற்போது களத்தில் ஹைதராபாத் கேப்டன் எய்டன் மார்க்ரம் மற்றும் ஹென்ரிக் க்ளாசன் இருக்கின்றனர். 12 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 86 - 3 என்ற நிலையில் இருக்கிறது

அடுத்த விக்கெட்

மஹீஷ் தீக்ஷனா வீசிய பந்தை எதிர்கொண்ட ஹைதராபாத் அணி கேப்டன் மார்க்ரம், தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

சீட்டுக்கட்டு போல சரியும் ஹைதராபாத்பேட்டர்கள்!

அடுத்தடுத்து சரிந்து விழும் ஹைதரபாத் அணி வீரர்கள். முதல் பந்தில் மயான்க் அகர்வால் கொடுத்த கட்சை தவறவிட்ட ஜடேஜ, ஐந்தாவது பந்தில் மயான்கை வெளியேற்றினார். பந்தை லாவகமாக பிடித்து ஸ்டம்பிங் செய்தார் தோனி

மேட்ச் பார்க்க வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மனைவி துர்கா ஸ்டாலின், மகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுடனும் சென்னை ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டியை காண வந்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின்

வெளியேறினார் கிளாசென்!

18வது ஓவரில் மஹீஷ் பதிரானா வீசிய பந்தை பவுண்டரிக்கு அனுப்ப நினைத்த கிளாசென், ருதுராஜிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்

சென்னை அணிக்கு 135 ரன் டார்கெட்

20 ஓவர்கள் முடிவில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரன்கள் எடுத்துள்ளது. ரன் என்ற இலக்குடன் இன்னும் சில நிமிடங்க்களில் களமிறங்கவுள்ளது சிஎஸ்கே.

சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்கள் வீழ்த்தினார். பத்திரனா, தீக்ஷனா மற்றும் ஆகாஷ் சிங் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 34 ரன்கள் எடுத்திருந்தார். கடசி பந்தில் வாஷிங்டன் சுந்தரை ரன் அவுட் செய்தார் தோனி!

பவுண்டரி மழை பொழியும் சென்னை கான்வே - ருதுராஜ்!

135 என்ற இலக்கை துரத்தி விளையாடிவரும் சென்னை அணி வீரர்களுக்கு வலுவான தொடக்கத்தை அளித்துள்ளனர் கான்வே மற்றும் ருதுராஜ். 3 ஓவர்கள் முடிவில் 28 ரன்கள் எடுத்துள்ளது சிஎஸ்கே அணி

50 பார்ட்னர்ஷிப்! தட்டித் தூக்கும் ருது - கான்வே

பவர்பிளே முடிவில் எந்த விக்கெட்களையும் இழக்காமல், 60 ரன்கள் எடுத்துள்ளது சென்னை அணி.

விக்கெட் எடுக்குமா ஹைதராபாத் அணி?

8.3 ஓவர்கள் முடிவடைந்துள்ள நிலையில், பொறுமையாக விளையாடிவரும் சென்னை அணி தொடக்க வீரர்கள், போட்டியை கிட்ட தட்ட தங்கள் வசமாக்கியுள்ளனர். விக்கேட் வீழ்த்தி பார்ட்னர்ஷிப்பை உடைத்தாலே ஒழிய, ஹைதராபாத் அணிக்கு வெற்ரி வாய்ப்புகள் பிறக்கும்! என்ன செய்ய போகிறது அணி? காத்திருப்போம்

சேப்பாக்கத்தில் Qualifier 1 மற்றும் எலிமினேட்டர்!

கான்வே 50 !

36 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் தனது அடுத்த அரைசதத்தை கடந்தார் டிவான் கான்வே

ரன் அவுட் ஆன ருதுராஜ்!

கான்வே அடித்த பந்தை பிடிக்க முயற்சித்த உம்ரான் மாலிக் அதனை தவறவிட்டார். எனினும் அவரது கையில் பட்டு, ஸ்டம்ப்பில் பந்து பட்டது. அப்போது கிரீஸை விட்டு ருதுராஜ் வெளியே நின்றுகொண்டிருந்ததால், ரன் அவுட் ஆனார்.

தற்போது ரஹானே களமிறங்கியுள்ளார்

இரண்டாவது விக்கெட்டை இழந்த சென்னை அணி!

32 பந்துகளில் 25 ரன்கள் தேவையுள்ள நிலையில் இரண்டாவது விக்கெட்டை இழந்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 9 ரன்கள் எடுத்து மார்கண்டேவிடம் ஆட்டமிழந்தார் ரஹானே

மூன்றாவது விக்கெட்டை இழந்த சென்னை அணி!

17வது ஓவர் கடைசிப் பந்தில் விக்கெட்டை இழந்தார் அம்பத்தி ராயுடு

சென்னை சூப்பர் கிங்ஸ்  வெற்றி!

சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?