ஐபிஎல் ஏலம் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆஸ்திரேலியா நியூசிலாந்து வீரர்கள் அதிக விலைகொடுத்து வாங்கப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சன் ரைசர்ஸ் ஹைத்ராபாத அணி ஆஸ்திரேலிய கேப்டனான பேட் கம்மின்ஸை 20.5 கோடி ரூபாய்க்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மிட்செல் ஸ்டார்கை 24.75 கோடி ரூபாய்க்கும் எடுத்துள்ளனர்.
ஏலத்தில் டெல்லி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணியினர் டேரில் மிட்செலுக்காக போட்டிப்போட்டுக் கொண்டிருந்தபோது சி.எஸ்.கே கமிட்டியினர் புகுந்து 14 கோடிக்கு தங்கள் அணியின் அதிகபட்ச விலை உள்ள வீர்ராக அவரை எடுத்துள்ளனர்.
டேரில் மிட்செல் போன்ற சிறந்த பேட்ஸ்மேனுக்கு இந்த ஏற்புடைய தொகை என்றாலும், இத்தனை அதிகமான தொகைக்கு தான் ஏலமெடுக்கப்பட்டுள்ளது குறித்து உருக்கமான பதிபை வெளியிட்டுள்ளார் அவர்.
அவரது பதிவில், ""நான் ஏலத்தில் எடுக்கப்பட்ட அன்று என் பெரிய மகளின் 5வது பிறந்தநாள். எவ்வளவு பெரிய தொகைக்கு நான் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளேன் என்பது என் மகளுக்கு புரிய வாய்ப்பில்லை. ஆனால் இந்த தொகை என் குடும்பத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். எனது 2 மகள்களும் அவர்களுக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்வார்கள். எனக்கு அது போதும், அதுமட்டும் போதும். நாம் செய்வது அனைத்தும் நம் மகள்களுக்குத்தானே" என அவர் பதிவில் கூறியிள்ளார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust