நேற்றைய போட்டியில் சன் ரைசஸ் ஹைத்ராபாத் அணியை அபாரமாக வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
இரவு 7:30 மணி முதல் 11 மணிவரை ஆடுகளத்தில் ஆதிக்கம் செலுத்தியது தோனி தலைமையிலான அணி.
7 விக்கெட் வித்தியாசத்தில் கிடைத்த வெற்றியால் சென்னை அணியின் ரன் ரேட்டும் அதிகரித்து பிளே ஆஃப் வாய்ப்புகளும் அதிகரித்திருக்கிறது.
மேட்ச் வெற்றிக்கு பிறகு ரசிகர்கள் ஆராவாரத்துடன் பேசிய தோனி தனது ரிட்டயர்மெண்ட் குறித்துப் பேசியுள்ளார்.
"என்னுடைய கரியரின் கடைசிக்கட்டத்தில் இருக்கிறேன். இன்னும் எவ்வளவு காலம் ஆடுகிறேனோ அவ்வளவு காலமும் மகிழ்ச்சியாக அனுபவித்து ஆடுவதே முக்கியம். எனக்கு பேட்டிங் ஆட பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், அதைப் பற்றி புகார் கூற எதுவும் இல்லை." எனப் பேசினார் தோனி.
மேலும் அவர், "மற்ற வீரர்கள் மிகச்சிறப்பாக ஆடுகிறார்கள். இந்த ரசிகர் கூட்டம் எனக்கும் அணிக்கும் பெரும் அன்பையும் அரவணைப்பையும் கொடுத்திருக்கிறார்கள். ஸ்பின்னர்கள் நல்ல லென்த்தில் பந்துவீசியிருந்தார்கள். வேகப்பந்து வீச்சாளர்களில் குறிப்பாக பதிரனா அருமையாக வீசியிருந்தார்." என அணியைப் பற்றி பேசினார்.
மேலும் அவரது வயது குறித்துப் பேசியபோது, "ஆம். வயதாகிவிட்டதுதான். அதை ஒத்துக்கொள்வதில் எந்த வெட்கமும் இல்லை. வயது ஏற ஏறத்தான் அனுபவமும் ஏறும்" என கெத்தாக பதிலளித்தார்.
பேசும் போது, "எனக்கெல்லாம் பெஸ்ட் கேட்ச் அவார்ட் கொடுக்க மாட்டீங்களா" என நகைச்சுவையாக சொல்லி நடந்தார் தோனி.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust