தோனி Twitter
ஸ்போர்ட்ஸ்

"தோனி 21% கேட்ச்களை மிஸ் செய்தார்" - பாகிஸ்தான் வீரர் சொல்வது என்ன?

எல்லோரும் பிடித்த கேட்ச் எண்ணிக்கையை மட்டும் பார்க்கின்றனர். ஆனால் தவறவிட்ட கேட்ச், தவறவிட்ட ரன் அவுட், தவறவிட்ட ஸ்டெம்பிங் ஆகியவற்றையும் பார்க்க வேண்டும்." என்று பேசினார்.

Antony Ajay R

ரசிகர்களாலும் சக வீரர்களாலும் எப்போதும் பாரட்டப்படுபவர் தோனி. அதிரடியான பேடிங், விரைவாக செயல்படும் கீப்பிங், கூலான கேப்டன்சி என தான் பங்கேற்ற அத்தனையையும் சிறப்பாக செயல்படுத்தியவர் தோனி.

எப்போதும் அலட்டிக்கொள்ளாத தன்மையினால் விளையாட்டைத் தாண்டியும் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நன்மதிப்பு உண்டு. விளையாடுவதை நிறுத்திய பின்னரும் கூட ரசிகர்கள் மனதில் முதலிடத்தில் இருப்பது அவர்தான்.

தோனி குறித்து எதிர்மறையான கருத்துகள் வருவது மிக அரிதுதான். அப்படியான ஒரு கருத்து தான் ரசிகர்களிடம் தற்போது பேசு பொருளாக மாறியிருக்கிறது.

பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீப் தன்னிடம் உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் யார் என்ற கேள்வி வைக்கப்பட்ட போது தென்னாபிரிக்க வீரர் டிகாக் என்று கூறினார்.

தோனி தான் விளையாடிய போது, டெஸ்ட் கிரிக்கெட்டில் 256 கேட்ச்கள் 38 ஸ்டெம்பிங்கள், ஒரு நாள் போட்டியில் 321 கேட்ச்கள் 123 ஸ்டெம்பிங்கள் மற்றும் டி 20 போட்டிகளில் 57 கேட்ச்கள் 34 ஸ்டெம்பிங்கள் பதிவு செய்திருக்கிறார் என்பதைக் குறிப்பிட்டு பேசினார் ரஷீத்.

"ஒரு விக்கெட் கீப்பர் தவறவிட்ட எண்ணிக்கையையும் கருத்தில் கொள்ள வேண்டும். தோனி விளையாடிய காலங்களில் 21 விழுக்காடு கேட்ச்களைத் தவற விட்டிருக்கிறார். இது மிகப் பெரிய எண்ணிக்கையாகும்.

எல்லோரும் பிடித்த கேட்ச் எண்ணிக்கையை பார்க்கின்றனர். ஆனால் தவறவிட்ட கேட்ச், தவறவிட்ட ரன் அவுட், தவறவிட்ட ஸ்டெம்பிங் ஆகியவற்றையும் பார்க்க வேண்டும்." என்று ரஷீத் பேசினார்.

அத்துடன், "கடந்த 15 ஆண்டுகளில் டிகாக் சிறந்த கீப்பர் - பேட்ஸ்மேனாக உள்ளார். மூன்று வகையான போட்டிகளிலும் அவர் சிறந்து விளங்குகிறார். அவர் சிறந்த ஃபினிஷர் இல்லை ஆனால் சிறந்த கீப்பர் - பேட்ஸ்மேன். அதற்கு முன்னர் குமார் சங்ககாரா, மார்க் பவுச்சர் சிறந்த கீப்பராக செயல்பட்டனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?