2022 உலகக்கோப்பையை கைப்பற்றியது அர்ஜென்டினா. பிரான்ஸுக்கு எதிராக நடந்த போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வென்றது.
இது உலகளவில் உள்ள அனைத்து கால்பந்து ரசிகர்களையும் சந்தோஷத்தில் திக்குமுக்காட செய்தது.
காரணம் தற்காலத்து கால்பந்து ஜாம்பவான்களில் ஒருவராக கருதப்படும் லியோனல் மெஸ்ஸி தன் முதல் உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளார்.
இந்த உலகக்கோப்பை போட்டியில் இரண்டு கோல்களை அடித்தார் மெஸ்ஸி, மேலும் மூன்று கோல்களை அடிக்க உதவி செய்தார். மெஸ்ஸிக்கு கோல்டன் பால் பதக்கம் வழங்கப்பட்டது.
பிரான்ஸ் வீரர் எம்பாப்பே ஹாட்ரிக் கோல் அடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. அவர் கோல்டன் ஷூ விருதை வென்றார்.
இந்நிலையில், உலகக்கோப்பையை கையில் பெறும்போது மெஸ்ஸிக்கு ஒரு கருப்பு நிற அங்கி அணிவிக்கப்பட்டது. இந்த ஆடையை கத்தார் எமிர் தமிம் பின் ஹமாத் அல் தானி மெஸ்ஸிக்கு வழங்கினார்.
இந்த கருப்பு ரோபின் (robe) சிறப்பு என்ன? இது ஏன் மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டது?
மெஸ்ஸி அணிந்திருந்த அந்த கருப்பு ஆடையின் பெயர் பிஷ்ட். இதனை அவர் தன் அணியின் ஜெர்சியின் மேல் அணிந்திருந்தார். இந்த பிஷ்ட்டை அணிந்துக்கொண்டு தான் மெஸ்ஸி உலகக்கோப்பையை பெற்றார். மேலும் இதனுடனே சில புகைப்படங்களையும் அவர் எடுத்துக்கொண்டார்.
பிஷ்ட் என்பது, அரபு நாடுகளில் சிறப்பு நிகழ்வுகளின் போது அணியப்படும் ஒரு பிரத்தியேக உடையாகும். இந்த அங்கியை அரசக் குடும்பத்தை சேர்ந்தவர்களும், மதத் தலைவர்களும் மட்டுமே அணிவார்கள்.
மெஸ்ஸி ஒரு தலைசிறந்த கால்பந்து வீரர் என்பதாலும், அவர் கத்தாரில் கால்பந்து உலகக்கோப்பையை வென்றதை பெருமைமிகு தருணமாக கத்தார் கருதுவதாலும், இந்த பிளாக் ரோப் அவருக்கு வழங்கப்பட்டது எனக் கூறுகிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தளம்.
இந்த பிஷ்ட்டை மெஸ்ஸிக்கு கத்தார் எமிர் வழங்கும்போது உடன் ஃபிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்ஷியோவும் இருந்தார்.
பிஷ்ட்டை அணிந்துக்கொண்டு கோப்பையை வாங்கிக்கொண்ட பின், சிறிது நேரம் இந்த பிஷ்ட்டுடன் புகைப்படங்களை எடுத்துக்கொண்டார் மெஸ்ஸி. பின்னர் தனது அணியின் சீருடையில் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்.
மேலும் தற்போது அர்ஜென்டினாவின் ஜெர்ஸியில் மூன்று நட்சத்திரங்கள் அச்சிடப்பட்டிருக்கின்றன. மூன்று உலகக்கோப்பைகளை அந்த அணி வென்றதனை குறிக்கும் விதமாக கூடுதலாக ஒரு நட்சத்திரம் ஜெர்ஸியில் சேர்க்கப்பட்டுள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust